வெஜிடபிள் பிரியாணி தேங்காய் பால் சாதம் வெஜிடபுள் கட்லெட் ஆலு மட்டர் வெண்டைக்காய் மசாலா மலபார் முட்டை குருமா
|
|
தக்காளி பிரைட் ரைஸ் |
|
- |மே 2001| |
|
|
|
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி 1 கப் தக்காளி பெரியது 2 தேங்காய் பால் 1 கப் முந்திரி பருப்பு 12 வெங்காயம் 2 கேரட் 3 பட்டாணி 1/2 கப் எண்ணெய் 3 மேஜைக்கரண்டி பட்டை, லவங்கம், ஏலக்காய் சிறிதளவு அரைப்பதற்கு தேவையானவை பச்சை மிளகாய் 3 உலர்ந்த மிளகாய் 4 இஞ்சி சிறிய துண்டு பூண்டு 4 பல் |
|
செய்முறை
அரிசியை நன்கு கழுவி தண்ணீரை வடிகட்டி பத்து நிமிடம் ஊற விடவும். அரிசியை உதிரியாக வேக வைத்து தனியே வைக்கவும்.
வெங்காயம், தக்காளி , கேரட்டை நறுக்கி வைத்துக் கொள்ளவும். கேரட், பட்டாணியை வேக வைத்து தனியே வைக்கவும்.
வாணலியில் எண்ணெயை சூடாக்கி பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு வதக்கவும். அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலா, நறுக்கிய, வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
தக்காளி, கேரட், பட்டாணி, உப்பு சேர்த்து வதக்கவும். தேங்காய்ப்பால் சேர்த்து கலவையை கொதிக்க விடவும். கலவை கெட்டியானவுடன் வேக வைத்த சாதத்துடன் நன்கு கலக்கவும். நறுக்கிய கொத்தமல்லி தழை, வறுத்த முந்திரிப்பருப்பு தூவி பரிமாறவும். |
|
|
More
வெஜிடபிள் பிரியாணி தேங்காய் பால் சாதம் வெஜிடபுள் கட்லெட் ஆலு மட்டர் வெண்டைக்காய் மசாலா மலபார் முட்டை குருமா
|
|
|
|
|
|
|