கார்ன் ஸ்பெஷல் [CORN SPECIAL] கார்ன் புலாவ் கார்ன் வடை கார்ன் ம·பின்ஸ் கருவேப்பிலை
|
|
|
தேவையான பொருட்கள் :
சோளமாவு - 1 கிண்ணம் சர்க்கரை - 1 1/2 கிண்ணம் நெய் - 6 மேஜைக்கரண்டி குளிர்ந்த தண்ணீர் - 2 கிண்ணம் பால் - 1 கிண்ணம் ஏலக்காய் பொடி - 1/2 தேக்கரண்டி வறுத்துப்பொடி செய்த முந்திரிப்பருப்பு - சிறிதளவு மஞ்சள் அல்லது கேசரிநிற பவுடர் - 1 சிட்டிகை |
|
செய்முறை
சர்க்கரையைத் தண்ணீரில் கரைத்துக் கொள்ளுங்கள். அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி, அத்துடன் தேவையான நிற பவுடரைக் கலந்து கம்பிப் பதம் வரும்வரை கொதிக்கவிடுங்கள். குளிர்ந்த தண்ணீரில் சோளமாவைக் கரைத்துக் கொண்டு, அதை சர்க்கரைப் பாகுடன் கலந்து கொள்ளுங்கள்.
மிதமான தீயில் இதைக் கிண்டிவிட்டுக் கொண்டே இருந்தால் இதன் பதம் இறுகிக் கொண்டே வரும். அவ்வப்போது கொஞ்சம் நெய் விட்டுக் கிண்டிக் கொண்டிருங்கள். இதனால் பாத்திரத்தின் அடியில் இந்தக் கலவை ஒட்டாமல் இருக்கும். இந்தக் கலவை பாத்திரத்தில் ஒட்டாமல் சுருண்டு வரும்போது, அதாவது ஊற்றுகிற நெய் கலவையில் ஒட்டாமல் தனியாகத் திரண்டு வந்தால் ஹல்வா பதத்தைத் தொட்டுவிட்டோம் என்று அர்த்தம்.
இதனுடன் ஏலக்காய்ப் பொடி கலந்து கொள்ளுங்கள். இதை அப்படியே நெய் தடவிய ஒரு பரந்த தட்டில் கொட்டிக் கொள்ளுங்கள். இதன் மீது வறுத்துப் பொடிப்பொடியாக்கி வைத்திருக்கும் முந்திரிப் பரு¨ப்பை வைத்து அழகுப்படுத்துங்கள்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
கார்ன் ஸ்பெஷல் [CORN SPECIAL] கார்ன் புலாவ் கார்ன் வடை கார்ன் ம·பின்ஸ் கருவேப்பிலை
|
|
|
|
|
|
|