சுவாமி சுகபோதானந்தாவின் வளைகுடாப் பயணம் வளைகுடாவில் ஒய்.ஜீ. மகேந்திரனின் இரட்டை மகிழ்ச்சி ஸ்ருதி ஸ்வர லயாவின் கோடை பிரயாணம் (Summer Tour) அன்னப்பூர்ணா, ஷாலினி அரங்கேற்றம் அரங்கேற்றம் - கல்பா விசுவநாதன் சன்தீப் நாராயணனின் அநாயாசமான சஞ்சரிப்புகள்
|
|
டெலாவர் தமிழ்ச் சங்கத்தின் திருமறைப் பாடல் கச்சேரி! |
|
- சண்முகம் .பி|ஆகஸ்டு 2006| |
|
|
|
நியூயார்க் நகரில், புகழ்பெற்ற மேன்நாட்டன் சென்டரில் ஜூலை 1-3, 2006ல் நடைபெற்ற 'தமிழர் திருவிழா 2006' மாநாட்டில் வடஅமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் இயங்கும் தமிழ்ச்சங்கங்கள், தங்கள் பங்களிப் புக்களாக இயல், இசை, நடனம், நாடகம் என்ற பல்வேறு பரிமாணங்களில் கலை நிகழ்ச்சிகளை வழங்கி தமிழுக்கும், தமிழ்ச் சான்றோர்கள் மற்றும் அவர்தம் படைப்புக் களுக்கும் அமெரிக்க மண்ணில் மேலும் பெருமை சேர்த்தனர். எல்லா கலைநிகழ்ச்சிகளும் மிகுந்த கவனத்துடன் - பக்தி சிரத்தை யுடன் தயாரிக்கப்பட்டு, அனைவரும் ஆர்வத்துடன் கண்டுகளிக்கும் வகையில் மிகச் சிறப்பாக அரங்கேற்றப்பட்டன. சபையோரின் தொடர் கரவொலி யையும் உற்சாகத்துடன் கூடிய ஆதரவையும் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்படி கலைநிகழ்ச்சிகளில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று, டெலாவர் தமிழ்ச் சங்கத்தினர் வழங்கிய 7லிருந்து 20 வயதுக்குட்பட்ட இளம் கலைஞர்கள் அரங்கேற்றிய 'தமிழ் மறைப்பாடல் கச்சேரி'.
சாதனா இராஜமூர்த்தி - ஆனந்தி இராஜ மூர்த்தி சகோதரிகள் இருவரும், தேவாரம், திருவாசகம், சிவபுராணம், திருமந்திரம், திருப்புகழ், திருவருட்பா, ஆண்டாள் பாசுரம் என்ற எண்ணற்ற திருமறைப் படைப்புகளி லிருந்து பாடல்களை, தங்கள் இனிய குரலில் பக்திச் சுவைசொட்ட சொட்ட, இறையுணர் வுடன் பாடி சபையோரைப் பக்திப் பரவசத்தில் ஆழ்த்தினர்.
சாதனா - ஆனந்தி இருவரும் அமெரிக்க மண்ணிலேயே பிறந்தவர்கள் என்ற போதும், தம் பெற்றோர் இராஜமூர்த்தி - வசந்தி ஆகியோரிடமே வீட்டில் தமிழ் பேச, எழுதக் கற்றுக் கொண்டவர்கள். ஒவ்வொரு பாடலைப் பாடத் தொடங்கும் முன்னர், பாடலின் ஆசிரியர், எந்தத் திருமறையிலிருந்து எந்தப் பாடல் போன்ற விவரங்களைத் தெளி வாக அறிவித்து, சிறந்த தமிழ் உச்சரிப்புகளுடன் பாடல்களை அவற்றின் பொருள் உணர்ந்து, இனிய ராக, பாவத்துடன் பாடியது மிகவும் பாராட் டத்தக்க அம்சங்களாகும். |
|
பக்கவாத்தியமாக, மிருதங்கம் வாசித்த அர்ஜுன் லோகேஸ்வரன், வயலின் வாசித்த சத்யசொரூபி கனக சபாபதி, வீணைகள் வாசித்த அஸ்வினி கணேசலிங்கம், யெஸஸ்வினி சிட்டம்பள்ளி ஆகியோரும், சாதனா - ஆனந்தி இருவரின் இனிய வாயப்பாட்டுக்கு இணையாக தத்தம் இசைக் கருவிகளில் தங்கள் இசை ஞானத்தைத் திறம்பட வெளிப்படுத்தி, திருமறைப் பாடல்களுக்கு இனிய இசை சேர்த்து, கச்சேரியை மேலும் களைகட்டச் செய்தது மிகவும் அற்புதம்!
கச்சேரியில் முன்னிலை/அங்கம் வகித்த பிரபல மிருதங்க வித்வான் நியூயாரக் பாலச்சந்திரன் சில தாளங்கள் பற்றி அவையோருக்கு விளக்கிக்கூற, அந்த தாளங்களை தன் மிருதங்கத்தில் தனி ஆவர்த்தனம் செய்து காட்டிய சிறுவர் அர்ஜுன் லோகேஸ்வரனின் திறமை (அபாரம்!) பாராட்டுதற்குரியது!.
ஆயிரக்கணக்கானோர் நிறைந்த மாபெரும் சபையில் தம் திறமைகளை மிகவும் கலை நயத்துடன் வெளிப்படுத்தி, தமக்கு இசை போதித்த குருமார்களுக்கு நற்பெயரையும் பெருமையையும் சேர்த்திருக்கும் இந்த 'வளரும் இளம் கலைஞர்கள்' மூலம் திருமூலர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர், அருணகிரிநாதர், இராமலிங்க வள்ளலார், ஆண்டாள், பாரதியார் போன்ற எண்ணற்ற தமிழ்ச் சான்றோர்களை, அவர் தம் படைப்புகளை அமெரிக்க மண்ணில் நினைவு கூற வைத்த டெலாவர் தமிழ்ச் சங்கத்தின் முயற்சி மிகவும் பாராட்டத்தக்க ஒன்று!
இந்தக் கச்சேரிக்குப் பிறகு, தமது தனி நிகழ்ச்சியாக சிறப்பு சொற்பொழிவாற்றிய முனைவர் அறிவொளி அவர்கள், தமிழ் நாட்டிலேயே தமிழ்த்திருமறைப் பாடல்களைப் பாட கேட்க அரிதாக உள்ள இக் காலகட்டத்தில், அமெரிக்காவில், இவ்வளவு இளம் வயதில் தமிழ்ச் சிறுவர் சிறுமியர் பக்தி சிரத்தையுடன், பேரார்வத்துடன் திருமறைப் பாடல்களைப் பாடுவதைப் பார்க்க - கேட்க மிகவும் வியப்பாகவும் பெருமகிழ்வளிப்ப தாகவும் குறிப்பிட்டார்.
பி. சண்முகம் |
|
|
More
சுவாமி சுகபோதானந்தாவின் வளைகுடாப் பயணம் வளைகுடாவில் ஒய்.ஜீ. மகேந்திரனின் இரட்டை மகிழ்ச்சி ஸ்ருதி ஸ்வர லயாவின் கோடை பிரயாணம் (Summer Tour) அன்னப்பூர்ணா, ஷாலினி அரங்கேற்றம் அரங்கேற்றம் - கல்பா விசுவநாதன் சன்தீப் நாராயணனின் அநாயாசமான சஞ்சரிப்புகள்
|
|
|
|
|
|
|