அஞ்சல் தலைகள் அஞ்சல் தலை(வர்)கள் IIT Madras - கூடு திரும்பும் பறவைகள்? கோலாலம்பூரில் தமிழிணைய மாநாடு கீதாபென்னெட் பக்கம்
|
|
|
செப்டம்பர் 11, 2001 - அமெரிக்க சரித்திரத்தில் கருப்பு நாளாக விடிந்தது. கயமையும், கோழைத்தனமும் ஒருங்கே நிறைந்த தீவிர வாதிகள், இந்நாட்டின் பெருமையை சுக்கு நூறாக்கி, பெருந்தன்மையைப் கேலிக் குரியதாக ஆக்கிவிட்டார்கள்.
நியூயார்க் நகரின் வர்த்தக மையத்தின் நடுவே வானத் தை முட்டுமளவு உயர்ந்து, அமெரிக்க பொருளாதார வளப்பத்தின் உருவகமாக, வெளிப்பாடாக இருந்த உலக வர்த்தக மையத்தின் இரு 110 மாடி கட்டிடங்களும், சுற்று முள்ள சில கட்டிடங்களும், அமெரிக்க மக்களின் கண் முன்னமே இடிந்து கான்கீரீட், இரும்பு குப்பைக் குன்று களானது உலகமக்கள் அனவரையும் அதிர்ச் சிக்கு உள்ளாக்கியது.
செவ்வாய்க்கும், சிவப்புக்கும் மிகுந்த தொடர்பு உண்டு போலும். தீவிரவாதத்தின், வாதிகளின் உச்ச வெறியாடலை, வானளவு உயர்ந்த தீயின் செந்நாக்குகள் உணர்த்தின.! எத்தனை உயிர்ச்சேதங்கள்,..! எவ்வளவு பொருள் சேதங்கள்...! உலக வர்த்தகத்தின் முதுகெலும்பையே ஒடித்ததுமல்லாமல், முதிர்ந்த மக்களாட்சியின் உயரிய எடுத்துக் காட்டாக இருக்கும், இத்தேசத் தையே 'கண்ணீர் தேசம்' ஆக்கிவிட்டது, இக்கொடிய நிகழ்ச்சி.
ஹாலிவுட் இயக்குநர்களின் கம்யூட்டர் கிராபிக்ஸ் கூட கற்பனை செய்து பார்க்க முடியாத, பரிமாணத்தில் அரங்கேறிய இந்த பயங்கரம், அதன் பின்னால் இயங்கிய பண பலம், திட்ட அமைப்பு இயந்திரம் எல்லாம், உலகின் தலைசிறந்த உளவு நிறுவனங்களான, FBI, CIA இவற்றையே கதிகலங்க அடித்திருக் கின்றன. நமது புராணங்களின் நினைவு வராமலில்லை..! எவ்வளவு பெரிய சக்திக்கும், ஒரிரு பலவீனங்கள் இல்லாமல் இல்லை. எதிரிகளுக்கு, இப்பலவீனங்களே மிகப்பெரிய பலமாக அமைந்து விடும்.
இதை 'யானைக்கும் அடி சறுக்கும்' என்று விடுவதற்கும் இல்லை. யானைக்கு சறுக்கும் அடியின் விளைவு யானைக்கு தீம்பாயும் முடியலாம். மிகவும், எச்சரிக்கையோடு எழுந்தி ருக்க வில்லையானால், சேதாரம் நிச்சயம்.
தீவிரவாதிகளுக்கு, அமெரிக்காவின், அத்தியா வசிய போக்குவரத்து, இயந்திரமான விமானப் போக்குவரத்தின் பாதுகாப்பில் இருந்த ஓட்டைகளும், அவர்களுக்கு சாதகமான சூழ் நிலைகளும் அத்துப்படியாக இருந்திருக்கிறது. திட்ட அமைப்பு, செயல்படுத்திய முறை, தேர்ந் தெடுத்த விமானங்கள், ஜப்பானியரின் 'காமி காஸி'த்தனமான தற்கொலைப்படைத் தேர்வு, இவற்றையெல்லாம் பார்க்கும் போது, இது பலவருடங்களாக உருவாக்கப்பட்டுச் செயல் படுத்தப்பட்ட திட்டமாகத்தான் தோன்றுகிறது.
