நடிகர் திலகத்திற்கு கடற்கரையில் சிலை! அன்புமணி Vs வேணுகோபால்! என்.எல்.சி. நிறுவனங்களின் பங்குகள்!
|
|
உள்ளாட்சி தேர்தலும் அவசர சட்டமும்! |
|
- கேடிஸ்ரீ|ஆகஸ்டு 2006| |
|
|
|
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளுக்கான அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது. இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநர் பர்னாலா ஒப்புதல் அளித்துள்ளார். மேயர் மற்றும் துணை மேயரை கவுன்சிலர்களே தேந்தெடுக்கும் விதத்தில் இச்சட்டம் வழிவகைச் செய்கிறது.
அதுமட்டுமல்லாமல் மேயர் அல்லது துணை மேயர்களின் செயல்பாடுகள் திருப்தியில்லாத பட்சத்தில் அவர்கள் மீது கவுன்சிலர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கும் இச்சட்டம் வழிவகை செய்கிறது.
இதுவரை மேயர் மற்றும் துணைமேயர்களை மக்களே தேர்ந்தெடுத்து வந்தனர். இந்த அவசர சட்டம் மூலம் அந்த முறை மாற்றப்பட்டுள்ளது. இப்படி மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படும் மேயரோ அல்லது நகராட்சித் தலைவரோ வீற்றிருக்கும் மன்றத்தில் அவரது கட்சியை சேராத அதிக மன்ற உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தால் அந்த மேயரோ அல்லது தலைவரோ அந்த கூட்டத்தை சுமூகமாக நடத்தி செல்வதில் மிகவும் சிரமத்திற்குள்ளாவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. மேலும் அங்கு எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த முடியாத சூழல் உருவாகிறது. |
|
தமிழகத்தில் 500க்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட சிறப்பு நிலை பஞ்சாயத்துக்கள் 561ஐ தற்போது பேரூராட்சிகளாக மாற்றவும் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கிராமப் பஞ்சாயத்து, பஞ்சாயத்து யூனியன், மாவட்ட பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என்ற அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகள் இதுவரை செயல்பட்டு வருகின்றன.
கேடிஸ்ரீ |
|
|
More
நடிகர் திலகத்திற்கு கடற்கரையில் சிலை! அன்புமணி Vs வேணுகோபால்! என்.எல்.சி. நிறுவனங்களின் பங்குகள்!
|
|
|
|
|
|
|