Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2006 Issue
ஆசிரியர் பக்கம் | வாசகர் கடிதம் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | சிரிக்க சிரிக்க | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | விளையாட்டு விசயம்
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
மெய்நிகர் மாயத்தின் மர்மம் - பாகம் 5
- கதிரவன் எழில்மன்னன்|ஆகஸ்டு 2006|
Share:
Click Here Enlargeமுன் கதை: Silicon Valley-இல் தொழில் நுட்ப நிபுணராக இருந்த சூர்யா, அவரது துப்பறியும் திறமையைப் பலரும் தெரிந்து கொண்டு அவரது உதவியை நாடவே, முழு நேரத் துப்பறிவாளராகிவிட்டார். அவரது
நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் அவரது துப்பறியும் தொழிலில் மிக ஆர்வம் கொண்டு அவருக்கு உதவி புரிகின்றனர். கிரண், வேகமான, தமாஷான இளைஞன்! தன் தொழில் பங்கு வர்த்தகமானாலும்,

சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலுத்துகிறான். ஷாலினி Stanford மருத்துவமனையில் மருத்துவராகவும், Bio-Medical ஆராய்ச்சி நிபுணராகவும் பணி புரிபவள். சூர்யாவை மானசீக மாகக் காதலித்தாலும், அவர் தன்

கடந்த கால சோகத்தை மறந்து தன்னை வெளிப்படையாக நெருங்கக் காத்திருக் கிறாள். மூவரும் சேர்ந்து துப்பறிந்து பலரின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்துள்ளனர்.

சிறுவயதில் சூர்யாவோடு பள்ளியில் படித்த நாகநாதன் என்பவர் தன் மெய்நிகர் விளையாட்டு நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையைத் தீர்க்க சூர்யாவை அழைத்துள்ளார்.

நாகுவும், அவரது தலைமை விஞ்ஞானி ரிச்சர்டும், தங்கள் பிரச்சனையை புரிந்து கொள்ள வேண்டுமானால், மெய்நிகர் உலகை சூர்யா, ஷாலினி, கிரண் மூவரும் தாங்களே உணர்ந்து கொண்டால்தான் முடியும் என்று

கூறினர். அதற்குத் தேவையான மெய்நிகர் உடுப்பில் இருந்த முப் பரிமாண பார்வை, ஸ்டீரியோ ஒலி, வாசனை, ஹேப்டிக்ஸ் (haptics) எனும் தொடு உணர்ச்சி சாதனங்களைப் பற்றி விவரித்து விட்டு அதை விட

முன்னேறிய, நினைவுகளை உணர்வது மட்டுமல்லாமல் தூண்டக் கூடிய சாதனத்தைப் பற்றி விளக்கினர். அடுத்து...

தலைக்கு வெளியிலிருந்தே சக்தி வாய்ந்த ஆன்டென்னாக்கள் மூலம் மூளைக்குள் உள்ள, குறிப்பிட்ட ந்யூரான்களை மட்டும் தூண்டி, வேண்டிய விதத்தில் ஸிக்னல் அனுப்பச் செய்ய முடியும் என்று ரிச்சர்ட் கூறியதற்கு, சூர்யா

அந்த சாதனத்தின் வட்ட முனைகளைப் சரியாகப் பொருத்துவதற்காக தலைமுடியை சில இடங்களில் ஷேவ் செய்ய வேண்டியிருக்குமா என்று கேட்டதும் கிரண் "அய்யய்ய்யோ என்னை விடுங்கப்பா!" என்று அலறியதும்,

ஷாலினி அவனை மேலும் சீண்டியதும், மற்ற அனைவருக்கும் மிகவும் குதூகலமளித்தன!

தன் சிரிப்பை மிகவும் சிரமப்பட்டு அடக்கிக் கொண்ட ரிச்சர்ட் தலையசைத்து, கிரணுக்கு ஆறுதலளித்தார்.

"கவலைப்படாதே கிரண்! அப்படி ஒண்ணும் தலை மேல போல்கா டாட் மாதிரி வட்ட வட்டமா முடியெடுத்துட மாட்டோம்! அப்படியிருந்தா யாரும் இதுக்கு முன்வரவே மாட்டாங்களே?! அப்புறம் எப்படி வணிக ரீதியா

வெளியிட முடியும்?! எங்க தொழில்நுட்பம் EEG-ஐ விட ரொம்ப முன்னேறியது. ஆன்டென்னாக்கள் அனுப்பப் படற மின்காந்த அலைகள், தலைமுடி மூலமே தலைத் தோலுக்குப் போய், அதையும் மண்டை ஓட்டையும் கூடத்

தாண்டி ந்யூரான்களைத் தூண்டுது. ந்யூரான்களின் இணை அதிர்வு அலைவரிசையைப் பயன்படுத்தறதால, தொலைக்காட்சி அல்லது வானொலி பரப்பு மாதிரின்னு வச்சுக்கலாம். ந்யூரான்கள் தான் ரிஸீவரா செயல்படுது.

