வாராயோ வசந்தமே!! தமிழ் இணைய மாநாடு 2002 சான் ·பிரான்சிஸ்கோவுக்கு வருகிறது! நந்தலாலா மிஷன் சிறுவர்கள் விழா! லலிதகான வித்யாலயா 10 ஆவது ஆண்டு விழா பாரதி கலாலயாவின் ஒரு நாள் நிகழ்ச்சி!
|
|
ஸ்ரீ கிருபா டான்ஸ் கம்பெனியின் புதிய ஸ்டூடியோ |
|
- |ஏப்ரல் 2002| |
|
|
|
ஸ்ரீ கிருபா டான்ஸ் கம்பெனி சமீபத்தில் ஸாண்டா க்ளாராவில் புது ஸ்டூடியோ ஒன்றை திறந்தனர். புகழ்பெற்ற கலைஞரும், முன்னாள் நடிகையுமான டாக்டர் வைஜயந்திமாலா பாலி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். துவக்க விழாவன்று அவரைக்காண மாணவர்களும் பெற்றோர்களும் வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தனர்.
கூடியிருந்தவர்களின் கரவொலி மற்றும் வாழ்த்தொலிக்கிடையே, கட்டியிருந்த ரிப்பனை வெட்டி, புதிய ஸ்டூடியோவை டாக்டர் வை ஜயந்திமாலா பாலி முறையாகத் திறந்து வைத்தார். பின்னர் விஷால் ரமணியைக் கட்டிப்பிடித்தும் கைக்குலுக்கியும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். பின்னர் குத்துவிளக்கினை ஏற்றினார். அவரது இச் செய்கை, ஸ்ரீ கிருபா டான்ஸ் கம்பெனியின் வருங்கால நட்சத்திரங்களின் கலை வாழ்க்¨ கயின் விளக்கினை ஏற்றியது போலிருந்தது.
முதலில் விஷால் டாக்டர் பாலியை கூட்டத் தினரிடை அறிமுகப்படுத்தினார். டாக்டர் வைஜயந்திமாலா தனது வாழ்த்துரையில், "உங்களைப்போன்றே விஷாலும் என்னை சிறு வயது முதல் தொடர்ந்துவந்துள்ளார். உங்கள் அனைவரையும் ஸ்ரீ கிருபா குடையின் கீழ் பார்ப்பது ஓர் கனவு நினைவாகியதுபோல் உள்ளது". நாட்டியக்கடவுளின் அருளும், பெண் தெய்வம் "ஸ்ரீ"யின் அருளும் என்றென்றும் மாணவர்களுக்கு இருக்குமென்றும், மிகவும் பழைமையான நாட்டியக் கலையை இங்கு பயிலும் மாணவர்கள் தன்னார்வத்துடன் கற்று மேன்மையடைவார்கள் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.
அடுத்து பேசிய ஸ்ரீ கிருபா டான்ஸ் கம்பெனி சேர்மென், தனது உணர்ச்சிகளையும், ஸ்ரீ கிருபாவின் வளர்ச்சி மற்றும் மகத்துவம் பற்றியும் கூறினார். கம்பெனியின் பக்கபலமாக விளங்கும் கலையார்வம் மிக்க இயக்குனர், சிறந்த கலைஞர்கள், இயக்குனர் குழுவினரிடம். |
|
ஸ்ரீ கிருபாவை ஒப்படைப்பதாகவும் தெரிவித்தார். இயக்குனர் குழுவின் தலைவர் சஷிரேகா அலுர் டாக்டர் வைஜெயந்திமாலாவின் வருகைக்கு நன்றி தெரிவித்தார்.
பின்னர், டாக்டர் வைஜெயந்திமாலாவின் நாட்டிய நிகழ்ச்சி நடைப்பெற்றது. டாக்டர் பாலியின் திறமை அவர் மேடையேறியவுட னேயே புலப்பட்டது. ஆரபி ராகத்தில் அமைந்த தியாகராஜரின் பஞ்சரத்ன கீர்த்தி "சதின்சனே ஓ மானஸா"வில் தசாவதாரங்களை உணர்ச்சி ததும்ப நம் முன்னே பிரதிபலித்தார். அதனைத் தொடர்ந்து அவர் அளித்த அடானா ராகத்தில் அமைந்த பதம் டாக்டர் பாலியின் திறமை, அனுபவம் - இவற்றின் ஒரு துளியைக்காட்டியது.
ஸ்ரீ கிருபா டான்ஸ் கம்பெனி இதற்கு முன்னரே பத்மபூஷன் குரு கேலுசரன் மொகபத்ரா, மறைந்த பத்மஸ்ரீ திருமதி சஞ்சுக்தா பாணிக் ரஹி, திருமதி அலர்மேல்வல்லி போன்ற புகழ்பெற்ற கலைஞர்கள் உட்பட பலரையும் அழைத்துவந்து கலை விருந்து படைத்துள்ளனர். |
|
|
More
வாராயோ வசந்தமே!! தமிழ் இணைய மாநாடு 2002 சான் ·பிரான்சிஸ்கோவுக்கு வருகிறது! நந்தலாலா மிஷன் சிறுவர்கள் விழா! லலிதகான வித்யாலயா 10 ஆவது ஆண்டு விழா பாரதி கலாலயாவின் ஒரு நாள் நிகழ்ச்சி!
|
|
|
|
|
|
|