Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2002 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | முன்னோடி | தகவல்.காம் | சமயம் | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | சூர்யா துப்பறிகிறார் | சினிமா சினிமா | பொது
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | ஜோக்ஸ் | சிறுகதை | Events Calendar
Tamil Unicode / English Search
பொது
இங்கே கொஞ்சிராம் யார்?
பாரதியார் பாடிய மணக்குள விநாயகர்
பாரதியாரின் விருப்பம்
அட்லாண்டா பக்கம்
அட்லாண்டாவில் கேட்டவை
கீதாபென்னெட் பக்கம்
மூன்று தலைமுறைகளுடன் தொடரும் இசைப் பயணம் - T.V. கோபாலகிருஷ்ணன்
- T.V. கோபாலகிருஷ்ணன்|செப்டம்பர் 2002|
Share:
அன்பார்ந்த வாசகர்களே,

நாக பஞ்சமி, வரலட்சுமி விரதம் மற்றும் ஆவணி பிறந்ததால் இனி தொடர்ந்து வரபோகும் அனைத்துப் பண்டிகைகள், திருவிழாக்கள் ஆகியவற்றிற்காக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சிவஸ்கந்தகிரி அருள்மிகு முருகன் திருத்தலம், லண்டன் சத் சங்கம், உலக இந்து மகா சங்கம் மற்றும் லண்டன் மகா மாரியம்மன் கோயில் ஆகியவற்றிற்குச் செல்லும் வாய்ப்பினை எனது UK பயணத்தில் பெற்றேன்.

நான் சமீபத்தில் அம்மன் தேர் திருவிழாவிற்காக பாடல்களை இயற்றி இசை அமைத்திருக்கிறேன். பாடல்களை எனது சிஷ்யன் M. யோகேஸ்வரன் (இலங்கையில் பிறந்து தற்போது பிரிடிஷ் குடிமகன்) பாடியுள்ளார். இந்தக் கோயில் ஒழுக்கம் தவறாமல், தூய்மை கெடாமல், ஒற்றுமையுடன் திரு. N. சீவரத்னம் அவர்களின் ஒருங்கிணைப்பில் ஒரு ட்ரஸ்டால் சிறந்தமுறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. பூஜையின் போது பூசாரிகள் இசை நயத்தோடு பாடியது, பக்தர்கள் அனைவருக்கும் லாமினேட் செய்யப்பட்ட காகிதங்கள் வழங்கப் பட்டது கண்டு ஆச்சரியத்தில் ஆழ்ந்தேன். இந்தக் கோயிலில் குடிகொண்டுள்ள அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவராகவும் அன்பர்களின் குறைகளைத் தீர்த்ததற்கான பல ஆச்சரிய நிகழ்வுகளை நிகழ்த்தி யவராகவும் கருதப்படுகிறார். கோயிலில் நான் சுமார் ஒரு மணி நேரம் தமிழ்ப் பாடல்களைப் பாடினேன். இதனை நன்கு ரசித்த குழுவினர் எனக்கு ஒரு முத்து மாரியம்மன் டாலரை வழங்கியும் பூர்ண கும்ப மரியாதை அளித்ததும் என்னை திக்கு முக்காடச் செய்தனர். இதனை நான் என்றென்றும் மறக்க மாட்டேன். கச்சேரி நடக்கும் போதும் முடிந்த பிறகும் எந்த முன்னறிவிப்பும் என்று திடீரென்று பல மரியாதைகள் கிடைக்கும் என்பதை எனது குரு பல முறைச் சொல்லியிருக்கிறார். 1960களில் இவற்றை நான் கேரளா மற்றும் ஆந்திரத்தில் அனுபவித் திருக்கிறேன். ஆனால் இத்தகையவை 2002ம் வருடம் UKல் நடந்தது என்பதை எண்ணி என்றென்றும் மகிழலாம்.

