Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2002 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | தகவல்.காம் | ஜோக்ஸ் | முன்னோடி | அமெரிக்க அனுபவம் | கவிதைப்பந்தல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | வாசகர் கடிதம் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
அமெரிக்க அனுபவம்
அமெரிக்கா: மனதைத் தொட்டதும் சுட்டதும்
- டி. எஸ். பத்மநாபன்|ஆகஸ்டு 2002|
Share:
ஆயிற்று - அமெரிக்கா வந்து ஆறுமாதங்களா கின்றன. தாயகம் திரும்பும் நேரம் நெருங்கிவிட்டது. இந்த ஆறுமாதங்களில் எனது மனதைத் தொட்ட - சுட்ட நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்க்கிறேன்.

முதலில் இந்த நாட்டு மக்கள். அவர்களது சிநேகமான மலர்ந்த முகங்கள். பஸ்ஸில், நடைபாதையில் பார்க்கும் போது, 'ஹாய்' என்று ஏதோ பழகியவர்களைப் போல் சிரித்துச் செல்லும் பண்பு. வலிய எங்களிடம் வந்து ''நீங்கள் இந்தியா விலிருந்து வந்திருக்கிறீர்களா?' என்று கேட்டு, அவர்கள் இந்திய அனுபவத்தைப் பகிர்ந்திருக் கிறார்கள் சிலர் - போட்டோ, எடுத்துக் கொள்ளும் போது ''நான் வேண்டுமானால் உங்கள் அனைவரையும் சேர்த்து எடுக்கட்டுமா'' என்று வலிய வந்து உதவி செய்பவர்கள்.

அடுத்ததாக, இங்குள்ளவர்களின் கட்டுப்பாடு - விதிகளை மதிக்கும் பண்பு. நிற்கும் 'Q'விலும் ஒழுங்கு. ஒருவரை ஒருவர் முண்டியடித்துச் செல்வதில்லை. அவர்களது முறை வரும்போது, 'நான் உங்களுக்கு உதவட்டுமா' என கவுண்டரில் உள்ளவர்கள் கூப்பிட்ட பிறகே செல்லும் கட்டுப்பாடு. 'நில்' என்றிருக்கும் இடங்களில் நிஜமாகவே நிறுத்திச் செல்லும் காரோட்டிகள். குறிப்பிட்ட நேரத்துக்கு, கடிகாரத் தைச் சரி செய்து கொள்ளலாம் என்ற அளவுக்கு வரும் பேருந்துகள் (யாராவது பின்னால் வருவதைப் பார்த்தால் குஷியாக வேகமாக ஓட்டிச் செல்லும் டிரைவர்கள் இல்லை. நிறுத்தி ஏற்றிக் கொள்கி றார்கள்.

அடுத்ததாக, இங்குள்ள மருத்துவமனைகள், வசதிகள். இன்ஷ்யூரன்ஸ் மட்டும் இல்லாவிட்டால், வைத்தியம் என்பதே இங்கு பார்த்துக் கொள்ள முடியாது. நம்மூரில் நினைத்த நேரத்தில் காய்ச்சல் என்றால் டாக்டரிடம் ஓடி விடலாம். இல்லாவிட்டால் நமக்குத் தெரிந்த மருந்தை, மருந்து கடையில் கேட்டே வாங்கிவிடலாம். இங்கே.. மூச்..! அவசரம் என்றால்கூட பல மணி நேரம் காத்திருக்க வேண்டும். அப்பாயின்டமெண்ட் இல்லாமல் டாக்டரைப் பார்க்கவே முடியாது. மருந்து சீட்டுக்கு கடைகளில் மருந்து வாங்கும் போதுகூட ஆயிரத்தெட்டு கேள்விகள். இதே மருந்து மேலும் தேவை என்றால், டாக்டர் சொல்லலாமல் வாங்க முடியாது. அப்படியொரு நியாயமான கட்டுப்பாடு.

நம்மூர் டாக்டர்களிடம் சந்தேகம் கேட்டால் எரிந்து விழுவார்கள். ஆனால் இவர்களோ வியாதியைப் பற்றி விலாவரியாக விளக்கிவிட்டு மேலும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள் என்கிறார்கள். ஒளிவு மறைவில்லாத சிகிச்சை!

