ஊறு செய்யாத ஊறுகாய் வகைகள் மாங்காய் தொக்கு எலுமிச்சம் பழ (உடனடி ஊறுகாய்) (இரண்டாவது வகை) ஆவக்காய் ஊறுகாய் பூண்டு ஊறுகாய் புளிமிளகாய் மிளகாய் தொக்கு ஊறுகாய்களை பாதுகாக்க ஆடி அழைக்கிறது ஆமவடை கடலைப் பருப்பு வெல்லபோளி
|
|
|
தேவையான பொருட்கள்
மெல்லிய தோலுள்ள பழுத்த எலுமிச்சம் பழம் - 4 (சுமார் சைஸ்) மிளகாய் வற்றல் - 15 முதல் 20 வரை மஞ்சள் பொடி - 1 ஸ்பூன் வெந்தயம் - 2 ஸ்பூன் உப்பு - தேவையானது (சுமார் 1 கரண்டி) எண்ணெய் - 1 கரண்டி கடுகு - 1ஸ்பூன் பெருங்காயம் - சிறுதுண்டு |
|
செய்முறை
எலுமிச்சம் பழத்தை பொடிபொடியாக நறுக்கவும். (பாதிஅளவு சாறை எடுத்து வேறு எதற்காவது உபயோகிக்கலாம்) உப்பு, மஞ்சள் பொடி கலந்து நன்றாக மூடி வைக்கவும். தினமும் ஒருமுறை மேலும் கீழுமாக கிளற வேண்டும். 10, 15 நாட்கள் வரை நன்றாக ஊற வேண்டும்.
வெந்தயம், பெருங்காயம் இவற்றை எண்ணெய் விடாமல் வறுத்து பொடி செய்யவும். மிளாகாய் வற்றலை எண்ணெய்விட்டு வறுத்து பொடி செய்யவும். இவற்றை ஊறிய எலுமிச்சம் பழத்தின் மேல் போடவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய்விட்டு காய்ந்ததும் கடுகு வெடிக்க விடவும். எலுமிச்சம் பழ துண்டுகளின் மீது எண்ணெய் விட்டு கிளறவும்.
இந்திரா காசிநாதன் |
|
|
More