மிகுந்த தூரம் செல்லகூடிய அளவுக்கு, எரிபொருளோடு கூடிய, சிவில் விமானங்களைப் பறக்கும் வெடிகுண்டுகளாகப் பயன்படுத்தி உள்ளார்கள் இத்தீவிரவாதிகள். அதிவேகத்தில் வந்த அவை மோதி வெடித்ததில் எழுந்த 800 டிகிரி வெப்பம், அவ்விருகட்டிடங்களின், இரும்பு ஆதாரத்தையே உருக்கி விட்டபோது, அவை, இரண்டுமணி நேரத்தில் அடியோடு சாய்ந்ததில் வியப்பே இல்லை.
CNN-ன் வெப் ஸைட்டிற்கு செல்லுபவர்கள், அன்று காலை எட்டு மணிக்கு ஆரம்பித்த அக்கோர நிகழ்ச்சிகளின் கால அட்டவணை யைப் பார்க்கலாம்.
அதிர்ச்சி, ஆத்திரம், அளவிடமுடியாத சோகம், நெருங்கியவர்களை இழந்திருப்போமோ என்கிற தவிப்பு, அமெரிக்க அரசின் தற்காலிக இயலாமையின் மேல் வருத்தம், முகம் தெரியாத தீவிரவாதிகளின் மேல் வெறுப்பு- என்று, அமெரிக்கா அடுத்த ஒருவாரத்திற்கு, செயலி ழந்தது.
அமெரிக்க அரசாங்க இயந்திரம் முடுக்கி விடப்பட்ட வேகத்தைப் பற்றி ஆரம்பத்தில் சந்தேகம் இருந்தாலும், அரசாங்கத்தின் செயல்பாடுகளும், ப்ரஸிடென்ட், புஷ், மற்றும் அவரது காபினட்டின் முக்கியஸ்தர்களான, உதவி ஜனாதிபதி டிக் சேனி, காலின் பவல், டொனால்ட் ரம்ஸ்·பெல்ட், கூட்டுமுயற்சியில், நிலைமை பதறிச் சிதையாமல், கட்டுக்குள் அடங்கியதைப் பாராட்டியே தீரவேண்டும். மிகுந்த குழப்பம் மற்றும் நெருக்கடி நிலைமை இவற்றுக்கிடையே, நிலைகுலையாத, செயலற்று போகாத, உடனடி செயல்பாடுகள், கட்டாயம் பாராட்ட வேண்டியவை.
அமெரிக்காவின், இரு பெரும் கட்சித் தலைவர்களும், பிரமுகர்களும், கட்சி வேறுபாடுகளை மறந்து, ஒன்றாக நின்றது, தேசத்தின் நலனை முன்னிறுத்தும், அவர்கள் முதிர்ச்சியினை காட்டியது.
நியூயார்க் நகரத் தந்தை ருடால்·ப் ஜுலியானி, மற்றும், நியூயார்க் மாநிலத்தின் கவர்னர் ஜார்ஜ் படாகி, இவர்கள், இருவரும், இடிபாடுகளுக்கு இடையே இருந்து, தீ அணைப்புப் பணியாளர்களையும், மற்றபடி, இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபடுபவர் களையும் அருகிலேயிருந்து ஊக்கப்படுத்திக் கொண்டும், உதவி செய்து கொண்டும் இருந்ததைப் பார்க்கையில், விளம்பர அரசிய லுக்கு அப்பாற்பட்ட இவர்களின் மனிதாபி மானத்தை பாராட்டாமல் இருக்கமுடியாது. |
|
இந்த பயங்கரத்திற்கு பதில் சொல்ல வேண்டிய, மீண்டும் இதுபோன்ற வெறியாட் டங்கள் தொடராமல் இருக்க, தடுக்கவேண்டிய பொறுப்பு, அமெரிக்காவுக்கு மட்டுமல்ல, மனிதகுலத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் உண்டு. அமெரிக்க அரசாங்கத்தினால், தற்போதைய பயங்கர வாதத்தின் பின்புலப் பிரதிநிதியாக அடையாளம் காட்டப்பட்டுள்ள ஒசாமா பின் லேடன் என்ற தனி மனிதனை வேட்டையாடுவதோடு இது நின்றுவிடக்கூடாது.