ஆனா, ஒரு பெரிய வித்தியாசம் - வானொலி அலைகள் மாதிரி உலகளவுல மிகப் பரந்து போகாம, மிகக் குறுகிய இடத்துல ·போகஸ் செய்யப்படுது. அதனாலதான் தலைக்கு வெளியிலிருந்தே இந்த சிறிய ஆன்டென்னாக்கள்

மூலம் அனுப்ப முடியுது. இந்த வட்டங்களை, சிறிய சேட்டிலைட் ட்ரான்ஸ்பாண்டர் மாதிரி, ஆனா லேஸர் கதிர் மாதிரி அனுப்பறதா நினைச்சுக்கலாம்!"

கிரண் களுக்கென சிரித்து விட்டு, "ஆஹா! நம்ம தலைக்குள்ளயே பல பில்லியன் கணக்குல சேட்டிலைட் டிஷ் இருக்குன்னு வச்சுக்கலாம்! நிறைய சினிமா, விளையாட்டு எல்லாம் பாத்துக்கலாமா?!"

ரிச்சர்ட் சிரித்தார். "நல்ல ஜோக்தான் கிரண்! ஆனா நாங்க அனுப்பற சினிமா, விளையாட்டுத்தான் பாத்துக்க முடியும்."

ஷாலினி உற்சாகம் தாங்காமல் கை தட்டிக் கொண்டு உச்சஸ்தாயியில் கூவியே விட்டாள்! "அற்புதம்! பிரமாதம்! கேட்கவே ரொம்ப சுவாரஸ்யமா இருக்கே?! இதை நாம அனுபவிச்சுப் பாத்தா இன்னும் நல்லா இருக்கும்,

இன்னும் நல்லாவும் புரியும்."

கிரண், "என்ன ஷால் இது, சுவாரஸ்யமா இருக்குன்னு சர்வ சாதாரணமா சொல்லிட்டே?!

எச்ச கச்சமா அட்டகாசமா, டெர்ரி·பிக்கா, இருக்குன்னு சொல்லணும்." என்றான்.

சூர்யா அவர்கள் பரபரப்பில் பங்கேற்றுக் கொள்ளவில்லை. சில நொடிகள் ஆழ்ந்த யோசனையில் இருந்தார். பிறகு மிகவும் கனத்த தொனியில், "டெர்ரி·பிக்கா இருக்குன்னு நீ சொல்றே கிரண். எனக்கென்னவோ

டெர்ரி·பையிங்கா, ரொம்ப பயமூட்டக் கூடியதா இருக்குன்னு தான் தோணுது."

நாகு கொஞ்சம் உஷ்ணத்துடன், "என்ன சூர்யா இப்படி சொல்லிட்டே? எங்க தொழில்நுட்பம் எவ்வளவு பிரமாதமா முன்னேறியிருக்கு? அது மேல சேத்தை வாரி அடிக்கறயே?!" என்றார்.

சூர்யா நிதானத்தோடு பதிலளித்தார். "நாகு, இது மிகவும் வியக்கத் தக்க முன்னேற்றந்தான். இல்லைன்னு நான் சொல்லவே இல்லை. இதனால பல நற்பலன்களும் மனித இனத்துக்குக் கிடைக்கும். அதையும் நான்

மறுக்கலை, பாராட்டத் தக்கதுதான். ஆனா சில விஞ்ஞான முன்னேற்றங்களுக்கு இரண்டு பக்கங்கள் இருக்கு. அவற்றை நாம இப்ப பேசிக்கிட்டா மாதிரி நல்ல விஷயங்களுக்குப் பயன் படுத்தலாம். ஆனா, அதே தொழில்

நுட்பத்தை, மிகத் தீய நோக்கங்களுக்கும் பயன்படுத்தலாம். ஆல்ப்ரெட் நோபெல் கண்டு பிடித்த டைனமைட், அப்புறம் அணுசக்தி, இப்படி பலப்பல உதாரணங்கள் இருக்கு."

