ராதா கல்யாண உற்சவம் 'அம்மா' மாதா அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம் 'சங்கீத சாகரா' டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா வாசிங்டன் வட்டாரத்தில் திருக்குறள் கருத்தரங்கம் நிருத்யாஞ்சலி தியாகராஜரின் பஞ்சரத்தினக் கீர்த்தனை நாட்டிய நாடகம் மிசெளரி தமிழ் சங்கம்: பட்டிமன்றம் ஃப்ரீமாண்டில் சிவாவிஷ்ணு ஆலய கும்பாபிஷேகம்
|
|
|
திருமதி ரமா தியாகராஜன் நடத்தும் சற்குரு வித்யாலயாவின் ஆண்டு விழா, ராகப் பிரவாகம் என்ற தலைப்பில், ஜூன் மாதம் நாலாம் தேதியன்று குபெர்டினோவில் நடைபெற்றது. ஆண்டு விழா நிகழ்ச்சி, தீக்ஷிதரின் சண்முகப்பிரியா ராக ஓசித்தி விநாயகம்ஔ கீர்த்தனையுடன் ஆரம்பித்தது. இதைத் தொடர்ந்து மாணவ மாணவியர், ராக பிரவாகம் தலைப்புக்கு இணங்க பல ராகங்களில் இன்னிசை மழை பொழிந்தனர்.
பயிற்சிக்குத் தக்கபடி ரமாவிடம் படிக்கும் சிறுவர் சிறுமியரும், பெரியவர்களும், கீதம், வர்ணம், மற்றும் கீர்த்தனைகள் பாடினார்கள். சங்கராபரணத்திலும் ஹிந்தோளத்திலும் செய்த ராக ஆலாபனை அருமையாக இருந்தது.
ரமாவின் மாணவி, திருமதி பிரியா நாகராஜன், வந்தோரை வரவேற்று, நிகழ்ச்சியை தொகுத்து அளித்தார்.
பாடகர்களுக்குத் துணையாக ஆதித்யா நரேஷ் வயலினும், அக்ஷய் நரேஷ் புல்லாங்குழலும், பாலாஜி கிரிதரனும், கணபதிராம் விஸ்வனாதனும் மிருதங்கங்கமும் வாசித்து நிகழ்ச்சிக்கு மெருகூட்டினர். |
|
நிகழ்ச்சி அரங்கில் செவிக்கு உணவு கிடைத்தது. பல குழந்தைகளின் பெற்றோர்கள் கூடி, நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும், அரங்கத்துக்கு அருகில் இருந்த சாப்பாட்டு அறையில் வயிற்றுக்கும் அமுது அளித்தனர்.
ரமாவும் பல மாணவியரும் பாடிய வந்தே மாதரம் பாடலுடன் நிகழ்ச்சி இனிதே முடிந்தது. ஆண்டு விழாவில் பங்குபற்றியவர்களுக்கும், பக்கவாத்தியம் வாசித்தவர்களுக்கும், சபையோருக்கும், மற்றும் நிகழ்ச்சியை நடத்த உதவிய ஆதரவாளர்களுக்கும் நன்றியுரை கூறி, ரமா ஆண்டு விழாவை முடித்துக் கொண்டார்.
இந்த ஆண்டு விழாவில் கிடைத்த நன்கொடையை சின்மயா மிஷன் கட்டிட நிதிக்கு ரமா அளித்துள்ளார்.
நளாயினி குணநாயகம் |
|
|
More
ராதா கல்யாண உற்சவம் 'அம்மா' மாதா அமிர்தானந்தமயி அமெரிக்க விஜயம் 'சங்கீத சாகரா' டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா வாசிங்டன் வட்டாரத்தில் திருக்குறள் கருத்தரங்கம் நிருத்யாஞ்சலி தியாகராஜரின் பஞ்சரத்தினக் கீர்த்தனை நாட்டிய நாடகம் மிசெளரி தமிழ் சங்கம்: பட்டிமன்றம் ஃப்ரீமாண்டில் சிவாவிஷ்ணு ஆலய கும்பாபிஷேகம்
|
|
|
|
|
|
|