கடலைபருப்பு போளி பால் போளி பருப்புவடை (ஆமைவடை) வெண்பொங்கல் சர்க்கரை பொங்கல் ஊளுந்து வடை பொங்கல் குழம்பு மாட்டு பொங்கலுக்கு செய்ய வேண்டியவைகள் (கணு) தயிர்சாதம்
|
|
|
தேவையான பொருட்கள்
வேகவைத்த சாதம் - 2 கிண்ணம் முற்றிய தேங்காய் - 1/2 கிண்ணம் உளுத்தம் பருப்பு - ஒரு டேபிள் ஸ்பூன் சிகப்பு மிளகாய் - 4 முந்திரி பருப்பு - 10 கடுகு - 1 டேபிள் ஸ்பூன் பெருங்காயம் - 1 சிட்டிகை தேங்காய் எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன் அல்லது சமையல் எண்ணெய் கருவேப்பிலை - தேவையான அளவு எண்ணெய் - தேவையான அளவு உப்பு - தேவையான அளவு |
|
செய்முறை
முதலில் வேகவைத்த சாதத்தை ஒரு தட்டில் கொட்டி ஆற விடவும்.
சிகப்பு மிளகாயை துண்டுதுண்டாக நறுக்கி கொள்ளவும். வாணலியில் எண்ணெய்யை விட்டு, காய்ந்தவுடன் கடுகை போடவும். கடுகு வெடித்தவுடன் மிளகாய், பெருங்காயம், உளுத்தம் பருப்பு , முந்திரி பருப்பு ஆகியவற்றை போட்டு பொன்நிறமாக மாறும் வரைநன்றாக வறுக்கவும். பிறகு அதில் தேங்காய் எண்ணெய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு அது பிரவுன் கலர் வரும் வரை வறுக்கவும்.
கடைசியில் வறுத்த பொருட்களை ஆற வைத்த சாதத்தில் தேவையான அளவு உப்பை போட்டு நன்றாக கலக்கவும்.
தேங்காய் சாதம் செய்வதற்கு எளிமையானது. ருசிகரமானது.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
கடலைபருப்பு போளி பால் போளி பருப்புவடை (ஆமைவடை) வெண்பொங்கல் சர்க்கரை பொங்கல் ஊளுந்து வடை பொங்கல் குழம்பு மாட்டு பொங்கலுக்கு செய்ய வேண்டியவைகள் (கணு) தயிர்சாதம்
|
|
|
|
|
|
|