Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2003 Issue
ஆசிரியர் பக்கம் | சிறப்புப் பார்வை | மாயாபஜார் | நூல் அறிமுகம் | சாதனையாளர் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | ஜோக்ஸ் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
விரிகுடாப் பகுதி தமிழ் மன்றம் நடத்திய "வாய் விட்டு சிரி" மற்றும் "பாட்டுக்குப் பாட்டு"
பரதத்தில் பாரதி
தமிழ் நாடு அறக்கட்டளை - தமிழ் விழா-2003
சுருதிலயாவின் இசை ராஜாங்கம்
பாரதி கலாலயா நிகழ்ச்சிகள்
இராம நவமி:
'வில்'அங்கம்! கிரேட்டர் அட்லாண்டா தமிழ் சங்கம்
புத்தாண்டுக் கொண்டாட்டம் - சிகாகோ தமிழ் சங்கம்
க்ளீவ்லேண்ட தியாகராஜ ஆராதனா 2003
அலர்மேல் வள்ளியின் அற்புதமான நாட்டிய நிகழ்ச்சி
தமிழ் ஈஸ்டர் ஆராதனை
- ஜான் டேவிட்|மே 2003|
Share:
Click Here Enlargeதமிழ் ஈஸ்டர் பண்டிகை ஆராதனை, ஏப்ரல் மாதம் 20ஆம் நாள் (ஞாயிற்றுக் கிழமை) மாலை, நோர்த்ரிட்ஜ் மெத்தடிஸ்த் ஆலயத்தில் இனிதே நடைபெற்றது. இந்தத் தமிழ் ஆராதனையில் கிறிஸ்தவரல்லாத பிற மதத்தினரும் கலந்து கொண்டு சிறப்பித்தது, தமிழ் மொழியின் பெருமைக்கும், ஒற்றுமைக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

ஆராதனையில் அருள்திரு. ப்ரேம்குமார் அவர்கள் நற்செய்தி வழங்கினார். அப்போது அவர் உயிர்த்தெழுந்த திருநாளின் உண்மையையும், ஒருமைப்பாட்டையும், சபையோருக்கு எளிதான தமிழில் அழகாக எடுத்துச் சொன்னார்.

ராஜ் முனுவும், சாமுவேல் மார்ட்டினும் (Raj Munu and Sam Martin) இசைக் கருவிகளை அழகாக இசைக்க, ஆர்வத்தோடும் ஈடுபாட்டோடும் ஈஸ்டர் பாடல்களைச் சபையோர் பாடி ஆராதனையைத் தொடங்கினார்கள். திரு டேவிட் நேசமணி அவர்கள் ஆரம்ப ஜெபம் செய்து ஆராதனையை நடத்தினார். ஆராதனையின் விசேஷ அம்சங்களாக, செல்வி அ.பி.கேல் யோகேந்திரனின் சிறப்பு நடனம், திருமதி. ப்ரினீற்றா யோகேந்திரன், திரு. ரவி இராசையா ஆகியோரின் சிறப்புப் பாடல்களும் இடம் பெற்றன. திருமதி ரோஸ் முரளி கிருஷ்ணன் அவர்கள் தானே எழுதி, இசையமைத்த ஒரு ஈஸ்டர் பாடலைப் பாடி சபையோரை மகிழ்வித்தார். செல்வி ஜெசிக்கா டாஸ் குழந்தைகளுக்காக ஈஸ்டர் முட்டை வேட்டை (Easter Egg Hunting) விளையாட்டை ஏற்படுத்தி, பிள்ளைகளை சந்தோஷமாகவும், கவனமாகவும் கண்காணித்துக் கொண்டார்.
ஆராதனை முடிந்ததும், அனைவருக்கும் மாலை உணவு (Potluck Dinner)வழங்கப்பட்டது. அத்தோடு தமிழ் கிறித்தவ ஐக்கிய குழுவின் ஆராதனை இனிதே நிறைவு பெற்றது.

இந்த ஆராதனையைப் பற்றிய மேலும் தகவல்களை www.ourchurch.com/member/t/TamilChristian - ல் பார்க்கலாம்.
மின்னஞ்சல் முகவரி: tamilchristianfellowship@ourchurch.com

S. ஜான் டேவிட்
More

விரிகுடாப் பகுதி தமிழ் மன்றம் நடத்திய "வாய் விட்டு சிரி" மற்றும் "பாட்டுக்குப் பாட்டு"
பரதத்தில் பாரதி
தமிழ் நாடு அறக்கட்டளை - தமிழ் விழா-2003
சுருதிலயாவின் இசை ராஜாங்கம்
பாரதி கலாலயா நிகழ்ச்சிகள்
இராம நவமி:
'வில்'அங்கம்! கிரேட்டர் அட்லாண்டா தமிழ் சங்கம்
புத்தாண்டுக் கொண்டாட்டம் - சிகாகோ தமிழ் சங்கம்
க்ளீவ்லேண்ட தியாகராஜ ஆராதனா 2003
அலர்மேல் வள்ளியின் அற்புதமான நாட்டிய நிகழ்ச்சி
Share: 




© Copyright 2020 Tamilonline