உருளைக் கிழங்கு சப்பாத்தி அவல் பிட்டு கோதுமை இடியாப்பம் கோதுமை அதிரசம்
|
|
உருளைக்கிழங்கு வகைகள் |
|
- நளாயினி, காஞ்சனா|மார்ச் 2001| |
|
|
|
அனைவரும் விரும்பிச் சாப்பிடும் ஒரு வகையான கிழங்கு உண்டென்றால் அது உருளைக்கிழங்குதான். உடலுக்கு ஆகாது, கொலஸ்ட்ரால் இப்படி வேண்டுமானால் தவிர்த்து விடுவார்களே தவிர, மற்றபடி வாழைப்பழமும் குரங்கும் கதைதான். அப்படியான கிழங்கை அடிப்படைப் பொருளாக வைத்து அல்வா மற்றும் சப்பாத்தி தயாரிக்கலாமா....
உருளைக்கிழங்கு அல்வா
தேவையான பொருள்கள்
உருளைக்கிழங்கு - 200 கிராம் சர்க்கரை - 200 கிராம் நெய் - 4 கரண்டி ஏலக்காய் - 4 பாதாம்பருப்பு - 10 சாரைப்பருப்பு - 10 கிராம் |
|
செய்முறை
உருளைக் கிழங்கை வேகவைத்துத் தோலை உரித்து, அதைக் கரண்டியால் நன்றாக மசித்துக் கொள்ளவும்.
சர்க்கரையைப் பாகு காய்ச்சி, மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை அதில் போட்டுக் கிளறி விடவும்.
சிறிது நேரம் கழித்து நெய்யை அதில் விட்டுக் கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
கையில் ஒட்டாதபடி பக்குவமானதும் ஏலக்காய்களைப் பொடிசெய்து போட்டு, பாதாம் பருப்பை தோல் நீக்கி, பொடியாக நறுக்கிப் போடவும்
சாரைப் பருப்பை வறுத்து அதில் போட்டுக் கிளறி விட்டு சூடு ஆறிய பின் ஒரு தட்டில் கொட்டிப் பரப்பித் துண்டங்களாகச் செய்து கொள்ளவும்.
வித்தியாசமான சுவையுடன் இருக்கும் பக்குவம் இது.
நளாயினி - காஞ்சனா |
|
|
More
உருளைக் கிழங்கு சப்பாத்தி அவல் பிட்டு கோதுமை இடியாப்பம் கோதுமை அதிரசம்
|
|
|
|
|
|
|