சுகம் தரும் சுண்டக்காய் சுண்டைக்காய் பொரிச்ச கூட்டு சுண்டைக்காய் வற்றல் மிளகு குழம்பு சுண்டைக்காய் வற்றல் மோர்க்குழம்பு சுண்டைக்காய் வற்றல் தொகையல் ஐங்காயப் பொடி சுண்டைக்காய் வற்றல் தயிர்பச்சடி மொகல் பரோட்டா பன்னீர் கிரேவி
|
|
|
ஜீரணமாகாமல் வயிற்று வலியுடன் அவதிப்படும் போது சுண்டைக்காய் வற்றல் பொடியை சாதத்துடன் கலந்து சாப்பிட்டால் வயிற்று வலி, வாயுக்கோளாறு அனைத்தும் நீங்கி ஜீரணமும் எளிதில் ஆகும். முக்கியமாக பிரசவம் ஆன பெண்களுக்கு மிகவும் சிறந்தது.
தேவையான பொருட்கள்
சுண்டைக்காய் வற்றல் - 1/2 ஆழாக்கு உளுத்தம் பருப்பு - 1/4 கரண்டி துவரம் பருப்பு - 1/4 கரண்டி மிளகு - 3 ஸ்பூன் புளி - திராட்சை பழ அளவு உப்பு - தேவையான அளவு பெருங்காயம் - பெரிய கட்டி எண்ணெய் - 4 ஸ்பூன் |
|
செய்முறை
வாணலியில் இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு பெருங்காயத்தை பொரிக்கவும்.
பருப்பு வகைகள், மிளகு, இவற்றை வறுத்து எடுக்கவும்.
மேலும் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு சுண்டைக்காய் வற்றலை கருஞ்சிவப்பாக வறுத்து எடுக்கவும்.
பருப்பு வகைகள், மிளகு, உப்பு, புளி, பெருங்காயம் இவற்றை பொடி செய்து வறுத்த சுண்டைக்காய் வற்றலையும் சேர்த்து பொடி செய்து பாட்டிலில் எடுத்து வைக்கவும்.
தேவையான போது எடுத்து உபயோகிக்கலாம். மாதக்கணக்கில் கெடாமல் இருக்கும்.
இந்திரா காசிநாதன் |
|
|
More