சுகம் தரும் சுண்டக்காய் சுண்டைக்காய் பொரிச்ச கூட்டு சுண்டைக்காய் வற்றல் மிளகு குழம்பு சுண்டைக்காய் வற்றல் மோர்க்குழம்பு சுண்டைக்காய் வற்றல் பொடி சுண்டைக்காய் வற்றல் தொகையல் சுண்டைக்காய் வற்றல் தயிர்பச்சடி மொகல் பரோட்டா பன்னீர் கிரேவி
|
|
|
தேவையான பொருட்கள்
சுண்டைக்காய் வற்றல் - 1/2 ஆழாக்கு வேப்பம் பூ - 1 ஆழாக்கு காய்ந்த கருவேப்பிலை - 1 ஆழாக்கு துவரம் பருப்பு - 1/4 ஆழாக்கு உளுத்தம் பருப்பு - 1 கரண்டி மிளகு - 1 கரண்டி சீரகம் - 1 கரண்டி பெருங்காயம் - பெரியகட்டி உப்பு - தேவையான அளவு புளி - சிறிய எலுமிச்சை அளவு |
|
செய்முறை
சுண்டைக்காய் வற்றல், வேப்பம்பூ, கருவேப் பிலை, பெருங்காயம், பருப்பு வகைகள், மிளகு, சீரகம் ஆகியவற்றை தனித்தனியே எண்ணெய் விடாமல் வாணலியில் வறுக்கவும்.
புளியை ஈரப்பசை போகுமளவு வறுக்கவும்.
உப்பையும் 'படபட'வென்று வெடிக்கும் வரை வறுக்கவும்.
பெருங்காயம், பருப்பு வகைகள், உப்பு, புளி இவைகளை மிக்ஸியில் முதலில் பொடி செய்யவும். பிறகு சுண்டைக்காய், வேப்பம்பூ, கருவேப்பிலை இவற்றை சேர்த்து பொடி செய்து பாட்டிலில் மூடிவைக்கவும்.
பிரசவமான பெண்களுக்கு வயிற்றுக்கு நல்லது. ஜலதோஷம், வயிற்றுவலி, பேதி இது போன்ற உடல் கோளாறுகளுக்கு குணம் அளிக்கவல்லது. தயிர், சுட்டஅப்பளம், மோர்க்குழம்பு ஆகியவை இதற்கு பொருத்தமான ஜோடி ஆகும்.
இந்திரா காசிநாதன் |
|
|
More