சுவாமி சுகபோதானந்தாவின் வளைகுடாப் பயணம் வளைகுடாவில் ஒய்.ஜீ. மகேந்திரனின் இரட்டை மகிழ்ச்சி ஸ்ருதி ஸ்வர லயாவின் கோடை பிரயாணம் (Summer Tour) அன்னப்பூர்ணா, ஷாலினி அரங்கேற்றம் அரங்கேற்றம் - கல்பா விசுவநாதன் டெலாவர் தமிழ்ச் சங்கத்தின் திருமறைப் பாடல் கச்சேரி!
|
|
|
பயிற்சி, திறமை, பொறுமை மூன்றும் பொருந்தியுள்ள சகோதரர்கள் மூவரின் கச்சேரியை அனுபவித்து ரசித்தேன். நிகில் நாராயணன், புல்லாங்குழல் வித்வான் என். ரமணியின் சிஷ்யர் நிர்மல் நாராயணன் உமையாள்புரம் சிவராமனின் சிஷ்யர் சன்தீப் நாராயணன், சஞ்சய் சுப்ரமண்யத்தின் சிஷ்யர் இவர்களுடன் ஒத்துழைக்க டெல்லி சுந்தர ராஜனிடம் வயலின் பயின்ற அருண்ராம மூர்த்தி. சன்தீப் நாராயணனின் அநாவசியமான சஞ்சரிப்புகள் இருப்பத்தி ஒன்றே வயதில் இத்தனை திறமையா என்று பிரமிக்கும்படி இருந்தது.
கானடா ராக வர்ணத்தில் தொடங்கி, சலநாட்டை கிருதியில் ஆரம்பித்து, ஹரிகாம் போதியை பிரதான ராகமாக பாடி, ஏழு ராகங்களில் பல்லவியைப் பாடிய விதத்தில் கச்சேரி டெம்போ குறையாமல் ஒரு கை தேர்ந்த வித்வானின் திறமையுடன் மிளிர்ந்தது. கல்யாணியையும் கீரவாணியையும் பல்லவிக் காகத் தொடர்ந்து, அபூர்வ ராகங்களாக வலஜ்,சந்திர ஜோதி, மதுவந்தி ராகத்தில் அழகாக முடித்து, அதன் பின் பாகேஸ்ரீயில் ஸ்வாதித் திருநாள் கீர்த்தனையைத் தொடர்ந்து பாடியது, சிறந்த கச்சேரிக்கு எடுத்துக் காட்டாக இருந்தது. |
|
இந்த மூன்று சகோதர்களையும் இவ்வளவு தூரம் ஊக்குவித்து, பயிற்சி பெறச் செய்து பிரகாசிக்கும்படி செய்தவர் இவர்களின் தாயார் சுபா நாராயணன். அவர் மிகுந்த பாராட்டுக்குரியவர்.
இந்திரா பார்த்தசாரதி |
|
|
More