நாகு குறையாத சூட்டோடு, "சரி, சரி அதெல்லாம் எல்லாரும் சகஜமா விஞ்ஞான முன்னேற்றங்களைப் பத்திப் பிதற்றறதுதானே? எங்க தொழில் நுட்பத்துல அப்படி என்ன தீய விளைவைப் பாத்துட்டே நீ?!"

நாகுவின் கேள்வி சூர்யாவுக்கு மிகவும் வியப்பை ஏற்படுத்தியது. "என்ன நாகு இது இப்படி கேட்கறே?! இவ்வளவு அறிவு பூர்வமான முயற்சியில ஈடுபட்டிருக்கற உங்களுக்கு நான் சொல்றது விளங்கலையா? அதைப் பத்தி

நீங்கக் கொஞ்சம் கூட யோசிச்சுப் பார்க்கலையா?!" என்றவர் ரிச்சர்டின் முகத்தில் ஒரு கணத்தில் தோன்றி மறைந்த பாவனையைக் கவனித்து விட்டு அவர் பக்கம் திரும்பினார். "என்ன ரிச்சர்ட்? உங்களுக்குக்கூட நான் எந்த

தீய விளைவு களைப் பத்தி சொல்றேன்னு புரியலையா?"

ரிச்சர்ட் முதலில் பதிலளிக்காமல் நிதானமாகத் தலையாட்டினார். பிறகு மெல்லிய குரலில் பதிலளித்தார்.

"சூர்யா நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு எனக்குப் புரியுது. ஆனா இது 1984 இல்லை." என்றார்.

கிரண் ஒன்றும் புரியாமல் "1984-ஆ! நான் அப்ப ஒரு பால் மணம் மாறாத பச்சிளம் பாலகனா இல்லை இருந்தேன்?! அந்த வருஷத்துக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? அப்போ ஒண்ணும் நடந்தா மாதிரி தெரியலையே?"

நாகுவுக்கும் விளங்கவில்லை. "ஆமாம்! அந்த வருஷத்தில விஞ்ஞான முன்னேற்றத்தால எந்தத் தீய விளைவும் ஏற்பட்டதா தெரியலையே?!" என்றார்.

ஆனால், சூர்யாவின் மனத்தோடு ஒன்றிப் போய்ப் பழகியிருந்த ஷாலினிக்கு உடனே புரிந்து விட்டது!

"ஓ! எனக்கும் முதல்ல கொஞ்சம் குழப்பமாத்தான் இருந்தது. இப்ப ரிச்சர்ட் சொன்னதும் நல்லாவேப் புரிஞ்சிடுச்சு. கிரண், நாகு, 1984 ஒரு வெறும் வருஷம் இல்லை. அது ஒரு புத்தகமும் கூட." என்றாள்.

கிரண், "புத்தகமா?! கேள்விப் பட்டதே இல்லையே?!" என்றான்.

ஷாலினி ஆச்சர்யத்துடன் பார்த்தாள்! "கேள்விப்பட்டதில்லையா?! ஆங்கில இலக்கியப் பாடத்துல இதைப் படிக்க சொல்லலியா? Big Brother-ன்னாவது கேள்விப்பட்டிருக்கணுமே?"

கிரண், "எனக்குத் தெரிஞ்ச பிக் ப்ரதர், டெலவிஷன்ல வர ரியாலிடி ஷோ தான்!" என்றான்.

ஷாலினி, "நாசமாப் போச்சு. கிரண் நீ டெலவிஷன், வீடியோ கேம்ஸ்லிருந்து கொஞ்சம் உன் மூக்கை எடுத்து புத்தக உலகத்துலயும் கொஞ்சம் உலாவணும். இல்லைன்னா உன் மண்டையில வார்த்தை களுக்கே இடம்

இல்லாம வெறும் படங்கள் மட்டுந்தான் ஓடும்!" என்றாள்.

அதற்கு சூடாக எதோ பதில் சொல்ல வாயெடுத்த கிரணை சூர்யா இடைமறித்து தடுத்தார். "உன் விஷயம் போகட்டும் கிரண். இப்போ நாம பேசிக்கிட்டிருக்கற விஷயத்துக்கு வருவோம். ரிச்சர்ட், ஷாலினி சொன்ன 1984

-ங்கற புத்தகத்துல கற்பனையா சொல்லியிருக் கற விஷயங்களைத்தான் நானும் குறிப் பிட்டேன். அந்த புத்தகத்துல எழுத்தாளர் ஜார்ஜ் ஆர்வெல், அரசாங்கம் தன் குடிமக்களை சதா சர்வகாலமும் கண் காணிக்கறதைத் தான்