(டி.வி. சேனல்கள் செய்திருக்கும் ஒசாமா நாம பாராயணத்தினை நினைத்தால் கோபம்தான் வருகிறது. ஒரு காலிப்பயலின் பேரை உலகத் தின் மூலை முடுக்குகளிலெல்லாம் எதிரொலிக்க வைத்து, எல்லோரையும் ஒசாமா நினைவாகப் பண்ணியது தேவையில்லாத விஷயம்!)
அமெரிக்காவும், தனது வசதிக்கேற்ப வெளிநாட்டுக் கொள்கைகளை மாற்றிக் கொள்ளும் பச்சோந்தியாக இல்லாமால், தனக்கு நேரும் போது வலிப்பது போல், பிறருக்கு நேரும் போதும், பயங்கரவாதத்தை இப்போது காட்டும் நெஞ்சுரத்தோடு கண்டிக்கு மானால், அழிக்கும் உறுதியோடு செயல்படு மானால், 'உலகத் தலைமை' என்னும் பெருமைக் குச் சொந்தம் கொண்டாடலாம்.
"பயங்கரவாதத்தை பயிர் செய்பவர்களை மட்டுமல்ல, அவற்றுக்கு நிலம் அளிப்பவர் களையும், உரம் போடுபவர்களையும், தனி மனிதனாக இருந்தாலும் சரி, இயக்கமானாலும் சரி, நாடாக இருந்தாலும் சரி, விட்டுவைக்காமல், கருவறுப்போம்" என்பது... பேசும் போது இலக்கணமாகப் பேசிவிட்டு, பாட்டு எழுதும் போது கோட்டைவிட்ட கதையாகிவிடக் கூடாது.
அரசியல் பகடையென்று, அசடர்களோடு உறவு கொண்டு ஆதாய அரசியல் நடத்தினால், ஆபத்தாகத்தான் முடியும். இது அமெரிக்கா வுக்குப் புரியாததல்ல. ஒசாமாவின் தீவிர வாத்திற்கு, பிள்ளையார் சுழி போட்டதே அமெரிக்காதானே..! எதிரியின் எதிரி நண்பன் என்பது எப்போதும் உதவாது. 'பனிப்போர்' காலத்தில் ரஷியாவுக்கு எதிராக, தாலிபான், ஒசாமா கும்பலை வளர்த்து விட்டமாதிரி, பாகிஸ்தானுடைய உறவும் ஆகிவிடக்கூடாது.. அதுவும் தீட்டிய மரத்திலேயே கூர்மையைப் பார்த்த கதையை அனுபவித்த பிறகு!
மதம் என்ற பெயரால், அதர்மம் செய்கிற யாராக இருந்தாலும் சரி, அவர்களை இரும்புக்கரத்தோடு அடக்கக்கூடிய மனதிண்¨ மயும், வலிமையும், அதிலே நேர்மையோடு செயல்படுகிற வகையும் இருந்தால், அமெரிக்கா வால் தீவிரவாதத்தினை உள்ளூரிலும் சரி, உலக அளவிலும் சரி,..தடுத்து நிறுத்த முடியும்!
செப்டம்பர் 11, 2001க்குப் பிறகு, அமெரிக்க வாழ்க்கை மாறித்தான் போய்விட்டது. இது மறக்கக்கூடிய சோகமல்ல..! நினைவில் இருத்தி, வருங்கால வன்முறைகளுக்காக விழிப்புடன் இருக்கவேண்டிய பாடம்..!
அஷோக் சுப்பிரமணியம் |
|
|
More
அஞ்சல் தலைகள் அஞ்சல் தலை(வர்)கள் IIT Madras - கூடு திரும்பும் பறவைகள்? கோலாலம்பூரில் தமிழிணைய மாநாடு கீதாபென்னெட் பக்கம்
|
|
|
|
|
|
|
|