மூன்று தலைமுறைகளுடன் தொடரும் இசைப் பயணம் - T.V. கோபாலகிருஷ்ணன் திராவிடம்: திராவிடர்: திராவிட அரசியல்: என்ன சொல்லி நானழைக்க .... கீதாபென்னெட் பக்கம்
|
|
|
ஜார்ஜ் பெர்னாட்ஷாவிடம் நிருபர்:
எந்த Book னால உங்களுக்கு ரொம்ப சந்தோஷம் ஜாஸ்தி?
பெர்னாட்ஷா செக்ஸ் புக்
******
கலைஞர் கருணாநிதியிடம் நிருபர்:
நீங்கள் கோயில் குளத்துக்கு போவதில்லையாமே? உண்மையா?
கருணாநிதி: யார் சொன்னது?!.
நேத்து தான் சங்கரன் கோயில் போயிருந்தேன்,
இன்று இதோ விளாத்தி குளத்திற்கு வந்துவிட்டேனே.
******
எழுத்தாளர் ஜெயகாந்தன்:
ஆதி சங்கரர், கணிதமேதை இராமானுஜம்,
மகாகவி பாரதி போன்றவர்கள் மிகச்சிறிய வயதிலேயே இறந்துவிட்டது
பற்றிக் குறிப்பிடுகையில்:
அவர்கள் நம்மோடு வாழ்ந்தது நாம் செய்த பேறு.
அவர்கள் நம்மைவிட்டு விரைவில் சென்றது, அவர்கள் செய்த பேறு
****** |
|
கவிஞர் வாலி:
காஞ்சீபுரத்துக் கோயில் யானைக்கு மதம் பிடித்த செய்திபற்றி அறிந்ததும்,
உங்கள் மதம் அதற்குப் பிடிக்கவில்லை.
யானை அதனால்தான் ஓடிவிட்டது என்றாராம் கோயிலைப்பார்த்து.
******
செளந்தரா கைலாசம்:
கண்ணதாசனைப் பற்றிக் குறிப்பிடுகையில்,
குடிக்கும் மது இவ்வாறு சொல்லியதாம்
எல்லோரும் என்னைப் போட்டுக்கொண்டு ஆடினார்கள்.
நீ ஒருவன் தானே பாடினாய்!! என்று.
******
கி. வா. ஜகந்நாதன்:
நண்பர் ஒருவர்: என்ன ஓய்.
உமக்கு ஏதோ வலின்னு கேள்விப்பட்டேனே?!
கிவாஜ: ஒரு வலியா இருந்தா பரவாயில்லயே.
பல் வலியான்னா இருக்கு. |
|
|
More
மூன்று தலைமுறைகளுடன் தொடரும் இசைப் பயணம் - T.V. கோபாலகிருஷ்ணன் திராவிடம்: திராவிடர்: திராவிட அரசியல்: என்ன சொல்லி நானழைக்க .... கீதாபென்னெட் பக்கம்
|
|
|
|
|
|
|