'பிக் ப்ரதர்'னு குறிப்பிட்டிருக்கார். அதுல ஒரு சர்வாதிகார அரசு எப்படியெல்லாம் குடிமக்களைக் கட்டுப்படுத்த முடியும்னு விவரிக்கப்பட்டிருக்கு. அதுல ஒரு விஷயம் 'எண்ணக் காவல்' (thought police). அதாவது

அரசுக்கு எதிரான எண்ணங்களை குடி மக்கள் நினைத்துப் பார்த்தால் கூட அதைத் தெரிஞ்சுக்கிட்டு அவர்களைக் கட்டுப்படுத்த தீவிரமான நடவடிக்கை எடுக்கறது. அதுக்கும் மேல, சதா சர்வகாலமும் கொள்கைப் பிரசாரத்தின்

மூலம் அவர்களை ப்ரெயின் வாஷ் செய்யறது, இந்த மாதிரியெல்லாம் விவரிச்சிருக்கார். ஆனா நாம இப்ப பார்த்த தொழில் நுட்பம் அதையெல்லாம் தூக்கி சாப்பிட்டுடற மாதிரி இருக்கு. இது உடலுக்கு வெளியிலிருந்தே

எண்ணங்களை உணர்வது மட்டுமல்லாம, நேரடியா கட்டுப்படுத்தக் கூடியது. இது ஒரு கொடிய அரசாங்கத்துக்கிட்ட கிடைச்சா அவங்க எந்த மாதிரி பயன்படுத்துவாங்க நினைச்சுப் பாருங்க! இதால ஏற்படக் கூடியத் தீய

விளைவுகளை நினைச்சுப் பார்த்தாலே கதி கலங்குது."

சாதாரணமாக நிதானமானக் கட்டுப்பாட்டு டன் ஒரு சில வார்த்தைகளையே பேசும் சூர்யா, உணர்ச்சி பூர்வமாகக் கொட்டி விட்ட சிந்தனைகள் மற்றவர்களை மலைக்க வைத்து விட்டன! ஒரு சில நொடிகள் யாரும் எதுவும்

பேசவில்லை. அங்கு நிலவிய அமைதியை, ஆராய்ச்சிசாலையில் எழுந்த சிறிய ஒலிகளே அவ்வப்போது மெல்லக் கலைத்தன.

இறுதியில் நாகுதான் பேசினார். "ஓ, கமான் சூர்யா. எங்க வேலை நல்ல விளைவுகளுக்குப் பயன் படக் கூடிய மிக முன்னேறிய தொழில்நுட்பங்களை உருவாக்கறது. அதை சரியான படி பயன்படுத்தறதும் தீய முறையில

பயன்படுத்தறதும் சமுதாயத்தோட முடிவு. அதுக்கு நாங்க எப்படி பொறுப்பாக முடியும்?! அது மட்டுமில்லை. இந்த மாதிரி இரு முறைகளிலும் பயன்படற தொழில்நுட்பங்கள் நிறைய இருக்கு! எங்களது மட்டுமில்லையே?!

வரலாறு முழுக்க இதே கதைதானே?!
Click Here Enlargeமேலும் நீ மண்மேட்டை மலையாக்கப் பாக்கறே! எங்கத் தொழில் நுட்பம் எங்கே, சர்வாதிகார அரசாங்கம் எங்கே?! இதெல்லாம் வீணான கற்பனை. அதை மூட்டை கட்டி வச்சுட்டு எங்க பிரச்சனையைத் தீர்க்க என்ன வழின்னு

பாரு!"

நாகு பேசி முடிப்பதற்குள் மீண்டும் அமைதியடைந்து விட்ட சூர்யா, தன் வழக்கமான பாணியில் நிதானமாகத் தொடர்ந்தார். "உண்மைதான் நாகு. வரலாறு பூரா இந்த மாதிரிப் பல தொழில்நுட்பங்கள் படைக்கப் பட்டிருக்கு.

அணுசக்தி ஒரு மிக நல்ல உதாரணம். ஆனா, எனக்கென்னவோ சமீப காலத்துல ஏற்பட்டு வர விஞ்ஞானத் தொழில்நுட்பங்கள் ஒரு வரையறையைத் தாண்டுதோன்னு கேள்விக் குறியா இருக்கு. அதுவும் வாழைப் பழத்துல

ஊசி ஏத்தறா மாதிரி நமக்கே சரியாப் புரியாம மனித வாழ்க்கையில புகுந்து விளையாட ஆரம்பிக்கறதாவும் தோணுது. க்ளோனிங், உங்க உணர்வுத் தூண்டல், RFID போன்ற தொழில்நுட்பங்கள் மிகவும் பயன்தரக்

கூடியதுதான். ஆனா அவைகளோட தீய பக்கவிளைவுகள் (side-effects) எங்கே கொண்டு போய் விடும்னுதான் தெரியலை."

