Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2002 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | அஞ்சலி | முன்னோடி | கவிதைப்பந்தல் | தமிழக அரசியல் | ஜோக்ஸ் | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
கலாலயா வழங்கிய கர்நாடக சங்கீதம்
சற்குரு - குருபூஜை
பாரதி கலாலயா ஜென்மாஷ்டமித் திருநாள்
தமிழிசையும் தெலுங்கிசையும் ‘சங்கமம்’!
Fall 2002
- |அக்டோபர் 2002|
Share:
Click Here EnlargeSan Jose அபினயா டான்ஸ் கம்பெனி நவம்பர் மாதம் Mexican Heritage Theater ல் தனது 'Fall 2002' நிகழ்ச்சியை இளவரசிகளைப் பற்றிய இந்தியாவின் பழமையான புராணக் கதைகளை மையமாகக் கொண்டு வழங்க உள்ளது. ஒவ்வொரு சிறுமியும் பணமும் புகழும் பெற்ற ஒரு இளவரசியாக வளர்ந்து, ஒரு அழகான இளவரசனை மணந்து கொண்டு மகிழ்ச்சியாக வாழும் கனவில் வளர்கின்றனர். இத்தகைய கதைகளோடு, இந்தியக் காவியங்கள் இளவரசிகளின் பலதரப்பட்ட குணா திசயங்களையும் பிரதிபலிக்க உள்ளது.

ராஜா ஷரியாரின் மனைவி ஸ்கெஹிராஸாதே, அரசனுக்கு ஆயிரத்து ஒரு இரவுகள் கதைகளைச் சொல்லி மகிழ்வித்து தனது மரணத்தை தவிர்கிறாள் என்பது மைதிலி குமாரியின் நாட்டிய அமைப்பில் ஒரு ஒப்பற்ற கற்பனை மேலும் வளப்படுத்தி அரசனையும் சரி, பார்வையாளர்களையும் இந்தியாவிற்கே இட்டுச்சென்று, இந்திய இளவரசிகள் பற்றிய கதைகளை விவரிக்கும். அரசன் அக்னிமித்ராவின் இதயத்தில் தனது நாட்டியத்தின் மூலம் இடம் பிடித்த இளவரசி மாளவிகா (புராதான சம்ஸ்கிருத காவியமான காளிதாசரின் "மாளவிகாக்னிமித்ரா"). தொடர்ந்து இளவரசி சத்யபாமாவின் சோகக் கதை. கிருஷ்ணர் மீது இளவரசி ருக்மணி கொண்ட பக்திக்கு முன்பாக இளவரசி சத்யபாமாவின் அளவற்ற சொத்து சோபிக்காமல் போவது (விஷ்ணு புராணத்திலிருந்து ஒரு பகுதி. பார்வதி தேவி, தைரியமிக்க அழகிய இளவரசி மீனாட்சியாக அவதாரம் எடுத்து சிவபெருமானைத் திருமணம் செய்துகொள்ளும் நிகழ்ச்சி புகழ் பெற்ற வயலின் கலைஞர் மற்றும் தற்கால பாடலாசிரியர் லால்குடி G ஜெயராமனின் வரிகளில் உயிர்பெற்று வரவிருக்கிரது. தேவியின் ஒன்பது வெவ்வேறு குணாதிசயங்களைப் பிரதிபலிக்க ஒன்பது வெவ்வேறு ராகங்களில் அமைந்த பாடல்கள் சிறப்பாக அமைக்கப்பெற்றுள்ளன. விரிகுடா கவிஞர் சித்ரா திவாகருண்ணியின் கவிதை "Spice Bazaar"லிருந்து ஒரு பகுதி - மந்திர சக்தி கொண்ட ஒரு தேவதை அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்து வருவதாக அமைந்த நிகழ்ச்சி 1994ல் முதலில் அரங்கேறிய பிறகு மீண்டும் நடக்க இருக்கிறது. வாசனைப் பொருட்களால் ஆன தனது இல்லத்திற்கு தனிமையில் இருக்கும் அமெரிக்கனை அழைத்துச் செல்வதாகவும், இனத்துவேஷத்தை எதிர்கொள் வதாகவும் அமைகிறது. நிறைவு நிகழ்ச்சியாக 14 நாட்டியக் கலைஞர்களின் படைப்புகளை மறுபடியும் மேடையேற்றுகிறது. கடந்த வருடம் நாட்டிய குரு C.V. சந்திரசேகர் வடிவமைத்த நிகழ்ச்சியில் அபினயா உறுப்பினர்கள் ஏழுபேர் கலந்துகொண்டு, பஞ்ச பூதங்களின் உபசரணைகளை வழங்க உள்ளனர்.
புகழ் பெற்ற கர்நாடக இசைக் கலைஞர் ஆஷா ரமேஷ், அபினயாவின் சமீபத்திய படைப்புகள் பெரும்பாலானவற்றில் கலந்துகொண்டு, இசை மற்றும் வாய்ப்பாட்டு ஆகியவற்றை வழங்குகிறார். N. நாராயண் மிருதங்கம் வாசிக்கிறார். சாந்தி நாராயணன் வயலின் இசைக்கிறார். ராஜா சிவமணி வீணை வாசிக்கிறார். மைதிலி குமார் மற்றும் வித்யா ராமகிருஷ்ணன் நட்டுவாங்கம்.

அபினயா டான்ஸ் கம்பெனி, மைதிலி குமாரின் சீர்மிகு வழிகாட்டுதலின் படி, தென்னிந்தியாவின் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் பலவற்றை மேற்கத்திய பார்வையாளர்களுக்கு வழங்கி வருகிறது. பல திறமை மிக்க நடனக் கலைஞர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் அடங்கிய இந்த விருது பெற்ற கம்பெனி, கடந்த பல வருடங்களாக பலதரப்பட்ட கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்குபெற்றுள்ளது. Balinese companyயோடு ராமாயணம், கேம்லன் சேகர் ஜெயா மற்றும் San Francisco's ShadowLight Productions உடன் Power of Saturn போன்றவை குறிப்பிடத்தக்கவை.
More

கலாலயா வழங்கிய கர்நாடக சங்கீதம்
சற்குரு - குருபூஜை
பாரதி கலாலயா ஜென்மாஷ்டமித் திருநாள்
தமிழிசையும் தெலுங்கிசையும் ‘சங்கமம்’!
Share: 




© Copyright 2020 Tamilonline