புத்தாண்டு சிறப்பு மாயாபஜார் வாழைப்பூ வடை பாசிப்பருப்பு பாயாசம் வெண்பொங்கல் பலாக்காய் பொறியல் வேப்பம் பூ ரசம் வேப்பம் பூ பச்சடி
|
|
மிளகு வடை |
|
- |ஏப்ரல் 2001| |
|
|
|
தேவையான பொருட்கள்
உளுந்தம் பருப்பு - 500 கிராம் மிளகு - 100 கிராம் உப்பு - தேவைக்கேற்ப பெருங்காயம் - சிறிய துண்டு சீரகம் - 10 கிராம் எண்ணெய் - 500 கிராம் |
|
செய்முறை
உளுந்தம் பருப்பை அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
சீரகம், மிளகை நன்கு மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொள்ளவும்.
பெருங்காயத்தை எண்ணெயில் பொரித்தெடுத்து மிக்ஸியில் பொடித்து வைத்துக் கொள்ளவும்.
ஊறிய பருப்பை அரைத்து கொள்ளவும் (மைய அரைக்கக் கூடாது )
அரைத்த பருப்பு மாவுடன் பொடித்து வைத்துள்ள உப்பு, பெருங்காயம், சீரகம், மிளகுத்தூள்களை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
அவற்றை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து மெல்லிய துணியில் தட்டி வைத்துக் கொள்ளவும்.(துணியை சிறிது தண்ணீரில் நனைத்துக் கொள்ளவும்)
வாணலியில் எண்ணெயை சூடாக்கி கொள்ளவும்.
தட்டி வைத்துள்ளவைகளை மெதுவாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். |
|
|
More
புத்தாண்டு சிறப்பு மாயாபஜார் வாழைப்பூ வடை பாசிப்பருப்பு பாயாசம் வெண்பொங்கல் பலாக்காய் பொறியல் வேப்பம் பூ ரசம் வேப்பம் பூ பச்சடி
|
|
|
|
|
|
|