ஷாலினியும் அவரோடு சேர்ந்து கொண்டாள். "நானும் விஞ்ஞானத் துறையில ஆழமா ஈடுபட்டிருக்கறவதான். ஆனா சூர்யா சொல்றதுல மிகவும் உண்மை இருக்குன்னு நினைக்கிறேன். இப்ப ஆராய்ச்சி செய்யற விஞ்ஞானிகள்

தங்கள் கண்டுபிடிப்புகளால என்னென்ன நடக்கலாம்னு முழுக்க யோசிச்சுப் பார்க்காம சுயநலத்துக்காகவும் தற்பெருமைக்காகவும் எதை வேணா உருவாக்கலாம்னு நினைக்கறாங்க போலி ருக்கு. இன்னும் கொஞ்சம்

பொறுப்போட நினைச்சுப் பார்க்கணும்."

ரிச்சர்டும் மிகவும் யோசனையோடு தலையாட்டி ஆமோதித்தார். "சூர்யா, ஷாலினி, நீங்க சொல்றது சரிதான். விஞ்ஞானிகள் சமூகம் சில சமயம் வருங்காலத்தைப் பத்தி நல்லா யோசிச்சு பார்க்காம தங்கள் பேருக்கும்

புகழுக்கும் தேவையானபடி என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் செஞ்சிடறாங்க. அதனால உண்டாகக் கூடிய தீய விளைவுகளையும் கொஞ்சம் யோசிச்சு, அதை தடுக்க, அல்லது பெரிதும் குறைக்கக் கூடிய

மாதிரி ஆராய்ச்சியை மாத்திக்கிட்டா நல்லதுதான். நாங்களும் செய்வோம் கவலைப் படாதீங்க."

அதைக் கேட்டு உற்சாகமடைந்த சூர்யாவின் கண்ணில் எதோ ஒரு வித ஒளி மின்னலாகத் தோன்றி மறைந்ததை ஷாலினியைத் தவிர யாரும் கவனிக்கவில்லை. சூர்யாவின் மனத்தை நன்கு அறிந்த ஷாலினி அவருக்கு எதோ

யூகம் தோன்றியிருக்க வேண்டும் என்று புரிந்து கொண்டாலும் அதைப் பற்றி விசாரிக்கும் தருணம் அதுவல்ல என்று நன்றாகவே உணர்ந்திருந்ததால் பிறகு கேட்கலாம் என்று மனதுக்குள் குறித்து வைத்துக் கொண்டாள்.

கிரணோ, இன்னும் விளையாட்டுப் போக்கிலேயே இருந்தான். "ஆனாலும் நீங்கெல்லாம் சுத்த மடிசஞ்சிகளா இருக்கீங்க! எனக்கென்ன, ஒரு பிரமாதமான வீடியோ கேம் உருவாக்கினா ரொம்ப சந்தோஷந்தான். மீதியெல்லாம்

தானே ஒரு வழிக்கு வந்துடும்!"

ஷாலினி அவனைக் கடிந்தாள். "சே, கிரண், உடம்பு வயசு வளர்ச்சி அளவுக்கு மூளைக்கும் முதிர்ச்சி குடு! கொஞ்சம் உன் விளையாட்டை விட்டு உலகத்துக்கு எது நல்லதுன்னு யோசிக்க ஆரம்பி!" என்றதும் கிரண் இரு

கைகளையும் தூக்கி விளையாட்டாக சரணாகதி அடைவது போல் காட்டி, "சரிம்மா பாட்டியம்மா! திரும்ப உன் அர்ச்சனையை ஆரம்பிச்சுடாதே! நான் உலகத்தைப் பத்தியும் யோசிச்சுடறேன்!" என்றான்.

சூர்யா இடைபுகுந்தார். "சரி, நாம பார்க்க வந்த விஷயத்தை விட்டுட்டு ரொம்பவே தூர விலகிப் போயிட்டோம். உலகக் கவலையை கொஞ்ச நேரம் தள்ளி வச்சுட்டு இப்போதைய பிரச்சனையைக் கவனிக்கலாம் வாங்க"

என்றார்.

நாகுவும் ஆமோதித்தார். "பர்·பெக்ட்! அதுதான் சரி. மேல நடத்தலாம். ஆங்! நாம எங்கே இந்த பேச்செல்லாம் ஆரம்பிச்சோம்?" என்றார்.