கடைகள், சாலைகள்! அப்பா, ஒவ்வொரு கடையும் இங்கே ஏதோ நாலுதெருக்களைக் கடப்பது போல் எவ்வளவு பெரிது. சங்கிலித் தொடர் கடைகள் என்கிறார்கள். ஆல்பர்ட்சன்ஸ், subway, லாங்ஸ் என்று அமெரிக்கா முழுதும் பரவியிருக்கின்றன. இங்கு சன்னிவேலில் நான் வாங்கிய பொருளை நியூயார்க்கில் திருப்பிக் கொடுக்க முடியும். பொருள் பிடிக்கவில்லை என்றாலோ, சரியில்லை என்றாலோ, ஒரு மாதத்தில் திருப்பிக் கொடுக்கலாம் - ஏன் என்று கேட்பதில்லை. இதற்கென்று (திரும்பிப்பெற்றுக் கொள்வதற்காக) தனிப்பிரிவுகூட இருக்கிறது. 'பில்' போடும் போதே ஹாய் எப்படியிருக்கிறீர்கள் என்று விசாரிக்கிறார்கள். செல்லும் போது, 'இது நல்ல நாளாக இருக்கட்டும்' என்கிறார்கள். இதெல்லாம் நம்மூரில் கேள்விப்படாத ஒன்று.

வரி கட்டாமல் எப்படி சாமான்களை பில் போடாமேல வாங்க முடியும் என்று யோசித்து வாங்குவதில் கில்லாடிகள் நாம். ஆனால் இங்கோ ஒரு சின்னப்பொருள் என்றாலும் பில் வாங்காமல் முடியாது. வரி கொடுத்தே ஆக வேண்டு. இந்த வரி வசூலில்தான் நகரின் வளர்ச்சித்திட்டங்கள் இயங்குகின்றன. வசதிகள் வேண்டும் - வரிகள் கூடாது என்ற நமது கோரிக்கை இங்கு பலிக்காது. (ஆனாலும் வருமான வரி ஏய்ப்பு செய்கிறவர்கள் இங்கு நிறைய உண்டாம். சொல்கிறார்கள்.

மேலும் இங்கு மனதுக்கு மிகவும் பிடித்தது, ஒவ்வொரு கடையிலும், ஒவ்வொரு முக்கியமான இடங்களிலுமுள்ள ரெஸ்ட் ரூம்கள், ரெஸ்ட் ரூம்கள் இல்லாமல் இங்கு கடைகளோ, ஹோட்டல்களோ இருக்க முடியாது.

அடுத்து குழந்தைகள் பிறப்பில், வளர்ப்பில் இங்குள்ளவர்கள் காட்டும் அக்கறை. ஒவ்வொரு மாதமும் எடுத்துக் கொள்ளும் ¦டிக்கல் செக் அப் காட்டுகின்ற கவனம். மருத்துவர் எடுத்துக் கொள்ளும் கவனம் - பிரசவத்திற்கு முன்பே, கணவன் மனைவி இருவருக்கும் வகுப்பு எடுக்கிறார்கள். என்ன செய்ய வேண்டும், செய்யக்கூடாது என்று - பிரசவத்தின் போது, தாய்கூட இருக்க வேண்டியதில்லை. கணவன் அருகில் இருக்க வேண்டும். தாய்ப்பால் கொடுத்துத் தான் குழந்தைகள் வளர வேண்டும் என்று எண்ணும் தாய்மார்கள், அதில் அவர்களுக்குள்ள கர்வம்! குழந்தை பிறப்பதற்கு ஒரு மாதம் முன்னால் பேபி ஷவர் என்று கொண்டாடுகிறார்கள் நம்மூர் சீமந்தம் போல. நண்பர்கள், உறவினர்களைக் கூப்பிட்டு. விதவிதமான விளையாட்டுகளை ஏற்பாடு செய்து நிகழ்ச்சியை கலகலப்பாக்குகிறார்கள்.

இந்த ஊர் சாப்பாட்டைப் பற்றிக் கூறியே ஆகவேண்டும். காலையில் 'நாஸ்தா' என்னவென்று கேட்டால் 'பாஸ்தா' என்கிறார்கள். மத்தியானம் பர்கர், மாலையில் பரீட்டா - இங்கு ஏதோ ஆறுமாதம் இருந்து செல்வதற்காக வந்துள்ள நமக்கு, எல்லாமே புதிதாக இருக்கிறது. வத்தல்குழம்பு, சுட்ட அப்பளம் மாதிரி வருமா? இருவருமே வேலைக்குச் செல்பவர் களாக இருந்தால், வாரத்திற்கு வேண்டியதை சனி, ஞாயிற்றிலேயே செய்து பிரிட்ஜில் வைத்து விடுகிறார்கள். நமக்கோ நேற்றைய பழையதே இன்று பிடிப்பதில்லை. ஆனால் சன்னிவேல் மாதிரி இடங் களில் இருப்பவர்களுக்குப் பிரச்னை இல்லை. தாஷ்பிரகாஷ், உடுப்பி, கோமளவிலாஸ் (இப்போது சரவணபவன் கூட இங்கு வந்துவிட்டது)

