Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2001 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சினிமா சினிமா | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | அமெரிக்க அனுபவம் | சிறுகதை | கலி காலம் | பொது | சமயம்
Tamil Unicode / English Search
பொது
சுகமான காத்திருத்தலும் ஒரு கப் காபியும்.....
ஓர் எச்சரிக்கை! - அபிகெய்ல் ஆடம்ஸ்
மீண்டும் காட்டிலிருந்து நாட்டுக்கு!
ஜூலை மாதம் நாலாம் நாள்
- |ஜூலை 2001|
Share:
Click Here Enlargeஇந்து தர்மத்தைப் பாரதத்தில் நிலை நாட்டவே இதுவரை எல்லா அவதாரங்களும் நிகழ்ந்தன. ஆனால் சுவாமி விவேகானந்தர் மட்டும் அதற்கு விதிவிலக்கு. சுவாமிஜியோ இந்தியாவில் இந்து தர்மத்தை நிலைநாட்டியது மட்டுமின்றி, உலக முழுவதிலும் இந்து தர்மத் தை நிலைநாட்டினார். இந்து மதத்தை வெறும் மதமாக அல்லாமல் அதை ஒரு மார்க்கமாக மக்களிடையே பரப்புவதற்கு சுவாமிஜி முயன் றார். சுவாமிஜி கற்றறிந்த பண்டிதராகவும் ஆன்மீக குருவாகவும் இருந்து அனைத்து மக்களின் மீதும் தன்னுடைய நேசக் கரத்தைத் தவழவிட்டார். இந்து தர்மத்தைப் பரப்பிய சுவாமிஜி மற்ற மதங்களையும் அதன் தாத் பரியங்களையும் மதித்தவர்.

அனைத்துப் பண்பாடு மற்றும் கலாசாரத்தின் மீதும் மதிப்புக் கொண்டிருந்தார். இந்தியப் பாரம்பரியத்தைத் தூக்கிப் பிடிக்கிற அதே நேரத்தில், மற்றைய பண்பாடுகளையும் மதிக் கக்கற்றுக் கொண்டிருந்தார். விவேகானந்தரின் மத அடிப்படையிலான சகிப்புத் தன்மையை அவர் சிகாகோவில் ஆற்றிய உரைகள் ஒவ்வொன்றும் எடுத்துக் காட்டுகின்றன. பின்வரும் சம்பவம் சுவாமிஜியின் உயர்குணத் துக்குச் சான்று பகருவனவாக அமைந்திருக் கிறது.

ஜூலை மாதம் மூன்றாம் தேதி. சுவாமிஜி ரகசியமாக ஒரு தையல்காரனிடம் சென்றார். அமெரிக்கக் கொடி ஒன்றினைத் தைத்துத் தருமாறு கேட்டுக் கொண்டார்.

அந்தத் தையல்காரர் ஏதோ தம்மால் முடிந்த அளவுக்கு, பட்டைகளும் நட்சத் திரமும் கொண்ட அமெரிக்கக் கொடி ஒன்றைத் தயாரித்தார். படகு ஒன்றில் கொடியேற்றம் நடைபெற்றது. மறுநாள் காலை அந்தப் படகில் தமது அமெரிக்கச் சீடர்களுக்குத் தேநீர் விருந்து நடத்தி அவர்களை ஆனந்தக் கடலில் மூழ்கடித்தார் சுவாமிஜி.

ஜூலை நான்காம் தேதி அமெரிக்க சுதந்திர தினமல்லவா? இதை ஒட்டித்தான் அமெரிக்கச் சீடர்களுக்கு விருந்துபசாரம்.

இவ்வளவு நினைவாக, தங்களிடமே சொல் லாமல் சுவாமிஜி தங்களது தாய் நாட்டை நினைவூட்டியதைக் கண்டு அந்தச் சீடர்கள் உள்ளம் உருகிப் போனார்கள்.
அமெரிக்கச் சுதந்திர தினத்தைக் குறித்து ஓர் அருமையான ஆங்கிலக் கவிதையையும் சுவாமிஜி இயற்றிப் பாடினார். அமெரிக்க அரசியல் சுதந்திரத்தை மட்டும் அவர் மனதில் கொண்டிருக்கவில்லை. சம்சாரத்தி லிருந்து விடுதலை பெற்று வீடுபேறு பெறு வதையே உள்ளுறை பொருளாகப் பாடினார்.

சரியாக இது நடந்து நான்காண்டுகளுக்குப் பின் அதே ஜூலை நாலாம் நாள்தான் சுவாமி ஜி உடலிலிருந்து விடுதலை பெற்றார்!

(1898 - இல் அல்மோராவிலிருந்து சுவாமிஜியும் அன்பர்களும் காச்மீரத்தை அடைந்து ஸ்ரீநகரத்தில் வசித்த போது இந்தச் சம்பவம் நடந்தது)

-ரா.கணபதி எழுதிய அறிவுக்கனலே அருட் புனலே! எனும் நூலிலிருந்து
More

சுகமான காத்திருத்தலும் ஒரு கப் காபியும்.....
ஓர் எச்சரிக்கை! - அபிகெய்ல் ஆடம்ஸ்
மீண்டும் காட்டிலிருந்து நாட்டுக்கு!
Share: 




© Copyright 2020 Tamilonline