ரிச்சர்ட் மீண்டும் பொங்கி விட்ட உற்சாகத்துடன் தூண்டினார். "இவங்கெல்லாம் நம்ம தொழில் நுட்பத்தை நேரடியா அனுபவிக்கறத்துக்காக மெய்நிகர் சாதன உடுப்பைப் போட்டுக்கிட்டிருந்தாங்க. அதைப் பத்தி கேள்வி கேட்கப்

போக, வேற எங்கெங்கயோ போயிட்டோம்! ஊம்! வாங்க, வாங்க, வாங்க! எல்லாத்தையும் மாட்டிக்கிட்டு, எங்க மெய்நிகர் அனுபவத்தை ஆரம்பிக்கலாம்!"

கிரண் துள்ளினான். "ஆமாமாம்! எனக்கு இனிமே தாங்க முடியாது. இது எப்படி இருக்குன்னு உடனே அனுபவிச்சாகணும்!"

அத்துடன் யாவரும் சாதனங்களையும் முழு உடல் உடுப்பையும் கட கடவென அணிந்து கொண்டனர். ரிச்சர்ட் "எல்லாரும் தயாரா" என்று கேட்டவுடன் மற்றவர் அனைவரும் தலையாட்ட, கிரண் வலக்கை கட்டை விரலை

உயரத் தூக்கி, "யா!" என்று கத்தினான்!

ரிச்சர்ட் கம்ப்யூட்டரில் எதையோ க்ளிக் செய்தார். உடனே அவர்கள் முன் விரிந்தது ஒரு மாய உலகு.

அவர்கள் முன் விரிந்தது என்று சொல்வதை விட, அவர்கள் யாவரும் ஒரு கணத்தில் அந்த மாய உலகுக்கு தூக்கிச் செல்லப் பட்டு முழுவதுமாக ஆழ அமிழ்த்தப் பட்டனர் (total deep immersion) என்றே கூறலாம்!

முதலாவதாக, திடீரென அவர்கள் ஒரு கடற்கரையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களைச் சுற்றி பல பேர் நடந்து கொண்டிருந்தனர். திடீரென கிரண், "ஹே buddy எங்க போறேன்னு பாத்துப் போ! அப்படியே மேல

இடிக்கறே?!" என்றான். நாகு சிரித்து விட்டு, அது எங்க ஹேப்டிக் ப்ரெஷர் தூண்டுதல் கிரண்! எப்படி இருக்கு!" என்றார். கிரண், "வாவ்! நான் அவன் என்னை நிஜமாவே இடிச்சது போல் இருந்தது." என்றான்.

ஷாலினி சிலிர்த்துக் கொண்டாள். "ரொம்ப காத்தடிக்கறா மாதிரி இருக்கு. கொஞ்சம் தூறல் விழறா மாதிரியும் இருக்கு. நிஜமாவே அலைகள் பக்கத்துல மணல் மேல நடக்கறா மாதிரி இருக்கு. பிரமாதம்!" என்றாள்.

ரிச்சர்ட் அப்போது கம்ப்யூட்டரில் வேறு எதையோ அழுத்தவும் திடீரென அனைவரும் ஒரு அறைக்குள் ஒரு மேஜையைச் சுற்றி அமர்ந்திருந்ததாகத் தோன்றியது! கிரண் ஏமாற்றத்தோடு, "ஓ...! இது சுத்த மோசம். நான்

அப்பதான் ரெண்டு பீச் பேப்ஸைப் பாத்துட்டு அவங்க பின்னாடி போகலாம்னு ஆரம்பிச்சேன்!" என்றான். அவன் பக்கத்தில் அமர்ந்தது போல் இருந்த ஷாலினியின் மெய்நிகர் பிம்பம் அந்த மாய உலகிலும்

கிரணின் தலையைத் தட்டியது! "சீ கிரண். எங்க போனாலும் உனக்கு அதே புத்திதானா?! அதை விட்டுத் தள்ளு!" என்றாள்.

ரிச்சர்ட் அதைக் கேட்டு வாய் விட்டு பலமாக சிரித்தார். "வயசுப் பையன் தானே, விட்டுடுங்க ஷாலினி. இப்ப இல்லாம எப்ப வரும் அந்த புத்தி?! சரி, நீங்க உலகத்துல எங்கெல்லாம் போயிருக்கீங்க, எங்க போகணும்னு

நினைச்சு இன்னும் போக முடியாம அதிருப்தியா இருக்கீங்க?"

