Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | சினிமா சினிமா | சமயம் | Events Calendar | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வாசகர் கடிதம் | பொது
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
தமிழ் இணைய மாநாடு 2002 சான் ·பிரான்சிஸ்கோவுக்கு வருகிறது!
நந்தலாலா மிஷன் சிறுவர்கள் விழா!
லலிதகான வித்யாலயா 10 ஆவது ஆண்டு விழா
பாரதி கலாலயாவின் ஒரு நாள் நிகழ்ச்சி!
ஸ்ரீ கிருபா டான்ஸ் கம்பெனியின் புதிய ஸ்டூடியோ
வாராயோ வசந்தமே!!
- வெங்கட்ரமணி அருணாச்சலம்|ஏப்ரல் 2002|
Share:
Click Here Enlarge'காலங்களில் அவள் வசந்தம்', 'நீ தானே என் பொன் வசந்தம்', 'வா வா வசந்தமே, சுகந்தரும் சுகந்தமே'என்றெல்லாம் தமிழ்த் திரையிசையில் நிலாவுக்குப் போட்டியாக அதிகம் பாடப் பட்டிருக்கும் வசந்த காலம் இம்மாதம் வருகிறது. ஆனால், அதைக் கொண்டாடாமல் நீங்கள் வேலையே கதி என்று இருக்கப் போகிறீர்களா? வசந்தத்தை கொண்டாட ஒரு வாய்ப்பை ஏற்படுத்தி தரப்போகிறது வளைகுடா பகுதியின் பிரபலமான 'தில்லானா' இசைக்குழு. ஆம், வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி 'வாராயோ வசந்தமே!!' என்ற பெயரில் மாலை முழுதும் தமிழ் திரை இசைக் கொண்டாட்டம் நிகழப் போகிறது. வரவிருக்கும் வசந்த காலத்தில் உலகெங்கிலும் அமைதி நிலவி, வாழ்வில் வசந்தம் மலரவேண்டி இந்த இசை நிகழ்ச்சியை அளிக்கிறார்கள் தில்லானா குழுவினர்.

தில்லானா (http://www.thillana.net) இசைக் குழுவினர்கள் வித்தியாசமானவர்கள். "Music expresses that which cannot be said and on which it is impossible to be silent" என்ற விக்டர் ஹ்யூகோவின் பொன்மொழிக்கிணங்க இவர்கள் தங்கள் வாழ்க்கைக்காக பாடும் குழுவினர் அல்ல. இந்தியாவின் இருக்கும் சகோதர சகோ தரிகளின் நல்வாழ்வுக்காக நிகழ்ச்சியில் கிடைக்கும் தொகையை நன்கொடை அளித்து அதில் மகிழ்ச்சி கொள்ளும் நல்லவர்கள்.

இவர்களின் முதல் நிகழ்ச்சி 2000ம் ஆண்டு ஆகஸ்ட் 19-ஆம் தேதி சுதந்திர தின நிகழ்ச்சியாக நடைபெற்றது. அதில் சுமார் 600 பேர் மகிழ இசை மழை பொழிந்தார்கள். பழைய பாடல், புதிய பாடல், பல்வேறு குரல் கொண்ட பாடகர்கள் (சிதம்பரம் ஜெயராமன், சந்திரபாபு, பால முரளி கிருஷ்ணாவில் தொடங்கி இன்றைய எஸ்.பி.பி, யேசுதாஸ், சங்கர் மஹாதேவன் வரை) இசை விருந்து படைத்தனர். அதில் கிடைத்த $12,000 தொகை யை இந்தியாவில் கல்வியறிவு பரவுவதற்காக உழைக்கும் Asha for Education என்ற அமெரிக்க அமைப்புக்கு வழங்கி தங்கள் இசைக்கு அர்த்தம் தேடிக்கொண்டார்கள்.

இரண்டாவது நிகழ்ச்சி, சென்ற ஆண்டு பொங்கல் நிகழ்ச்சியாக மலர்ந்தது. வளைகுடா பகுதி தமிழ் மன்றம் வழங்கிய இந்த நிகழ்ச்சியில் மேடையில் இல்லாத இசைக் கருவிகளே இல்லை என்றால்கூட மிகை யாகாது. வீணையில் தொடங்கி, ஆப்ரிக்காவின் திஜிம்பே என்ற வாத்யம் வரை, பல்வேறு இசைக் கலைஞர்கள் மேடையை நிறைத்திருந்தார்கள். அதே போல், அரங்கிலும் 1000 இருக்கைகள் இருந்தும் பலர் நின்று கொண்டே ரசிக்க வேண்டியிருந்தது. பாடல் தேர்வு சிறப்பாக இருந்து, பாடியவர்களும் பிரமாதமாக பாடவே நிகழ்ச்சி களைகட்டிவிட்டது. சும்மாவா?

