கொழுக்கட்டை பலவிதம் கொழுக்கட்டை உளுந்து வடை அவல் பாயசம் அப்பம் சன்னா சுண்டல் போளி வகைகள் ரவை தேங்காய் போளி சேமியா போளி கடலைப் பருப்பு போளி பால் போளி ஜீரா போளி சர்க்கரைவள்ளிக்கிழங்கு போளி பால்பவுடர் போளி மஸ்கெட் போளி
|
|
|
தேங்காய் பூரணம்
தேவையான பொருட்கள்
துருவிய தேங்காய் - 1 கப் பொடி செய்த வெல்லம் - 1 கப் ஏலக்காய் பொடி - 1/2 ஸ்பூன்
செய்முறை
அடி கனமான வாணலியில் தேங்காய் துருவலையும் வெல்லத்தையும் சேர்க்கவும். தண்ணீர் விடக்கூடாது. மிதமான சூட்டில் வாணலியை வைக்கவும். இடைவிடாமல் கிளரவும். பூரணம் கையில் ஒட்டாத பக்குவம் வரும் வரை தொடர்ந்து கிளரவும். இந்தப் பதம் வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி ஏலக்காய் பொடியைச் சேர்த்து நன்கு கிளரவும்.
******
உளுந்து பூரணம்
உளுத்தம் பருப்பு - 1/2 கப் உப்பு - தேவையான அளவு மிளகாய் வற்றல் - 5 கருவேப்பிலை - தேவையான அளவு பெருங்காயம் - சிறிதளவு உளுத்தம் பருப்பு - ஒரு ஸ்பூன் (தாளிக்க) கடுகு - 1/2 ஸ்பூன் துருவிய தேங்காய் - 2ஸ்பூன் (தேவையெனில்)
செய்முறை
1/2 கப் உளுத்தம் பருப்பை நன்கு கழுவி தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். தண்ணீரை வடிகட்டவும்.
பருப்பு, உப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை ரவை பக்குவத்திற்கு மிக்ஸியில் அரைக்கவும்.
இட்லி தயாரிப்பது போல குக்கரில் அரைத்த மாவை 5 நிமிடங்கள் வேகவைக்கவும். மாவு வெந்த பிறகு ஆறவைத்து கையினால் உதிர்த்துக்கொள்ளவும்.
அடி கனமான வாணலியில் எண்ணையை மிதமான சூட்டில் வைக்கவும். கடுகை இதில் சேர்க்கவும். கடுகு வெடித்தவுடன் ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பை பொன்னிறத்திற்கு வறுக்கவும். கருவேப்பிலை, தேங்காய் துருவல் மற்றும் வேகவைத்த மாவை சேர்க்கவும். நன்கு கிளறிய பிறகு அடுப்பிலிருந்து வாணலியை இறக்கவும்.
****** |
|
எள்ளு பூரணம்
தேவையான பொருட்கள் எள்ளு (கருப்பு அல்லது வெள்ளை) - 1/4 கப் பொடி செய்த வெல்லம் - 1/4 கப் ஏலக்காய் பொடி - சிறிதளவு
செய்முறை
அடி கனமான வாணலியில் எள்ளை வறுக்கவும் (எள்ளின் மணம் வரும் வரை). ஆற வைத்து எள்ளை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும் (தண்ணீர் விடாமல்). வெல்லம் மற்றும் ஏலக்காய் பொடியை இத்தோடு சேர்த்து நன்கு கிளரவும்.
******
கடலை பருப்பு பூரணம்
தேவையான பொருட்கள்
கடலை பருப்பு - 1/2 கப் பொடி செய்த வெல்லம் - 1/2 கப் ஏலக்காய் பொடி - சிறிதளவு தேங்காய் துருவல் - 1/8 கப்
செய்முறை
கடலை பருப்பை நன்கு கழுவி 2 கப் தண்ணீர் சேர்க்கவும். குக்கரில் ஒரு விசில் வரும் வரை வேக வைக்கவும்.
வேகவைத்த பருப்பை வடிகட்டவும். தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் ரவை பதத்திற்கு அரைக்கவும்.
அடி கனமான வாணலியில் அரைத்த மாவையும் வெல்லத்தையும் சேர்க்கவும். தண்ணீர் விடக்கூடாது. மிதமான சூட்டில் வாணலியை வைக்கவும். இடைவிடாமல் கிளரவும். பூரணம் கையில் ஒட்டாத பக்குவம் வரும் வரை தொடர்ந்து கிளரவும். இந்தப் பதம் வந்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி ஏலக்காய் பொடியைச் சேர்த்து நன்கு கிளரவும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
கொழுக்கட்டை பலவிதம் கொழுக்கட்டை உளுந்து வடை அவல் பாயசம் அப்பம் சன்னா சுண்டல் போளி வகைகள் ரவை தேங்காய் போளி சேமியா போளி கடலைப் பருப்பு போளி பால் போளி ஜீரா போளி சர்க்கரைவள்ளிக்கிழங்கு போளி பால்பவுடர் போளி மஸ்கெட் போளி
|
|
|
|
|
|
|