கலாலயா வழங்கிய கர்நாடக சங்கீதம் பாரதி கலாலயா ஜென்மாஷ்டமித் திருநாள் தமிழிசையும் தெலுங்கிசையும் ‘சங்கமம்’! Fall 2002
|
|
|
இவ்வருடம் (2002) ஆகஸ்டு மாதம், 31 ஆம் தேதி, இந்தியாவில் தென்னகத்தில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையில், சற்குரு சித்தர் சுவாமிகள் எழுந்தருளி 35 ஆண்டுகளாக உலக மக்களெல்லாம் சந்தோஷமாக வாழ ஆன்மீக அருட்பணியாற்றினார். நூற்றுக்கணக்கான சீடர்களுக்கு ஞானப்யிற்சி யளித்தார். இறைவனை காணும் மார்க்கத்தை போதித்தார். அஷ்டமா சித்திகளில் வல்லவர். பதினொண் சித்தர்களின் சித்தாந்தத்தில் வெற்றி கண்டவர். அவர் நிர்விகல்ப சமாதி நிலை பெற்று சச்சிதானந்த நிலையைப் பெற்றவர். அவர் சிறந்த மகாயோகி. எப்போதும் மெளனமாயிருப்பார். ஸ்ரீலஸ்ரீ சிவநாத சிவலிங்க பெருமானார் சுவாமி களின் சற்குருவாவார். சுவாமிகள் அறுபதாண்டுகள் இவ்வுலகில் எல்லாவுயிர்க்கும் ஆசி வழங்கியுள்ளார். சுவாமிகள் ஆகஸ்டு மாதம் 31 ஆம் தேதி 1964 ஆம் ஆண்டு மயிலாடுதுறையில் இறைவனோடு இரண்டற கலந்தார்.
பரப்பிரம்ம ஓம் ஸ்ரீ சித்தர் சுவாமிகளின் 38வது ஆண்டு குருபூஜை அமெரிக்க ஐக்கிய நாட்டில், கலிபோர்னியா மாநிலத்தில் sacraments-ல் அமைந்துள்ள சித்திவினாயகர் ஆலயத்தில் காலை 10 மணி அளவில் தொடங்கி மதியம் 1 மணிவரை இனிதாக நடந்து முடிந்தது. சம்பத்குமார் பட்டாச் சாரியார் அவர்கள் வினாயகருக்கு மகாபூஜை நடத்தினார். சத்குருவிற்று ஆரத்தி எடுத்தார். சற்குரு நாமாவளி சற்குருவிற்கு நடைபெற்றது. பிறகு ராஜராஜ ஸ்ரீ அஷ்டகம், மற்றும் சுலோகங்கள் எல்லோராலும் நிகழ்த்தப்பட்டது. ஓம்கார ஆஸ்ரமத் தின் தலைவர் சுவாமி ஸ்ரீ ஓங்காரனந்தா அவர்கள் இந்தியாவிலிருந்து வந்திந்தார். அவர் சற்குருவின் வாழ்க்கை வரலாற்றைப் பற்றி சிறப்பாக பேசினார். ஸ்ரீபாலகிருஷ்ணன் சிறப்புரை வழங்கினார். |
|
டாக்டர் ராஜஸ்ரீ அவர்கள் சற்குரு சித்தர்சுவாமிகள் நேரில் தரிசனம் கொடுத்த அனுபவத்தை விரிவாக விளக்கிச்சொன்னார். சத்யநாராயணன் அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த சற்குருபூஜைக்கு பல அன்பர்கள் திரளாக வந்திருந்தனர். சுவாமிகளின் பிரதம சிஷ்யர் கோடிஸ்வரானந்தா கற்பூர ஆரத்தி எடுத்தார்கள். எல்லோர்க்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. சுவாமிகள் ஆசி வழங்கினார்கள்.
என். பாலகிருஷ்ணன், சன்னிவேல் |
|
|
More
கலாலயா வழங்கிய கர்நாடக சங்கீதம் பாரதி கலாலயா ஜென்மாஷ்டமித் திருநாள் தமிழிசையும் தெலுங்கிசையும் ‘சங்கமம்’! Fall 2002
|
|
|
|
|
|
|