பலவகையான கிருத்துமஸ் கேக் வாழைப்பழ கேக் எலுமிச்சை கேக் ஆலிவ் ஆயில் கேக் 7 கப் கேக் கடலை மாவு கேக் அல்லது மோகன்தால் கேக் திருவாதிரை திருநாள்
|
|
|
தேவையான பொருட்கள் மைதா - 1 3/4 கப் கோகோ - 1/2 கப் பேகிங் சோடா - 1 ஸ்பூன் உப்பு - சிறிதளவு சர்க்கரை - 1 1/4 கப் பால் - 3/4 கப் முட்டை - 2 |
|
செய்முறை
Ovenஐ 350 டிகிரி Fக்கு சூடு படுத்தவும்.
கேக் பேனின் (cake pan) அடிப்பகுதி மற்றும் பக்கவாட்டின் மீது சிறிதளவு வெண்ணையைத் தடவவும். பின்னர் இதன் மீது லேசாக மைதாவைத் தடவவும். மைதா அதிகமாக இருக்கக்கூடாது.
மைதா, பேகிங் சோடா, உப்பு மற்றும் கோகோ ஆகியவற்றை நன்றாக கலந்து சலித்தெடுக்கவும்.
முட்டையை நன்றாக beat செய்து தனியாக வைக்கவும். சர்க்கரையை பொடி செய்து ஒரு பாத்திரத்தில் இட்டு வெண்ணையைச் சேர்த்து க்ரீம் பதத்திற்குக் கிளறவும்.
Beat செய்த முட்டையை இதில் சேர்த்துக் கிளறவும்.
சலித்த மாவு மற்றும் பால் ஆகியவற்றை மாற்றி மாற்றி இதில் சேர்த்துக் கிளறவும் (மாவில் தொடங்கி மாவில் முடிக்கவும்).
இந்தக் கலவையை கேக் பேனில் கொட்டி நிறவி விடவும் (கேக் பேனை மெதுவாக தட்டித் தட்டி நிறவவும்). ஸ்பூன் கொண்டு நிறவக்கூடாது.
Ovenல் வைத்து bake செய்யவும். ஒரு டூத் பிக்கை எடுத்து கேக்கின் நடுவில் சொருகி எடுத்தால் டூத் பிக்கில் எதுவும் ஒட்டாமல் இருக்கும் வரை bake செய்யவும்.
பின்னர் எடுத்து ஒரு சில மணி நேரங்கள் ஆறவைத்து பின்னர் கட் செய்யவும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
பலவகையான கிருத்துமஸ் கேக் வாழைப்பழ கேக் எலுமிச்சை கேக் ஆலிவ் ஆயில் கேக் 7 கப் கேக் கடலை மாவு கேக் அல்லது மோகன்தால் கேக் திருவாதிரை திருநாள்
|
|
|
|
|
|
|