கிரண் வழக்கம் போல் முந்திரிக் கொட்டையாக பந்திக்கு முந்திக் கொண்டு, "ஊ, ஊ, ஊ! பிக் மீ, என்னைக் கேளுங்க!" என்று கையை உயர்த்தி குதித்தான்.

ரிச்சர்ட் மீண்டும் குதூகலத்துடன் சிரித்து விட்டு, "உன் உற்சாகமான ஸ்பிரிட் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு கிரண். சரி, நீ சொல்லு உனக்கு எங்கே போக ஆசை?"

கிரணுக்குப் பதில் ஷாலினியே பேசினாள். "அவனுக்கு எங்கே போகணும்னு எனக்குத் தெரியும். சொல்லட்டுமா?"

கிரண் அவளைத் தூண்டினான். "சொல்லி டேன் பார்க்கலாம்!"

ஷாலினி சளைக்காமல் உடனே, "என்ன, அந்த டா வின்சி கோட்-ங்கற புத்தகத்துல சொல்ற சம்பவங்கள் நடக்கற இடங்களுக் கெல்லாம் போகணும் அதானே?!" என்றதும் ஆச்சர்யத்தால் கிரணின் வாய் பிளந்தது பிளந்த

படியே நின்றது!

சில நொடிகளுக்குப் பிறகுதான் கிரணால் பேசவே முடிந்தது. "யம்மாடியோவ்! செம அடி அடிச்சிட்டே ஷால்! அதேதான்! உனக்கு எப்படித் தெரிஞ்சுது?!" என்றான்.

ஷாலினி முறுவலித்தாள்! "அய்யே, இதைக் கண்டு பிடிக்க ஒண்ணும் சூர்யா வர வேண்டிய அவசியமில்லை. நீதான் ஒரு வருஷமா அந்த புத்தகத்தைப் படிச்சிட்டு எங்க எல்லார் பிராணனையையும் எடுத்துண்டி ருக்கயே?!

பாரிஸ் போயி லூவ் மியூசியம் பாக்கணும், இங்க்லேண்ட் போயி எதோ மாதா கோவில் பார்க்கணும்னு! எங்களுக்குப் பைத்தியம் பிடிக்காத குறைதான்! போய்த் தொலையேண்டான்னா கேக்கறதில்லை, வகேஷனே

இல்லைன்னு முக்கி முனக வேண்டியது!" என்றாள்.

ரிச்சர்ட் மீண்டும் சிரித்து விட்டு, "கிரண், யூ ஆர் இன் லக்! அந்த எல்லா இடத்தையும் காட்ட முடியாட்டாலும், நாம நிச்சயமா லூவ் போகலாம். அதுலயும் ஒரு ஸ்பெஷல் ட்ரீட் இருக்கு. இதோ பார்!" என்று கம்ப்யூட்டரில்

எதையோ தட்டவும் யாவரும் திடீரென பாரீஸில் உள்ள லூவ் மியூசியத்தின் வெளியில் இருந்தனர்!

முதலாவதாக, கிரண் மியூசியத்தின் வெளியிலிருந்த கண்ணாடி பிரமிடை, பிளந்த வாய் மூடாமல் சுற்றி சுற்றி வந்து கொண்டு "வாவ், வாவ்! என்னால நம்பவே முடியலை. புத்தகத்துல சொன்ன மாதிரியே இருக்கே?!"

என்று கூறிக் கொண்டே இருந்தான்! பிறகு கையை நீட்டி தொட்டுப் பார்க்கப் போனான். கை நேராக பிரமிடின் கண்ணாடிச் சுவருக்குள் உள்ளே போய் விட்ட மாதிரித் தெரியவே திடுக்கிட்டான்! அதைப் பார்த்து ஷாலினி

சிரிக்கவே, நாகுவும் சிரித்துக் கொண்டு, "கிரண், பார்த்தியா, மெய்நிகர் மாயம் உன்னையும் ஏமாத்திடுச்சு! அது ஒரு முப்பரிமாண பிம்பந்தான்." என்றார்.

சூர்யா உடனே குறுக்கிட்டார். "சரி, பிம்பந்தான், ஆனா ஏன் உங்க தொழில் நுட்பம் அந்தக் கண்ணாடி மேலக் கை பட்டு தடுக்கறா மாதிரி செய்யலை?!" என்றார்.

