Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2003 Issue
ஆசிரியர் பக்கம் | மாயாபஜார் | நூல் அறிமுகம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | கலி காலம் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | வார்த்தை சிறகினிலே | சிறுகதை | தமிழக அரசியல் | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம் | அமெரிக்க அனுபவம்
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
க்ளீவ்லேண்டில் தியாகராஜ ஆராதனை!
விழாக்கோலம் கொண்ட நியூஜெர்சி
ஸ்ரீ ஸ்ரீ சொற்பொழிவில் 'அன்பு'
சிகாகோவில் ப. சிதம்பரம்!
குழந்தைகளுக்காக நடைபயணம்!
ஸ்ரீமதி ரோஸ் முரளிகிருஷ்ணனின் மனதைக் கொள்ளை கொண்ட இனிமையான கச்சேரி
புத்தரின் பெயரால்...
செல்லுலாய்டு கிளாசிக்ஸ்
அமெரிக்கன் இந்தியன் ·பவுன்டேஷன்: சமூகத் தொழில் முனைவோர்களுக்கான கூட்டம்
ரவிகிரன் அளித்த ராக விருந்து
தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழா!
கண்டு, கேட்டு, ரசித்த - கண்மணியே!
·ப்ரிமொன்ட் கல்சுரல் ஆர்ட்ஸ் கெளன்சில்
- குருப்பிரசாத் மாதவன்|ஜூன் 2003|
Share:
Click Here Enlargeகலிபோர்னியா, விரிகுடாப் பகுதியில் அமெரிக்க-தமிழ்க் குழந்தைகளின் கலைநிகழ்ச்சி.ஃப்ரிமொன்ட் கல்சுரல் ஆர்ட்ஸ் கெளன்சில் (FCAC) தனது 16ஆவது ஆண்டு, இளம் கலைஞர்களின் திறமைவெளிக்காட்டு நிகழ்ச்சியை ·ப்ரிமொன்டில் உள்ள Ohlone Collegeன் Smith center for Performing Artsல், மே 18 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடத்தியது.

வாய்ப்பாட்டு, இசைக்கருவி இசைத்தல், நடனம், புகைப்படக்கலை, மற்றும் ஓவியம் ஆகிய துறைகளில் திறமையுள்ள, 8-20 வயதுக்குட்பட்ட மாணவமாணவிகளைக் கலந்து கொள்ளுமாறு கடந்த சில மாதங்களுக்கு முன்னால் FCAC அழைப்பு விடுத்திருந்தது. பல்வேறு படிப்படியான தேர்வுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக 20 குழுக்களைத் தேர்ந்தெடுத்தார்கள். இந்த நிகழ்ச்சியில் Lyrical dances, Jazz dance, Indian Classical dance, playing piano, zither, American English vocal songs, and South Indian tamil folk song (Nattupura Paadal) போன்ற கலைத்திறமைகள் அரங்கேற்றப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளுக்கு நடுவர்களாக Steve Harris, Karen McCutcheon, and Adam Miller (வாய்ப்பாட்டுத் தேர்வு) ஆகியோர் கலந்து கொண்டனர்.

விரிகுடாப்பகுதித் தமிழ்மன்றப் பார்வை யாளர்களிடத்திலும், Mostly Tamil Radioவின் விருப்ப நேயர்கள் மத்தியிலும் புகழ்பெற்ற பாடகிகளான காயத்ரி ராமநாதனுக்கும் அவளது சகோதரி ராஜேஸ்வரி ராமநாதனுக்கும் தங்கள் திறமையை சர்வதேசப் பார்வையாளர்களுக்கு மத்தியிலும் பல அமெரிக்கர்களுக்கு மத்தியிலும், சைனா மற்றும் பல நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மத்தியிலும் நிரூபிக்க மேலும் ஒரு வாய்ப்பை FCAC ஏற்படுத்திக் கொடுத்தது. குழந்தைகளுக்கு இது முற்றிலும் வேறுபட்ட அனுபவமாக இருந்தது. அவர்கள் புஷ்பவனம் குப்புசாமி எழுதி இசையமைத்த ''கொட்டுங்கடி கொட்டுங்கடி'' நாட்டுப்புறப் பாடலைப் பாடி மகிழ்ந்தார்கள்.
இந்தப் பாடல் மணமகனைக் கிண்டல் செய்து மணமகளின் தோழிகளும் குடும்பத்தினரும் பாடுவது போல் அமைந்திருக்கும். ஆரம்பத்தில் மெதுவாகத் தொடங்கும் இந்தப் பாடல், மணமகனின் நிறத்தைப் பற்றி, ''நெருப்பு குளிச்சதுபோல் நிறமின்னு சொல்லுங்கடி, கருப்புன்னு சொல்லாதீங்கடி'' என்று உச்சஸ்தாயில் பாடப்படும்போது குழந்தைகள் மிகவும் மகிழ்ந்தார்கள். 'குலவி'ச் சத்தத்தோடு பாட்டை முடிக்கும்போது அந்த அரங்கமே ஆச்சரியத்தில் ஆழ்ந்தது. பாடலின் ஒவ்வொரு அங்கத்தையும் பார்வையாளர்கள் ரசித்தார்கள். இசைக்கு மொழி தேவையில்லையென்பதை இது நன்றாகவே உணர்த்தியது. காயத்ரியும், ராஜேஸ்வரியும் தொடர்ச்சியான கைதட்டல் பாராட்டுகளைப் பெற்றார்கள். FCAC அவர்களிருவருக்கும் சான்றிதழ் அளித்துப் பாராட்டியது.

FCACன் தலைவர் Mr. ரிச்சர்டு மெக்கே குழந்தைகளின் திறமையைக் குறித்துப் பேசும்போது காயத்ரியையும், ராஜேஸ்வரியையும் குறிப்பிட்டுப் பாராட்டினார்.

இந்த நிகழ்ச்சி Fremont Cable Televisionல், ஜூன் மாதம் முழுவதும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 8மணிக்கு ஒளிபரப்பு செய்யப்படுகிறது. முதல் இரண்டு வாரங்களுக்கு channel 76லும், கடைசி இரண்டு வாரங்களுக்கு Channel 29லும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.

குருப்பிரசாத் மாதவன், ராமநாதன் சுப்ரமணியன்
More

க்ளீவ்லேண்டில் தியாகராஜ ஆராதனை!
விழாக்கோலம் கொண்ட நியூஜெர்சி
ஸ்ரீ ஸ்ரீ சொற்பொழிவில் 'அன்பு'
சிகாகோவில் ப. சிதம்பரம்!
குழந்தைகளுக்காக நடைபயணம்!
ஸ்ரீமதி ரோஸ் முரளிகிருஷ்ணனின் மனதைக் கொள்ளை கொண்ட இனிமையான கச்சேரி
புத்தரின் பெயரால்...
செல்லுலாய்டு கிளாசிக்ஸ்
அமெரிக்கன் இந்தியன் ·பவுன்டேஷன்: சமூகத் தொழில் முனைவோர்களுக்கான கூட்டம்
ரவிகிரன் அளித்த ராக விருந்து
தமிழ்ப் பள்ளியின் ஆண்டு விழா!
கண்டு, கேட்டு, ரசித்த - கண்மணியே!
Share: 




© Copyright 2020 Tamilonline