தமிழ் சினிமாவில் பேச்சுமொழியும் இலக்கியமும் கீதாபென்னெட் பக்கம்
|
|
இலங்கையில் அமைதி ! |
|
- பிரகாசம்|ஜூலை 2003| |
|
|
|
அழிந்து போன வடக்கு - கிழக்குப் பகுதியைப் புனரமைப்போம்!
''கல்வி தான் இலங்ககைத் தமிழரின் மூலதனம். இவர்களின் வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் காரணமான கல்வி, கடந்த 20 - 30 வருடங்களாக நடந்த போரினால் சீர்குலைந்து கிடக்கிறது. இலங்கைக் கல்வி முறையில் ஏற்படுத்தப்பட்ட 'தரப்படுத்தல்' என்ற பாகுபாடே தனி நாட்டுக்குக் கோரிக்கைக்கு வழி அமைத்தது எனலாம். கடந்த 20 வருடங்களின் கல்வி முறையில் ஏற்பட்ட மாறுதல்களும், போரில் இளைஞரின் பங்கும், கல்வி வசதிகளின் சீர்குலைவிற்கு முக்கிய காரணிகள் எனலாம். கடந்த காலப் போர், அடிப்படை மனிதத் தேவைகளுடன் கல்வியையும் சீரழித்தது. புத்தியால் சீவனம் செய்யும் பலரின் உயிர் நாடியான கல்வியின் சீரழிவு மறு புனரமைக்கப்பட வேண்டும. இந்தத் தேவையின் அடிப்படையில் தோன்றியது தான் வடக்கு-கிழக்கு கல்வி.
நிதி
தற்போது நிலவும் போர் நிறுத்தமும் அமைதிக்கான பேச்சு வார்த்தையும் உருவாக்கி இந்தச் சூழ்நிலைப் புலம் பெயர்ந்து வாழும் நாம் செவ்வனே பயன்படுத்த வேண்டும். எங்களில் பலர் அனுபவித்த கல்வி வசதிகளை இன்றைய எதிர்காலத் தலைமுறைகளுக்கு வழங்கும் தலையாய கடமை எங்கள் கையில்தான் இருக்கிறது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த பலர் இதை உணர்ந்தனர். வெளிநாட்டில் வசிக்கும் ஒவ்வொரு தமிழரும் வடக்கு-கிழக்கின் கல்வி வசதியை மேம்படுத்த உதவ வேண்டும்'', என்று வடக்கு-கிழக்கு கல்வி நிதியின் ஸ்தாபகர்களில் ஒருவரான டாக்டர் மூர்த்தி குறிப்பிட்டார்.
இந்த நிதியின் வரைவிலக்கணம் மிகவும் இலகுவானது. $ 100.000 டாலர்கள் (அமெரிக்க) சேர்க்க வேண்டும். இது இலங்கை ரூபாயில் 10 மில்லியன். இதை இலங்கையில் மூலதனம் செய்தால், வருடத்திற்கு 1 மில்லியன் ரூபாயை வருமானப் பெறலாம். இந்த வருமானத்தை மட்டும் கல்வி வசதி புனரமைப்பிற்குப் பாவிக்கலாம். காலப் போக்கில் மூலதனமும் வளர வருமானமும் வளரும். எந்தக் கால கட்டத்திலும் மூலதனம் பேணிக்காக்கப்படும். 'சிறுதுளி பெரு வெள்ளம்', அமெரிக்காவிலும் கனடாவிலும் மாத்திரம் 300,000ற்கும் அதிகமான இலங்கைத் தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 20,000 பேர் குறைந்தபட்சம் $5 யை அன்பளிப்பு செய்தால் $ 100,000 இலகுவாகச் சேர்ந்து விடும். தற்போதைய சூழ்நிலையில் இப்படியான நிதி சேர்க்கும் முயற்சிகளும், வடக்கு-கிழக்கு புனரமைக்கும் திட்டங்களும், நிரந்தர அமைதிக்கு அணை போடும் என்பதில் ஐயமில்லை.
உங்கள் பள்ளிப் பருவ நினைவுகளை அசை போடுங்கள். எங்கள் சமுதாயத்தின் அழிந்து போன அடிப்படைக் கல்வித் தேவைகளை, உங்கள் சிறியதோ, பெரியதோ அன்பளிப்பால் நிறைவு செய்யுங்கள். வெளிநாடடில் வசிக்கும் நாங்கள் எங்கள் குழந்தைகளின் கல்வியில் எவ்வளவு அக்கறை செலுத்துகிறோம். இதனை நினைவுபடுத்தி எங்கள் நாட்டின் இளம் சமுதாயத்தின் கல்வி வளர்ச்சிக்கு உதவும் இந்த சரித்திரக் கடமையில் பங்காளியாவீர்!