நான் கடந்த 20 நாட்களாக லண்டனிலிருந்து சுவிட்சர்லாந்து, திரும்ப சென்னை, அங்கிருந்து பெங்களூர் என்று ஓய்வொழிச்சல் இல்லாமல் அலைந்தேன். ஸ்பிக் - மகே இயக்கத்திற்காக தொடர்ச்சியாக 6 நிகழ்ச்சிகளை, இளைஞர் களிடையே கர்நாடக இசை மற்றும் பரத நாட்டியத்தை பரப்ப வழங்கினேன். இந்த நிகழ்ச்சிகள் பற்றிய விவரங்களையும் இவற்றின் தாக்கத்தையும் நான் உங்களுக்கு பின்னர் வழங்குகிறேன் (நீங்கள் ஆசை பட்டால்!).

1947-51 காலகட்டத்தில் எனது டீன் ஏஜ் பருவத்திற்கும், சென்னைக்கு இடம் பெயர்ந்ததைப் பற்றிக் கூற வேண்டுமானால், முதல் விஷயமாக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன வென்றால், அந்தக் காலத்தில் என்னைப் போன்ற இளைஞர்களின் மன நிலை தான். கொச்சின் மகாராஜாவின் குடிமக்களாக நாங்கள் இருந்த படியாலோ என்னவோ நாங்கள் இந்தியக் குடி மக்களாக நினைக்கவில்லை, நாங்கள் பிரிட்டிஷ் மக்களுக்குச் சமமானவர்கள் என்று எண்ணினோம். எனது தந்தையார் அரச இசைக் கலைஞராக இருந்தபடியாலும், நானே ஒரு திறமை வாய்ந்த இளம் கலைஞர்களுள் ஒருவனாக இருந்தபடியாலும் அரச குடும்பத்துடன் எனக்கு நெருங்கிய நட்பு இருந்தது. அதனால் அனைத்து திருவிழாக்கள், பிறந்த நாள் விழாக்கள் மற்றும் பல விழாக்களுக்கு எனக்கு அழைப்பு நிச்சயம் உண்டு. நானும் இவற்றில் கலந்து கொண்டு ஆடியும் பாடியும் சில சமயங்களில் பரிசுப் பொருட்களைப் பெற்றும் மகிழ்ந்திருக்கிறேன்.

எனக்கு நான்கு வயது ஆகியிருந்த போது (1936) திருவாங்கூர் திவான் திரு. கோமத் அச்சுத மேனன் அவர்கள் பரிசாக அளித்த மிருதங்கம் தான் எனது முதல் மிருதங்கம். இந்த வாத்தியத்தை நான் பல காலம் ஒரு பொக்கிஷமாக பாவித்துவந்தேன். ஒருவரது கடந்த காலத்தை நினைவு கூர்கையில் இவ்வாறு உளருவது சகஜம் தானே!

எனது கல்லூரி வாழ்க்கை முழுவதும் மகிழ்ச்சி, இசை, இசை மற்றும் இசை நிறைந்ததாக இருந்தது. எனது சமுதாயத்தைத் தவிர மற்ற சமுதாயத்தைச் சேர்ந்த நண்பர்கள் அடங்கிய பெரிய குழு.எனக்கு கிருத்துவ, jewish (1400 AD முதல் கொச்சினில் ஐரோப்பியர்கள் குடியேறவில்லை), மற்றும் முஸ்லிம் நண்பர்கள் ஏராளாமானோர் உண்டு. எங்கள் அனைவருக்கு இசை என்றால் உயிர். இந்திய, மேற்கத்திய மற்றும் பிரபல சினிமா பாடல்கள். அதனால், இன்றும் கூட, இன்றைய தலைமுறையினர் தற்கால கலை மற்றும் இசை மீது ஆசை கொண் டிருப்பது எனக்கு ஆச்சரியமாக இல்லை. கலையின் தரம் கால ஓட்டத்தில் மாறுபட்டிருக்கலாம் - ஆனால் இந்த மாறுதலே இளய சமுதாயத்தினரிடையே கலை மீதான ஆவலைத் தூண்டுகிறது. வளர்ந்து வருகின்ற மனதிற்கு எந்த ஒரு அசைவற்ற (static) நிலையும் சிறிது காலத்திற்குள்ளாகவே அலுத்துப் போய்விடும். சம்பிரதாயத்தை மீறாத கலைஞர்கள் தான் செய்ததையே திரும்பத் திரும்பச் செய்வதில் பெருமிதம் அடைவர். இவர்கள் பழைய நினைவுகளில் மூழ்கித் திளைப்பவர்கள். ஏனைய கற்பனை வளம் மிகுந்த அதே சமயம் குறுகிய எண்ணோட்டம் இல்லாத (open minded) கலைஞர்கள் ஏதேனும் புதியது, ஆச்சரியமானது, சவாலாக அமைந்தது ஆகியவற்றை அடையத் துடித்து மேன்மேலும் உயருவதற்கான லட்சியத்தில் வாழ்பவர்கள்.
கல்லூரி வாழ்க்கையில் கடைசி இரண்டு வருடங்கள் ஒருவகையில் எனக்கு மிகவும் கடினமானவை. எனது குடும்பத்தினரும், கல்லூரி முதல்வரும் நான் B.Com பயில வேண்டும் என்று அவர்களது முடிவினை என் மேல் திணித்தனர். 17 வயதே ஆகியிருந்தாலும், 10 வருடங்களுக்கு மேல் கச்சேரி அனுபவம் உள்ளதால் நான் ஒரு முழு நேர இசைக் கலைஞனாக உணர்ந்தேன்.

