DIALOG
ஜார்ஜ் பெர்னாட்ஷாவிடம் நிருபர்:

எந்த Book னால உங்களுக்கு ரொம்ப சந்தோஷம் ஜாஸ்தி?

பெர்னாட்ஷா செக்ஸ் புக்

******


கலைஞர் கருணாநிதியிடம் நிருபர்:

நீங்கள் கோயில் குளத்துக்கு போவதில்லையாமே? உண்மையா?

கருணாநிதி: யார் சொன்னது?!.

நேத்து தான் சங்கரன் கோயில் போயிருந்தேன்,

இன்று இதோ விளாத்தி குளத்திற்கு வந்துவிட்டேனே.

******


எழுத்தாளர் ஜெயகாந்தன்:

ஆதி சங்கரர், கணிதமேதை இராமானுஜம்,

மகாகவி பாரதி போன்றவர்கள் மிகச்சிறிய வயதிலேயே இறந்துவிட்டது

பற்றிக் குறிப்பிடுகையில்:

அவர்கள் நம்மோடு வாழ்ந்தது நாம் செய்த பேறு.

அவர்கள் நம்மைவிட்டு விரைவில் சென்றது, அவர்கள் செய்த பேறு

******


கவிஞர் வாலி:

காஞ்சீபுரத்துக் கோயில் யானைக்கு மதம் பிடித்த செய்திபற்றி அறிந்ததும்,

உங்கள் மதம் அதற்குப் பிடிக்கவில்லை.

யானை அதனால்தான் ஓடிவிட்டது என்றாராம் கோயிலைப்பார்த்து.

******


செளந்தரா கைலாசம்:

கண்ணதாசனைப் பற்றிக் குறிப்பிடுகையில்,

குடிக்கும் மது இவ்வாறு சொல்லியதாம்

எல்லோரும் என்னைப் போட்டுக்கொண்டு ஆடினார்கள்.

நீ ஒருவன் தானே பாடினாய்!! என்று.

******


கி. வா. ஜகந்நாதன்:

நண்பர் ஒருவர்: என்ன ஓய்.

உமக்கு ஏதோ வலின்னு கேள்விப்பட்டேனே?!

கிவாஜ: ஒரு வலியா இருந்தா பரவாயில்லயே.

பல் வலியான்னா இருக்கு.

© TamilOnline.com