தமிழர் புனர்வாழ்வுக் கழகம்
இலங்கையில் பல காலமாகப் பணிபுரியும் ''தமிழர் புனர்வாழ்வுக் கழகம்'' இந்த நிதியையும், திட்டத்தையும் வழி நடத்த இணங்கி இருக்கிறார்கள். தமிழர் புனர் வாழ்வுக் கழகம் 1985ம் ஆண்டு தென் இந்தியாவிற்கு இடம் பெயர்ந்த தமிழ் அகதிகளால் தோற்றுவிக்கப்பட்டது. 1985ல் இலங்கையின் வடக்கு-கிழக்கில் நடந்த முனைப்பான போரினால் பாதிக்கப்பட்டோருக்கு, வடக்கில் யாழ்ப்பாணத்தில் தன் காரியாலயம் ஸ்தாபிக்கப்பட்டுப் பல வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. 1995ல் யாழ் குடா நாட்டில் நடந்த உக்கிரமான போரினால் பெரிய அளவிலான மக்கள் குடா நாட்டில் இருந்து கிளிநொச்சிக்கும் வன்னிக்கும் இடம் பெயர்ந்தனர். இதன் காரணமாக யாழ் காரியாலயம் வன்னிப் பரப்பில் அமைந்த 'முழங்காவில்' என்ற இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. தமிழர் புனர்வாழ்வுக் கழம் சர்வதேச ரீதியில் 6 நாடுகளில் நிலைகொண்டு இருக்கிறது. இலங்கை - இந்தியாவிற்கு அடுத்ததாக சுவிட்ஸர்லாந்தில் உள்ள ''சூரிச்'' என்ற இடத்தில் 1985ல் அமைக்கப்பட்டுப் பின்னர் இலண்டனிலும் ஸ்தாபிக்கப்பட்டன. அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு அமைய ஸ்தாபிக்கப்பட்ட இந்தத் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் உலகளாவிய வேலைத்திட்டங்களை வழி நடத்தும் பொறுப்பை ஆஸ்திரேலியாவின் அமைப்பிடம் கையளித்திருக்றிது. இலங்கையின் வடக்கு-கிழக்கு தமிழர்களின் புனர்வாழ்வுத் திட்டங்களை இத்தனை காலமாகச் செவ்வனே செய்யும் இவ்வமைப்பு, நிதி நிர்வாகத்திலும் திட்டங்களைச் செயல்படுத்தும் முறைகளிலும் தவறாது பணிபுரிவது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
வடக்கு-கிழக்கு கல்வி நிதித் திட்டத்தின் முதல் பணியாகக் கடந்த மே மாதம் 26ஆம் தேதி தென்கலி·போர்னியாவில் 'லங்காஸ்ரர்' என்ற இடத்தில் ஓர் ஆரம்ப சந்திப்பை டாக்டர் மூர்த்தியும் அவரைச் சார்ந்த செயற்குழுவும் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் உரையாற்றிய டாக்டர் மூர்த்தி, இலங்கையின் வடக்கு-கிழக்கு கல்வி நிதிக்கு ஆதரவு தந்து, சீரழிந்து போகும் கல்வி வசதிகளை புனரமைப்பு செய்யும் இப்பணியில் பங்களிக்குமாறு அழைப்பு விடுத்தார். இத்திட்டத்தின் ஸ்தாபகர்களும் அன்பர்களும் நிதி அன்பளிப்பு செய்து தொடக்கி வைத்தனர்.
இத்திட்டத்தின் முதல் நடவடிக்கையாக, அமைப்பாளர்களில் ஒருவரான திரு. பேரின்பநாதனின் முயற்சியில் இந்த ஜூலை மாதம் 12ஆம் தேதி தென்கலி·போர்னியாவின் 'Van Nuys' என்னும் இடத்தில் ஒரு நடன இசை மாலை ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. 'பால்ரிமோர்' அளித்த நடன தாரகை அனிதா சிவராமனுடன், சென்னையின் நடனமேதை ஸ்ரீகாந்த் நடனங்கள் வழங்கவும், கனடாவின் இளம் இசை இயக்குநர் கபிலேஸ்வர், லாஸ் ஏஞ்சல்ஸ் புகழ் 'சுருதிலயா' குழுவினருடன் இணைந்து இசை முழங்குவார்கள். இவ்விழாவிற்கு ஆதரவு நல்கி இப்பணிக்கு உதவுவமாறு உங்களை வேண்டுகிறோம்.
இலங்கையின் வடக்கு-கிழக்கு மக்களின் எதிர்காலத்திலும், இலங்கையின் அமைதியிலும் கரிசனை கொண்ட அத்தனை மக்களும் இப்பணியில் உதவுமாறு செயற்குழு அழைப்பு விடுக்கிறது. உங்கள் தனியான அன்பளிப்போடு நின்று விடாமல் குழுவாகவோ, அன்றி ஸ்தாபனங்களாகவோ, நிதி திரட்டும் திட்டங்களை வகுத்து, வடக்கு-கிழக்கு மக்களின் துயர் துடைக்க முன்வருவீர்!
நிதியளிக்க விரும்புபவர்கள், கீழ்க்கண்ட பெயருக்குக் காசோலையாக வழங்கலாம். |
|
TRO- (TAMILS REHABILITATION ORGANIZATION) Please write "For North East Education Fund" at the lower left corner of the Check.
உங்கள் காசோலையை
TRO, 517, OLD TOWN ROAD, CUMBERLAND, MD-21502
என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள். நீங்கள் வழங்கும் நிதிக்கு வரிச்சலுகை உண்டு.
For more information please visit :http://www.trousa.org
பிரகாசம் |
|
|
More
தமிழ் சினிமாவில் பேச்சுமொழியும் இலக்கியமும் கீதாபென்னெட் பக்கம்
|
|
|
|
|
|
|