நம்மூரில் அழுமூஞ்சி சீரியல்களாகப் பார்த்தவர் களுக்கு, ·ப்ரெண்ட்ஸ், எவரிபடி லவ்ஸ் ரொமான்ஸ் போன்ற காமெடி சீரியல்கள் வித்தியாசமானவை.
இங்கே நாங்கள் கண்ட மனதுக்கு ஒவ்வாத சில விஷயங்களையும் கூறியே ஆகவேண்டும். நமக்குப் பிடிக்கவில்லை என்பதால், இது சரியில்லை என்று சொல்லமுடியாது. நமது கலாசாரத்துடன் சேராதது என்று வேண்டுமானால் கூறலாம்.

ஒளிவுமறைவில்லாத சில டிவி காட்சிகள். இந்த ஊரில் சில டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது, நம்மூரில் ப்ளு·பிலிமிற்கும், மலையாளப்படங் களுக்கும் நடுவே காட்டப்படும் பிட்களுக்கும், ·பேஷன் சேனலுக்கும் அலைபவர்களை நினைத்துப் பார்க்கிறேன். அவர்களுக்குப் பெரிய விருந்தே இருக்கிறது இங்கு. ''ஷ்யாம் சிநேகாவை உதட்டில் கடித்தாரா' என்று பட்டிமன்றம் வைக்கப்படுகிறது தமிழ்நாட்டில். ஆனால் இங்கோ, ஏர்போர்ட்டில், கடைகளில், பொது இடங்களில் உதட்டைக் கடித்துக் கொண்டிருப்பது, நமக்குப் பார்க்கும்போது என்னவோ போல் தான் இருக்கிறது.

பெண்கள் சுதந்திரம் என்று சொல்லப்படுகிறதே தவிர இங்கு இந்தியாவை விட மோசம் என்று சொல்கிறார்கள். அதுபற்றி அதிகமாக தெரியாத தால் கருத்துக்கூற விரும்பவில்லை.

இங்கு மிகவும் சர்வசாதரணமான விஷயம் பள்ளிப் பருவத்திலேயே, மாணவ மாணவியர் நட்பு(?) வைத்துக்கொள்வது. பாய் ·பிரெண்ட் அல்லது கேர்ள் ·ப்ரெண்ட் வைத்து கொள்ளாவிட்டால் அவர்கள் ஒருமாதிரியாக பார்க்கப்படுகிறார்கள்.

மனதைபாதிக்கும் மற்றொரு நடைமுறை, சின்ன வயதிலேயே (பதினைந்து பதினாறு வயதிலேயே) பெற்றோரை விட்டு பிள்ளைகள் பிரிந்திருப்பது ஒரு வயதுக்குப் பிறகு, பெற்றோர்களைச் சார்ந்திராமல், தன்னைத் தானே பார்த்துக் கொண்டு தன் கால்களிலேயே நிற்க எண்ணும் இந்த நிலை வரவேற்கப்படக்கூடியது என்றாலும், இதனால் பெற்றோர்களும் பிள்ளைகளும் தனியாகப் பிரிந்து பாசம் என்ற இழை அறுந்தே போகிறது. முதிய வயதில் பெற்றோர்களை வைத்துப் பாதுகாக்க வேண்டிய பிள்ளைகள், 'தந்தைகள் தினம்', அன்னையர் தினம்' என்று கொண்டாடி, அன்று பரிசளித்து உறவை நினைவுபடுத்திக் கொள்ள வேண்டிய நிலை.

சிறுவயதுக் குற்றங்கள் - கையிலே துப்பாக்கி ஏந்தி பள்ளி ஆசானையே சுடுவது, வீட்டிலேயே வெடி குண்டுகள் வைத்திருந்து தன் பள்ளியையே வெடிக்க நினைக்கும் பயங்கரம் - இதுபோன்ற பல நிகழ்ச்சிகள், மனதை உண்மையிலேயே உறைய வைக்கின்றன.

மொத்தத்தில் நாங்கள் இங்கு இருந்து ரசித்த ஆறுமாதங்கள் என்றுமே எங்கள் நினைவில் ரீங்காரம் செய்து கொண்டிருக்கும்.

டி.எஸ். பத்மநாபன்
Share: 
© Copyright 2020 Tamilonline