ரசித்து ருசிக்க ரசவகைகள் கொரட் ரசம் மிளகு ரசம் சீரக ரசம் எலுமிச்சம் பழ ரசம் வேப்பம் பூ ரசம் மைசூர் ரசம் துவரம் பருப்பு அரைத்துவிட்ட ரசம் மோர் ரசம் கண்டந் திப்பிலி (மோடிக்குச்சி) ரசம் உசிலியம் (பருப்பு உசிலியல் கறி)
|
|
|
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு - 1 கரண்டி பூண்டு உரித்தது - 1 கரண்டி பச்சை மிளகாய் - 2 புளி - சிறு எலுமிச்சை அளவு தக்காளி - 1 மிளகாய் வற்றல் - 2 மிளகு - 1ஸ்பூன் சீரகம் - 1 ஸ்பூன் தனியா - 2 ஸ்பூன் கடலைபருப்பு - 2 ஸ்பூன் கடுகு - சிறிதளவு கொத்தமல்லி - சிறிதளவு உப்பு - தேவையானது |
|
செய்முறை
பூண்டு, துவரம்பருப்பு இவற்றை குக்கரில் வேக வைக்கவும். புளி, தக்காளி இவற்றை நன்றாக கரைத்து ஈயச் சொம்பில் விடவும். துண்டாக்கிய பச்சைமிளகாய், உப்பு இவற்றை போட்டு 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். வாணலியில் எண்ணெய்விட்டு கடலைபருப்பு, தனியா, மிளகாய் வற்றல், மிளகு, சீரகம் இவற்றை பொன்னிறத்தில் வறுத்து மிக்ஸியில் அரைக் கவும். அரைத்த விழுது, வெந்தயம் துவரம்பருப்பு, பூண்டு இவற்றை கொதிக்கும் புளி, தக்காளி தண்ணீரில் விடவும். பொங்கி நுரை வந்ததும் கீழே இறக்கி கடுகு தாளிக்கவும். கொத்தமல்லி போட்டு கிளறி மூடவும். பூண்டின் மணம் பிடிக்காதவர்கள்கூட இதனை விரும்பி சாப்பிடுவார்கள். தேவையானால் மேலும் ருசிக்கு தேங்காய் பால் விடலாம்.
இந்திரா காசிநாதன், உமா நடராஜன் |
|
|
More