இம்முறை ரிச்சர்ட் வியப்பால் வாய் பிளந்தார். "அமேஸிங்! சூர்யா. படு குறியா பாயின்ட்டைப் பிடிச்சிட்டீங்க. நாங்க இது வரை செஞ்சிருக்கற ஹேப்டிக்ஸ்ல ஒரு பொருளின் மேல் விரல்பட்டாலோ அல்லது மேல எதாவது

மோதினாலோ எப்படி உணர்ச்சி வரும்ங்கற மாதிரிதான் செஞ்சிருக்கோம். ஆனா, கிரண் கையை அந்த கண்ணாடி சுவரைத் தாண்டி நீட்டிட்டதால அதுக்கேத்தா மாதிரி உணர்ச்சிதான் வருது.

நடுவில வர தடைகளைத் தாண்ட முடியாம நிறுத்தறது எப்படின்னு இப்பதான் ஆராய்ச்சி செஞ்சுக்கிட்டிருக்கோம். கையை மேல நீட்ட முடியாம தடுத்து நிறுத்தக்கூடிய சாதனம் இன்னும் கண்டு பிடிக்கலை!" என்றார்.

சூர்யா "ஓ! இப்பப் புரியுது!" என்று தலையசைத்து ஏற்றுக் கொண்டு, மேலும் வினாவினார். "அதுக்கு ஏன் சாதனம் வேணும்? நீங்க உணர்ச்சிகளைத் தூண்டறா மாதிரி உடல் அசைவுகளையும் மூளை ந்யூரான்களின்

ஸிக்னல்களைத் தூண்டிக் கட்டுப் படுத்தினா அதைச் செய்யலாம் இல்லையா?" என்றார்.

அதைக் கேட்ட ரிச்சர்டும் நாகுவும் அதிர்ச்சியடைந்து, விழுவது போல் ஆடியே போய் விட்டனர்!

அதன் பிறகு நிலவிய மௌனத்தை ரிச்சர்ட்தான் சில நொடிகளுக்குப் பிறகு கலைத்தார். "நீங்க ரொம்ப அபாயகரமான ஆசாமி மிஸ்டர் சூர்யா! உங்க மூளை ரொம்ப ரொம்ப வேகமா புது விஷயங்களை உறிஞ்சுகிட்டு அதுக்கும்

மேல தாவிடுது! நீங்க சொல்றது ரொம்ப சரி. மெக்கானிக்கல் சாதனத்துக்குப் பதிலா, ந்யூரோ ஸ்டிமுலேஷன் இப்பதான் தக்க அளவுக்கு முன்னேறியிருக் கறதால, அது மூலமா செய்யலாம்னு நாகுவும் நானும்

சமீபத்துலதான் முடிவு செஞ்சோம். போன வாரம் தான் என்னோட டீம் ப்ரோட்டோடைப் செஞ்சு மிகக் சிறிய அளவுல முன்னேறியிருக்காங்க. நாகுவுக்குக் கூட இன்னும் நான் அறிவிக்கலை! அதை படக்குன்னு போட்டு

உடைச்சிட்டீங்களே, சபாஷ்!" என்றார்.

அதைக் கேட்ட நாகு "வாவ்!" என்றது மட்டுமே கூறி வேறு எதுவும் சொல்லவும் செய்யவும் முடியாமல் அசந்து போய் சிலை போலாகிவிட்டார்! ஷாலினியும் தொழில் ரீதியான சுவாரஸ்யத்தால் இந்த தொழில்நுட்ப

முன்னேற்றம் எப்படியெல்லாம் முடவர் களுக்குப் பயன் படுத்தலாம் என்று கணக்குப் போட ஆரம்பித்து விட்டாள்! சூர்யாவோ தன் 1984 - கவலைக்குள் மேலும் ஆழ்ந்தார்.

கிரண் எல்லாரையும் மீட்டான்! "சரி, சரி, அது ரொம்பப் பிரமாதந்தான், இல்லேங்கலை! ஆனா இப்ப லூவ் மியூசியத்துக்குள்ளே போகலாம் வாங்க! எதோ ஸ்பெஷல் ட்ரீட்னு ரிச்சர்ட் ப்ராமிஸ் பண்ணியிருக்காரே?!"

அனைவரும் சுதாரித்துக் கொண்டு மியூசியத்துக்குள் நுழைந்தனர். அங்கு அவர்கள் கண்ட மாயாஜாலம் அவர்களை வியக்க வைத்தாலும், அதற்கடுத்து நடந்தது அதிர்ச்சியளித்தது மட்டுமல்லாமல், அபாயத்தின்

எல்லையையேக் காட்டி விட்டது.

தொடரும்

கதிரவன் எழில்மன்னன்
Share: 
© Copyright 2020 Tamilonline