கிருஷ்ண ஜெயந்தி பட்சணங்கள் இஞ்சி சீடை மிளகு தட்டை நாடா தேன் குழல் மைதா மாவு சிப்ஸ் வெல்ல அவல் திரட்டுப் பால் Zucchini சட்னி Zucchini துகையல் Zucchini அடை Zucchini கொத்சு Zucchini மோர்கூட்டு
|
|
|
தேவையான பொருட்கள் பச்சரிசி - 1 ஆழாக்கு வெல்லம் - 3/4 ஆழாக்கு தேங்காய் துருவல் - 1/2 ஆழாக்கு உ. பருப்பு - 4 ஸ்பூன் எள்ளு - 4 ஸ்பூன் ஏலப்பொடி - 2 ஸ்பூன் எண்ணெய் - 2 ஆழாக்கு வெண்ணெய் - 1/2 கரண்டி |
|
செய்முறை
அரிசியை 2 மணிநேரம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி நிழலில் உலரவிட்டு மிக்ஸியில் வழவழப்பாக அரைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து உ. பருப்பை பொன்னிறமாக வறுத்து மிக்ஸியில் அரைக்கவும். அரிசி மாவை இளஞ்சிவப்பாக வறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு வெல்லத்தை கொதிக்க விடவும். வறுத்த அரிசி மாவை வாயகன்ற பாத்திரத்தில் போட்டு சுமாராக கொதித்த வெல்ல பாகை விட்டு கரண்டியால் கிளறவும். ஆறியதும் கையால் கலக்கவும்.
ஏலப்பொடி, உ. மாவு, வெண்ணெய், எள்ளு, தேங்காய் துருவல், இவற்றுடன் தேவையானால் 1/2 கரண்டி தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து சிறு எலுமிச்சை அளவுள்ள உருண்டைகளாக உருட்டவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் வெல்ல சீடை உருண்டைகளை போட்டு நிதானமாக கிளறி பொன்னிறத்தில் எடுக்கவும்.
குறிப்புகள்
அடுப்பு நிதானமாக எரிய வேண்டும். 5, 6 உருண்டைகளாக போட்டு வேக விடவும். ரொம்பவும் நெருக்கமாக போட்டால் உதிர்ந்து விடும். வெண்ணெய் போடாமலும் செய்யலாம்.
இந்திரா காசிநாதன் |
|
|
More
கிருஷ்ண ஜெயந்தி பட்சணங்கள் இஞ்சி சீடை மிளகு தட்டை நாடா தேன் குழல் மைதா மாவு சிப்ஸ் வெல்ல அவல் திரட்டுப் பால் Zucchini சட்னி Zucchini துகையல் Zucchini அடை Zucchini கொத்சு Zucchini மோர்கூட்டு
|
|
|
|
|
|
|