கடலைபருப்பு போளி பருப்புவடை (ஆமைவடை) வெண்பொங்கல் சர்க்கரை பொங்கல் ஊளுந்து வடை பொங்கல் குழம்பு மாட்டு பொங்கலுக்கு செய்ய வேண்டியவைகள் (கணு) தேங்காய் சாதம் தயிர்சாதம்
|
|
|
தேவையான பொருள்கள்
ரவா - 1/2 கிண்ணம் மைதா - 1/2 கிண்ணம் சர்க்கரை - 1/2 கிண்ணம் ஏலக்காய் பொடி - 1/2 டேபிள் ஸ்பூன் பால் - 1 லிட்டர் |
|
செய்முறை
முதலில் ரவா, மைதா ஆகிய இரண்டையும் பூரிக்கு கலந்து கொள்வது போல் மிருதுவாக பிசைந்து கொள்ளவும்.
அடிகனமான பாத்திரத்தில் பால், சர்க்கரை, ஏலக்காய்பொடி ஆகியவற்றை போட்டு கொதிக்க வைக்கவும். கேஸை சிம்மில் வைத்துக் கொள்ளவும். கலந்து வைத்த மாவில் பூரியை செய்து கொள்ளவும். ஒவ்வொரு பூரியும் செய்து முடித்த பின், எண்ணெய் வடிந்த பிறகு ஒவ்வொன்ற¨யும் கொதிக்கும் பாலில்சிறிது நேரம் போட்டு பிறகு அதை எடுத்து ஒரு டிரேயில் போட்டுக் கொள்ளவும். கடைசியாக மீதமுள்ள காய்ச்சிய பாலை டிரேயில் உள்ள பூரியில் விடவும். அதிகநேரம் பாலில் பூரியை வைத்திருந்தால் மிகவும் ருசியாக இருக்கும்.
பால்போளி இப்போது ரெடி. இது மிகவும் சுவையாகவும், இனிப்பாகவும் இருக்கும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
கடலைபருப்பு போளி பருப்புவடை (ஆமைவடை) வெண்பொங்கல் சர்க்கரை பொங்கல் ஊளுந்து வடை பொங்கல் குழம்பு மாட்டு பொங்கலுக்கு செய்ய வேண்டியவைகள் (கணு) தேங்காய் சாதம் தயிர்சாதம்
|
|
|
|
|
|
|