குழுவில் ஒருவர் சாட்ஷாத் பாலமுரளி கிருஷ்ணாவின் சீடர், இன்னொருவர் கலி·போர் னியாவில் சிறந்த இசையமைப் பாளர், சிலர் ஹிந்துஸ்தானி மற்றும் கர்நாடக சங்கீதத்தில் தேர்ந்தவர்கள், இன்னும் சிலர் மேற்கத்திய இசையை முறையாகப் பயின்றவர் கள் என்றெல்லாம் இருந்தால் கேட்கவா வேண்டும்? இரசிகர்கள் களிப்பு மிகுந்து இறுதி யில் ஆடவே ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் கிடைத்த சுமார் $10000 தொகையை சென்னையைச் சேர்ந்த 'உதவும் கரங்கள்' (www.udavumkarangal.org) என்ற, சேவை அமைப்புக்கு நன்கொடை அளித்தனர். உதவும் கரங்கள் நிறுவனம் இந்தத் தொகையை ஒரு முதியோர் இல்ல நிர்மாணத்திற்குப் பயன்படுத்தியுள்ளது.

இம்முறை இவர்களின் இசை-வசந்தம் யாருக்காக மலரப் போகிறது என்று கேட் கிறீர்களா? Association for India's Development (AID) (http://www.adiindia.org) என்ற, அமெரிக்காவில் 30-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்ட சேவை நிறுவனத்திற்குத்தான். AID நிறுவனம் 1991-ஆம் ஆண்டு இந்தியாவின் நலனில் ஆர்வம் கொண்ட நண்பர்கள் சிலரால் ஆரம்பிக்கப்பட்டது. இதன் குறிக்கோள் இந்தி யாவின் தீராத பிரச்சினைகளான கல்வியறி வின்மை, தொழ்லறிவின்மை, சுகாதாரமின்மை, சமுதாய சீர்கேடுகள் போன்றவைகளை தீர்க்க முயற்சி செய்வது.
'Whatever you do may seem insignificant, but it is most important that you do it.' என்ற மகாத்மா காந்தியின் மொழிக்கேற்ப சின்னச் சின்ன அடியெடுத்து வைத்த இவர்கள் இப் போது Hundred Block Plan (http://aidindia.org/aipsn) என்ற மாபெரும் முயற்சியை மேற் கொண்டுள்ளனர். இதன்படி இந்தியாவின் கிரா மங்களை நூறு பகுதிகளாகப் பிரித்து All India People Science Network என்ற அமைப்பின் மூல மாக ஒவ்வொன்றிலும் முன்னேற்றப் பணிகளை ஏற்கனவே துவங்கிவிட்டனர். இதுபோன்ற முயற்சிகளுக்கு ஆகும் செலவுகளுக்காக அவர்கள் நடத்தும் நிதி சேர்ப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றாக இந்த தில்லானாவின் 'வாராயோ வசந்தமே' அமைக்கப்பட்டிருக்கிறது.

என்ன டிக்கெட் வாங்க தயாராகிவிட்டீர்களா? Raaga, Mailbag, Dhana Bazaar மற்றும் பல வளைகுடா பகுதியின் கடைகளில் டிக்கெட் கிடைக்கிறது.www.sulekha.com என்ற இணையத்தளத்திலும் வாங்கலாம். thilana1947@thillana.net என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொண்டு மேலும் விபரங்களை நீங்கள் அறிந்து கொள்ளலாம். நிகழ்ச்சியை ரசிப்பதோடு மட்டுமில்லாமல் நன்கொடை அளித்தும் திருப்தி பெறுங்கள்.

தில்லானாவும் AIDம் உங்கள் நல்வரவுக்காக காத்திருக்கின்றன. மேலும் விபரங்களுக்கு

http://aidsfbay.org/thillana/என்ற இணையத்தளத்தைப் பாருங்கள்.

அப்புறமென்ன, இனிய (வ)சந்தத்தை வரவேற்க தயாராகுங்கள்!!!

வெங்கட்ரமணி அருணாச்சலம்
More

தமிழ் இணைய மாநாடு 2002 சான் ·பிரான்சிஸ்கோவுக்கு வருகிறது!
நந்தலாலா மிஷன் சிறுவர்கள் விழா!
லலிதகான வித்யாலயா 10 ஆவது ஆண்டு விழா
பாரதி கலாலயாவின் ஒரு நாள் நிகழ்ச்சி!
ஸ்ரீ கிருபா டான்ஸ் கம்பெனியின் புதிய ஸ்டூடியோ
Share: 




© Copyright 2020 Tamilonline