சுண்டி இழுத்த சொற்பொழிவு! கலி·போர்னியா முத்தமிழ் சங்கம் - தமிழ் புத்தாண்டு கலைநிகழ்ச்சி ஏரிக்கரையில் இசைவிழா
|
|
தமிழர் பெருவிழா அமெரிக்காவில்! |
|
- |மே 2002| |
|
|
|
வடஅமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவையின் 15வது ஆண்டுவிழாவையும் 2002 தமிழ் திருவிழாவையும் சிகாகோவின் பெருநகர் தென்பகுதியில் வரும் திருவள்ளுவர் ஆண்டு 2033 திங்கள் 19, 20, 21, 22 (July 4,5,6 and 7, 2002) நாட்களில் கொண்டாட முடிவெடுத்து முன்னேற்பாடாகக் காரியங்கள் நடைபெற்று வருகின்றன.
2002 ஆண்டின் தமிழர்விழா, காலம் சென்ற தமிழறிஞர் மொழி ஞாயிறு தேவநேயப்பாவார் அவர்களின் நூற்றாண்டு விழாவாகவும் கொண்டா டப்பட உள்ளது. தாங்களும், தங்கள் இல்லத்தவர் களும், நண்பர்களும் பெரும் அளவில் கலந்து கொண்டு பேரவைக்கு பெறும் ஆதரவையும், விழாவினைச் சிறப்பிக்கவும் வேண்டுகிறோம்.
அழைப்பை தங்களிடம் தந்துவிட்டப் பின்னரும் வடஅமெரிக்கத் தமிழ்சங்கப் பேரவை பற்றிய விவரம் கூறாமல் விட்டுவிடுவது அவ்வளவு எளிதல்ல. அமெரிக்க மண்ணில் தமிழராகிய நாம் காலடி வைத்த சில வருடங்களிலேயே நம்முடன் உடன் வந்த தமிழ்ப் பண்பும், பாரம்பரியமும் புதுமண்ணில் நன்றாக நடப்பட்டுவிட்டன என்று கூறினால் அது மிகையாகாது. நாடெங்கும், பெரும்நகரங்கள் பலவற்றிலும் தமிழ்ச் சங்கங்கள் தழைத்தோன்றின. சிதறியோடும் நெல்லிக்கனிகளல்ல, சுற்றிப் படர்ந்து வாழும் இன்பமென்ற கருத்து ஓங்கி நிற்க அமெரிக்க மண்ணின் கிழக்கு கரையோரத்து மாநிலத் தமிழ்ச் சங்கங்கள் ஐந்தும் 1987ல் பற்றிப் பிணைந்து ஏற்படுத்தியதுதான் 'வட அமெரிக்கக் கூட்டுத் தமிழ்ச் சங்கம்'
Fetna.Org
கடந்த 15 ஆண்டுகளில் இன்று 39 தமிழ்ச் சங்கங்களாக விழுதுவிட்டு படரும் ஆலமாக ஆகியுள்ளது. 1988 தொடர்ந்து 14 ஆண்டுகளாக விழாவேற்று செயல்பட்டு வருகின்றோம். ஆண்டு தோறும் தமிழ்நாட்டுத் தமிழறிஞர்கள் வருகையும், அறிவுசார்ந்த சான்றோர்க்கு மாட்சிமைப் பரிசு என்றும் வழங்கி நம்மை நாமே பெருமைபடுத்தி வருகின்றோம். 1995 கூட்டுத் தமிழ்ச் சங்கம் அமெரிக்கத் தமிழ்ச் சங்கப்பேரவை என்று பெயர் மாற்றம் பெற்றது. (மேலும் பல விவரங்கள நமது இணையம் www.fetna.org விளக்கும்)
எண்ணிக்கையில் வளர்ந்தோம். விழாநாட் களில் வரும் தமிழர் எண்ணிக்கையில் பெரும் மாற்றமில்லை என்பது மாற்றி அமைக்க இவ்வாண்டு விழா தயாரிப்புக்களை கடந்த செப்டம்பர் மாதமே துவங்கி செயல்பட்டு வருகின்றோம். எனினும் அமெரிக்க வாழ் தமிழர் தம் எண்ணத்தில், பழக்கத்தில் அவ்வளவு மாறுதல்கள் காண இயலவில்லை. ''காலத்தோடு திட்டமிட்டு செய்யப்படுபவை, பெரும் வெற்றியாகும்'' என்பது அறிந்த நாம் செய்ய வேண்டியது, இன்னும் காலம் தாழ்த்தாது விழா வருகைக்கு, பங்கேற்பதில் ஈடுபட வேண்டும் என்று தமிழர்கள் யாவரையும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாண்டு விழா ''மூத்தமிழுக்கு விழா'' என்பதோடு இல்லது முத்தமிழுக்கும் இணையென அறிவியல் தமிழுக்கும் விழா என்று அமைகின்றது. |
|
இவ்வாண்டு விழாவிற்கு வருகை தர இருப்பவர்கள். ''முத்தமிழ் மூதறிஞர், ''கருணாநிதி, ''அறிவியற் தமிழுக்கு ஆசான் அப்துல்கலாம்'' தமிழ் உலக மொழிகளில் மூத்தவள் என உலகிற்கு அறிமுகப்படுத்தும் சிந்து சமவெளி நாகரீகம் தமிழர்களுடையது என்பது தெரிவிக்கும் அறிஞர்களில் ஒருவர் ''இரா. மதிவாணன்'' பெண்ணுரிமைக் குரல் ஒலிக்க ''திருமதி அருள்மொழி'' பட்டிமன்றத்தின் பல்சுவையும் தரும் ''பேராசிரியர் இரா. மோகன்'' கலை¦ய்னின் கண் முன் தோன்றம் நாட்டிய நல்லிலக்கணம் 'சிலப்பதிகாரம் நாட்டிய நாடகமாக !'' ஓராயிரம் ஆண்டுகள் ஆசியாவை ஆதிக்கம் கொண்டிருந்த தமிழ் மாமன்னன், ''இராச இராச சோழன் நாடகமாக !'' இளையத் தலைமுறை மனம் மகிழ்ந்து நிற்க திரைப்பட பாடலிசை என்பதோடு - சின்னக் கலைவாணர் விவேக், தலைமை நடிகர் சத்தியராஜ் என்றும் நமக்கு அறிமுகமான நடிகர் சிலர் என்று மூன்று நாட்களை முழுமையாக நிரப்பி இருக்கும் விழா!
கண்டு பல நாட்கள் ஆகிவிட்டனவே எனக்கூறிக் குலாவிட பல நண்பர்கள் தமிழினத்து இளையோர் சிதறிவிடாது இனத்தோடு இணைந்து - திருமணம் முடித்து வாழ ஒரு வாய்ப்பு என்று அமையும் இவ்விழாவிற்று வருகை தரவும். உம் கேளிர், நண்பர் தம்மை அழையுங்கள்!
மேலும் விபரம் அறிய www.fetna.org திரு.V J பாபு, தலைவர், FeTNA 708.599.3116 |
|
|
More
சுண்டி இழுத்த சொற்பொழிவு! கலி·போர்னியா முத்தமிழ் சங்கம் - தமிழ் புத்தாண்டு கலைநிகழ்ச்சி ஏரிக்கரையில் இசைவிழா
|
|
|
|
|
|
|