எல்லா நல்லவைகளுடனும் புத்தாண்டே நீ வருக!! நிருத்தய மேள ராகமாலிகா தமிழ் மன்றத்தில் பாரதி விழா சான் ·பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் சமூக சேவை பாரதி கலாலயாவின் மும்மூர்த்திகள் தினவிழா மற்றும் பொங்கல் விழா இந்திய தொழில்நுட்பக் கழகங்களின் (ஐஐடி) பொன் விழா 'நிருத்ய ஸந்தியா' நடன நிகழ்ச்சி சிகாகோ தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா
|
|
|
2002-ஆம் ஆண்டு நவம்பர் ஒன்பது அன்று ஸன்னிவேல் பாண்டெரோஸா பள்ளியில், தமிழ் மன்றம் குழந்தைகள் தின விழாவைக் கொண்டா டியது. விரிகுடாப்பகுதி வாழ் நூற்றிற்கும் மேற்பட்ட தமிழ் சிறார் சிறுமியர் பங்கு கொண்டு சுமார் இருபத்தைந்து பல்சுவை நிகழ்ச்சிகளையும், மாறுவேட நிகழ்ச்சியையும் வழங்கினர். இங்கு வளரும் குழந்தைகள் இந்த நாட்டு கலாச்சாரத் தையும் பண்பாட்டையும் கடைபிடிப்பதனூடே, தம் தாயகத்தின் கலாச்சாரத்தையும் விட்டுக் கொடுக் காது, உற்சாகமும் உவகையும் ததும்ப ஒவ்வோர் ஆண்டும் இந்த விழாவில் பங்கேற்பது பாராட்டத் தக்கதாய் உள்ளது.
ஒவ்வொரு குழுவுக்கும் தரப்பட்ட அவகாசம் ஐந்து நிமிடமே ஆனாலும், பாட்டு, நாடகம், வில்லுப்பாட்டு, ரைம்ஸ், நடனம் என்று இச்சிறுவர்கள் அளித்த ஒவ்வொரு நிகழ்ச்சியும் இனிமையாக அளிப்பதோடு இவர்களின் தமிழார்வத்தையும் வெளிப்படுத்தியது. இவற்றில் சில நிகழ்ச்சிகள் நாட்டுப்பற்றையும், நம் நாட்டில் இன்று மொழி, மத, மாநில அடிப்படையில் மிஞ்சிக் கிடக்கும் வேறுபாடுகளைக் கண்டனம் செய்வதாய் அமைந்திருந்தன, சில பக்தியை வலியுறுத்தின. வேறு பல, நடனக்கலையை வெளிப்படுத்தின. இவற்றில் ஓரிரு நடனங்களை பங்கேற்ற அச்சிறுமியர்களே மெட்டுக்கேற்ப இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. மாறு வேடப் பகுதியில் பாரதியார், கல்யாணப்பெண் போன்ற வேடங்களில் குழந்தைகள் பல பங்கேற்றன. வந்திருந்த அனைவரும் நிகழ்ச்சிகளின் தரத்தையும், குழந்தைகளின் திறமையையும் கண்டு வியந்து, நிகழ்ச்சி ஒவ்வொன்றையும் ரசித்தாலும், பலர் மனத்தில் ஒரு நெருடல்: உட்கார்ந்து பார்க்க இருக்கை கிடைக்காதது தான். |
|
இந்நாட்டிலேயே பிறந்து, பல ஆண்டுகளாய் வசித்துவரும் மாணவர்களாகிய ஜம்புவும், எழிலுமே இந்த விழாவைத் தொகுத்து வழங்கியது பாராட்டத்தக்க அம்சமாய்த் திகழ்ந்தது. ‘வீட்டில் என் பெற்றோர் தமிழில் பேசிவந்ததால் நானும் தமிழைக் கற்றறிந்தேன். யூ.ஸி. பெர்க்கலியில் பேராசிரியர் ஹார்ட்டிடம் 3 வருடம் தமிழ் பயின்றேன். குழந்தைகள் தின விழாவில் பங்கு கொண்டது மிகவும் நிறைவாக இருந்தது.’ என்கிறார் சட்டக்கல்லூரி மாணவியாகிய எழில். இவர் ‘MC’யாக இருந்ததுமல்லாமல் நிகழ்ச்சியில் இடம்பெற்ற இரண்டு நடனங்களை இயக்கவும் செய்திருக்கிறார். மவுண்ட்டன் வியூ செயிண்ட் ·பிரான்ஸிஸ் ஹை ஸ்கூலில் படித்துவரும் ஜம்பு பல வருடங்களாய் விரிகுடாவில் நடைபெறும் தமிழ் பல்சுவை நிகழ்ச்சிகளில் தன்னால் இயன்ற வகையில் உதவிவருகிறார். ‘நான் என் (தமிழ்) கலாச்சாரத்தைப் பற்றி நன்கு அறிந்திருப்பதை பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்’ என்கிறார் இவர்.
‘மெல்லத் தமிழ் மொழி சாகும் - அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்’ என்று ஏதோ ஒருப் பேதையன் உரைத்ததைக் கேட்டு வெகுண்டான் அன்று பாரதி - அப்பேதையனைக் கண்டு எள்ளி நகையாடின இச்சிறுவர்களின் தமிழார்வமும், கலாச்சாரப் பற்றும். ஆம் பாரதி கண்ட தமிழ் தாய், ‘புகழ் ஏறி என்றும் புவிமிசை நிற்’கட்டும். மேற்கு மொழிகளின் மிசை தமிழை வளர்க்கும் இக் குழந்தைகளுக்கும் இவர்களை ஊக்குவிக்கும் பெற்றோர்களுக்கும் பாராட்டுக்கள்!! வாழ்க தமிழ்! வளர்க தமிழர் பண்பாடு.
வித்யா நாராயணன் |
|
|
More
எல்லா நல்லவைகளுடனும் புத்தாண்டே நீ வருக!! நிருத்தய மேள ராகமாலிகா தமிழ் மன்றத்தில் பாரதி விழா சான் ·பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதி தமிழ் மன்றத்தின் சமூக சேவை பாரதி கலாலயாவின் மும்மூர்த்திகள் தினவிழா மற்றும் பொங்கல் விழா இந்திய தொழில்நுட்பக் கழகங்களின் (ஐஐடி) பொன் விழா 'நிருத்ய ஸந்தியா' நடன நிகழ்ச்சி சிகாகோ தமிழ் சங்கத்தின் பொங்கல் விழா
|
|
|
|
|
|
|