|
செப்டம்பர் 2007: ஜோக்ஸ் |
|
- டி. எஸ். பத்மநாபன், ஹெர்கூலிஸ் சுந்தரம், சுபத்ரா|செப்டம்பர் 2007| |
|
|
|
வக்கீல்: நீங்கள் ஒரு நேர்மையான, புத்திசாலி மனிதர்...
சாட்சி: நான்கூட சத்தியப் பிரமாணத்தில் இல்லையென்றால் உங்களைப் பற்றி அப்படித்தான் சொல்லுவேன்
டி.எஸ். பத்மநாபன்
******
வக்கீல்: அப்புறம், எழுந்தபிறகு உங்கள் கணவர் உங்களிடம் என்ன கேட்டார்?
சாட்சி: இப்போது நான் எங்கிருக்கிறேன் ராதா என்று...
வக்கீல்: அதற்கு ஏன் நீங்கள் கோபப்படவேண்டும்?
சாட்சி: என் பெயர் மாலதி
டி.எஸ். பத்மநாபன்
****** |
|
இப்போ ஓக்லண்டிலே வந்த பூமி அதிர்ச்சிக்கு ரஜினி சார்தான் காரணமா? என்னடா உளர்றே?
ஆமாண்டா. அவருதான் சிவாஜி படத்துலே 'பேரைக் கேட்டாலே சும்மா அதிருதுல்லே'ன்னு சொல்லிக்கிட்டே இருந்தாரு.
ஹெர்கூலிஸ் சுந்தரம்
******
போலீஸ்காரர்: இவன் வாழைப் பழக் குலையைத் திருடும்போது கையும் களவுமா பிடிச்சு குலையோடு கொண்டு வந்திருக்கேன்.
இன்ஸ்பெக்டர்: சரி, சரி! தோலை உரிச்சு உள்ளே தள்ளுவோம் வா.
சுபத்ரா, நியூ ஜெர்சி |
|
|
|
|
|
|
|