பரப்பரபாக முடிந்த முதல் கூட்டத்தொடர்! மீண்டும் பர்னாலா! மீண்டும் விலையேற்றம்!
|
|
வருமானவரி வழக்கில் ஜெயலலிதா! |
|
- கேடிஸ்ரீ|ஜூலை 2006| |
|
|
|
முன்னால் முதல்வரும், அ.தி.மு.க பொதுச்செயலருமான ஜெயலலிதாவும் அவரது தோழி சசிகலாவும் வருமான வரித்துறையிடம் வருமானக் கணக்கை தாக்கல் செய்யாதைத் தொடர்ந்து அவர்மீது வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இவ்வழக்கு சென்னை எழும்பூரில் உள்ள கூடுதல் தலைமைப் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
முன்னதாக கடந்த 1996ஆம் ஆண்டிற்கான வருமான கணக்கை வருமான வரித்துறையிடம் ஜெயலலிதா தாக்கல் செய்யாமல் இருந்தார். இதனையடுத்து வருமானவரித்துறை அவருக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. பின்னர் அதைத்தொடர்ந்து வழக்கு ஒன்றையும் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா இருவர் மீதும் தொடரப்பட்டது.
ஆனால் இவ்வழக்கு சம்மந்தமாக ஜெயலலிதாவும், சசிகலாவும் நீதிமன்றத்திற்கு நேரில் வராமல் காலம் தாழ்த்தி வழக்கு விசாரணையை காலம் தாழ்த்தி வருவதாக கருதி உச்சநீதிமன்றமும் கண்டனம் செய்தது. மேலும் இவ்வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் எழும்பூர் நீதிமன்றத்திற்கு கடந்த மாதம் உத்தரவிட்டது.
இதற்கிடையில் இவ்வழக்கை விசாரித்து வரும் மாஜிஸ்திரேட் வழக்கு விசாரணையை முடிக்க சிறிது கால அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் ஒன்றை எழுதினார். அவரது கடிதத்தையே மனுவாக ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம் அந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது. அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் சென்னையில் நடைப்பெறும் வழக்கு விசாரணையை விரைவில் முடித்துக் கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது. |
|
இதனைத் தொடர்ந்து இவ்வழக்கு விசாரணை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைப்பெறத் தொடங்கியது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீது விசாரணை நடத்த போதிய முகாந்திரம் உள்ளது என்றும் இதுவரை இருவரும் வருமான வரி கட்டவில்லை என்றும் கூறி, வழக்கிலிருந்து தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கூறி ஜெயலலிதாவால் தாக்கப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தார்.
கேடிஸ்ரீ |
|
|
More
பரப்பரபாக முடிந்த முதல் கூட்டத்தொடர்! மீண்டும் பர்னாலா! மீண்டும் விலையேற்றம்!
|
|
|
|
|
|
|