பிரட்டில் பக்குவங்கள் பிரட் டொக்லா பிரட் இட்லி பிரட் தயிர் வடை அடேடே!! அடை வகைகள் உரைப்பு அடை தவலை அடை பயிறு அடை தேங்காய் அடை
|
|
|
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 3/4 ஆழாக்கு புழுங்கலரிசி - 3/4 ஆழாக்கு துவரம் பருப்பு - 1/2 ஆழாக்கு கடலை பருப்பு - 1/4 ஆழாக்கு உளுத்தம் பருப்பு - 1 கரண்டி மிளகாய் வற்றல் - 6 அல்லது 8 பெருங்காயம் - சிறிதளவு உப்பு - தேவையானது கருவேப்பிலை - சிறிதளவு |
|
செய்முறை
பருப்பு வகைகளை ஒரு முறை களைந்துவிட்டு 2 மணிநேரம் ஊறவைக்கவும் (ஊறிய பின் நீரில் களைந்தால் பருப்பு வாசனை போய்விடும்) அரிசியையும் 2 மணி நேரம் ஊற வைக்கவும்.
உப்பு, மிளகாய்வற்றல், கருவேப்பிலை, பெருங்காயம் இவற்றை சேர்த்து அரிசி, பருப்பு வகைகளை மிக்ஸி அல்லது கிரைண்டரில் கரகரப்பாக அரைக்கவும்.
பிறகு 2 அல்லது 3 மணிநேரம் கழித்து அடுப்பை பற்ற வைத்து தோசைக்கல்லை போட்டு கல் நன்றாக காய்ந்ததும் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு தோசை திருப்பியால் பரவவிடவும். 1கரண்டி அடை மாவை விட்டு கரண்டியின் பின்பாகத்தால் மெல்லியதாக பரப்பி நடுவில் தோசை திருப்பியால் ஓட்டை போடவும். அடையை சுற்றியும் நடுவில் உள்ள ஓட்டையிலும் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு பொன்நிறத்தில் வேகவிட்டு மறுபக்கம் திருப்பி போடவும். நன்றாக வெந்ததும் எடுத்து தட்டில் வைத்து வெண்ணெய், வெல்லம், அவியல், சாம்பார் போன்றவைகளுடன் சுவையாக சூட்டுடன் சாப்பிடவும்.
இந்திரா காசிநாதன் |
|
|
More
பிரட்டில் பக்குவங்கள் பிரட் டொக்லா பிரட் இட்லி பிரட் தயிர் வடை அடேடே!! அடை வகைகள் உரைப்பு அடை தவலை அடை பயிறு அடை தேங்காய் அடை
|
|
|
|
|
|
|