இதில் கொடுமை என்ன தெரியுமா, அதே கல்லூரியில் எனது தந்தையார் இசைத் துறை பேராசிரியர். B.A Music படித்தால் அது எனக்கு நிரந்த உத்தியோகத்தையும் கை நிறைய சம்பளத் தையும் பெற்றுத் தராது. B.Com ஒரு புதிய கோர்ஸ் என்பதால் அதனைப் பயின்றால் அரசு உத்தியோகம் அல்லது வங்கிப் பணி நிச்சயம் என்பது தான் பொதுவான அதே சமயம் அழுத்தமான வாதம். நான் இந்தப் போராட்டத்தில் தோற்றேன். B.Com முடித்துவிட்டு, எனது சாமான்களை மூட்டைக் கட்டிக் கொண்டு சென்னைக்குப் (இசைத் துறையில் சிறகடிக்க நினைப்பவர்களின் கனவு நகரம்) புறப்பட்டேன்.

நான் இரண்டு ஆண்டுகள் வாய்ப்பாட்டிலும் மிருதங்கத்திலும் தினமும் சராசரி எட்டு மணி நேரம் சாதகம் செய்தேன். திருச்சூரைச் சேர்ந்த இசைக் குடும்பத்தில் பிறந்த ஒருவன் எனக்கு நெருங்கிய சிநேகிதனாக இருந்தான். அவன் எனது வாய்ப் பாட்டினை விரும்பி ரசிப்பான். ஆனால் எனது மிருதங்க வாசிப்பில் அவனக்கு அவ்வளவு நாட்டம் கிடையாது (ஒரு வேளை நான் அப்பொழுதே futuristic போல). இந்த இரண்டு ஆண்டுகளில் நான் கிட்டத்தட்ட 300 பல்லவிகளைக் கற்றுத் தேர்ந்தேன். இது தான் நான் 1960களில் வருடாந்திர மியூசிக் அகாதெமி மாநாட்டில் (Annual Music Academy Conference) முன்னணி கலைஞர்கள் திரு. M.S. கோபாலகிருஷ்ணன், திரு. லால்குடி, T.K. மூர்த்தி, திரு. உமையாள்புரம் சிவராமன், உபேந்திரன் மற்றும் பலரோடு சேர்ந்து சிறப்பு பல்லவி செய்முறை விளக்கங்களை அளிப்பதற்குக் காரணமாக இருந்தது.

ஓணம் திருநாளையொட்டி உங்கள் அனைவ ருக்கும் எனது நல்வாழ்த்துகள். இதனை நாங்கள் "பொன் ஓணம்" என்று கூறுவோம். நம் அனைவரது உள்ளங்களிலும் இது இன்னமும் "பொன் ஓணம்" தான்!

விரைவில் நாம் சென்னையில் சந்திப்போம்!

நன்றி

TVG
More

இங்கே கொஞ்சிராம் யார்?
பாரதியார் பாடிய மணக்குள விநாயகர்
பாரதியாரின் விருப்பம்
அட்லாண்டா பக்கம்
அட்லாண்டாவில் கேட்டவை
கீதாபென்னெட் பக்கம்
Share: 




© Copyright 2020 Tamilonline