கிருஷ்ண ஜெயந்தி பட்சணங்கள் மிளகு தட்டை நாடா தேன் குழல் மைதா மாவு சிப்ஸ் வெல்ல சீடை வெல்ல அவல் திரட்டுப் பால் Zucchini சட்னி Zucchini துகையல் Zucchini அடை Zucchini கொத்சு Zucchini மோர்கூட்டு
|
|
|
தேவையான பொருள்கள் பச்சரிசி - 3 ஆழாக்கு பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகள் - 1/2 டம்ளர் அல்லது தேங்காய் பால் - 1/4 டம்ளர் அல்லது தேங்காய் தூள் - 1/2 டம்ளர் (இம்மூன்றில் ஏதேனும் ஒன்று) உ. பருப்பு - 1/4 கரண்டி இஞ்சி சாறு - 3/4 டம்ளர் வெண்ணெய் - 1 கரண்டி உப்பு பொடி - தேவையானது எண்ணெய் - 3 ஆழாக்கு எள்ளு - 2 ஸ்பூன்
செய்முறை
அரிசியை 2 மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி காய வைக்கவும். மிக்ஸியில் மாவாக அரைக்கவும்.
வாணலியில் மாவை பொன்னிறமாக வறுக்கவும்.
உ. பருப்பை லேசாக வறுத்து வழவழப்பாக பொடி செய்யவும். வாயகன்ற பேஸினில் அரிசி மாவு,
உ. மாவு, தேங்காய், வெண்ணெய், இஞ்சி சாறு, சுத்தம் செய்த எள்ளு, உப்பு பொடி ஆகியவற்றுடன் தேவையானால் தண்ணீர் சேர்த்து 'பொல பொல' என்று இருக்கும்படி பிசையவும்.
வெள்ளை துணி அல்லது தட்டில் சிறிய உருண்டைகளாக உருட்டி போடவும். வாணலியில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் உருட்டிய சீடை உருண்டைகளை போட்டு ஓசை அடங்கியதும் எடுக்கவும். |
|
குறிப்புகள்
சீடையையை அழுத்தமாக உருட்ட கூடாது. மாவை வறுக்க வேண்டும். இல்லையென்றால் சீடை வெடிக்கும்.
சீடையை எண்ணெயில் போட்டதும் பெரிய தாம்பாளத்தை போட்டு மூடவும். சீடை வெடித்தாலும் எண்ணெய் வெளியில் தெளிக்காது.
இந்திரா காசிநாதன் |
|
|
More
கிருஷ்ண ஜெயந்தி பட்சணங்கள் மிளகு தட்டை நாடா தேன் குழல் மைதா மாவு சிப்ஸ் வெல்ல சீடை வெல்ல அவல் திரட்டுப் பால் Zucchini சட்னி Zucchini துகையல் Zucchini அடை Zucchini கொத்சு Zucchini மோர்கூட்டு
|
|
|
|
|
|
|