தொகையல் வகைகள் கேரட் தொகையல் கொத்தமல்லி தொகையல் குடைமிளகாய் தொகையல் வெங்காயம் - தக்காளி தொகையல்
|
|
|
தேவையான பொருள்கள்
பசுமையான கீரை - 1 கட்டு எள் - 1/3 கோப்பை வேர்க்கடலை - 1/8 கோப்பை பச்சை மிளகாய் - 4 உப்பு - தேவையான அளவு புளிச் சாறு - 1 தேக்கரண்டி வெங்காயம் - 1 (சிறு துண்டுகளாக நறுக்கவும்) எண்ணெய் - 2 தேக்கரண்டி |
|
செய்முறை
கீரையை நன்கு கழுவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்..
சிறிதளவு நீரில் கீரையை வேக வைத்துக் கொள்ளுங்கள்.
தண்ணீரை வடித்து அதை அரைப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
எள் மற்றும் வேர்க்கடலையை எண்ணெய் விடாமல் அப்படியே வறுத்துக் கொள்ளுங்கள்.
வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சிறிதளவு எண்ணெய் விட்டு வதக்கிக் கொள்ளவும்.
வேகவைத்த கீரை, வறுத்த எள், வேர்க் கடலை, புளிச் சாறு, வதக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கலக்கிக் கொள்ளவும். சுவையான கீரை தொகையல் தயார்.
தொகையல் வகைகள் அடுத்த இதழிலும் தொடரும்
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
தொகையல் வகைகள் கேரட் தொகையல் கொத்தமல்லி தொகையல் குடைமிளகாய் தொகையல் வெங்காயம் - தக்காளி தொகையல்
|
|
|
|
|
|
|