காய்கறி வறுவல் சீரகம் சாதம் வெஜிடபிள் சால்னா அப்பளம் சாதம் நவரத்ன குருமா காலி·பிளவர் மஞ்சூரியன் புதினா புலவு
|
|
|
தேவையான பொருட்கள்
துருவிய கோஸ் - 2 கோப்பை பாசுமதி அரிசி - 1 கோப்பை தேங்காய்த் துருவல் - 1/4 கோப்பை இஞ்சி - ஒரு சிறிய துண்டு பூண்டு - 4 பல் உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி பச்சை மிளகாய் - 4 கறிவேப்பிலை - 2 ஆர்க்கு உப்பு - தேவையான அளவு எண்ணெய் - 2 தேக்கரண்டி முந்திரிப்பருப்பு - 10 கொத்தமல்லித் தழை - 1/4 கோப்பை (பொடியாக நறுக்கியது) |
|
செய்முறை
தேங்காய்த்துருவல், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
அரிசியைக் கழுவி நன்கு சுத்தம் செய்து இரண்டு கோப்பை தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து வடித்துத் தனியே வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் அரை தேக்கரண்டி எண்ணெ யைச் சூடாக்கி முந்திரிப்பருப்புகளை பொன்னிறமாக வறுத்து எடுத்து தனியே வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் மீதமுள்ள எண்ணெயை ஊற்றிச் சூடாக்கி உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை , துருவிய கோஸ் போட்டு நன்கு பச்சை வாசனை போகும் வரை சில நிமிடங்கள் வதக்கவும்.
அரைத்து வைத்துள்ள விழுதை அத்துடன் சேர்த்து வதக்கவும். வடித்து வைத்துள்ள சாதத்தை அத்துடன் சேர்க்கவும்.
சாதத்தை கோஸ் கலவையுடன் நன்கு கலக்கவும். வறுத்த முந்திரிப்பருப்பு, நறுக்கிய கொத்த மல்லித் தழை தூவிப் பரிமாறவும்.
சரஸ்வதி தியாகராஜன், அட்லாண்டா |
|
|
More
காய்கறி வறுவல் சீரகம் சாதம் வெஜிடபிள் சால்னா அப்பளம் சாதம் நவரத்ன குருமா காலி·பிளவர் மஞ்சூரியன் புதினா புலவு
|
|
|
|
|
|
|