தமிழ் சினிமாவில் பாட்டு வசந்தமே அருகில் வா..... ஏன்? தஞ்சை ஜில்லா வசனங்கள் சங்கீத ஸ்தித பிரஞ்ஞனுக்கும், பொன்விழா! கீதா பென்னட் பக்கம்
|
|
|
வெடவெட குளிர் போய் வெதுவெது வெயில் காலம் வருகிறது. குழந்தைகளை ''வெளியே குளிர்/மழை, உள்ளே விளையாடு'' என்று சொல்லி ஏமாற்ற முடியாது. வாரவாரம் பத்தும் இருபதும் செலவழித்து வெளியே அழைத்துப் போக வேண்டியதுதான். விரிகுடாப் பகுதியில் குழந்தைகளுடன் இலவசமாய்ப் பார்த்து ரசிக்கக்கூடிய இடங்கள் ஏதாவது உண்டா என்று தேடிய போது கிடைத்தவை - 'எம்மா ப்ரூஷ் பூங்கா' (Emma Prusch farm Park) மற்றும் 'பாலோ ஆல்டோ குழந்தைகள் உயிரியல் பூங்கா' (Palo Alto Junior Zoo and museum)
எம்மா ப்ரூஷ் பூங்கா
சான் ஹோசேயில் வயலும், தோட்டமும், தோப்பும் விலங்குகளும் 280 மற்றும் 101 சந்திக்கும் இடத்தில் இருக்கிறது என்று யாராவது சொன்னால் நம்மால் நம்பக்கூட முடியாது. பல ஆண்டுகளுக்கு முன் இந்தப் பகுதி விவசாய பூமியாய் இருந்த பொழுது எப்படி இருந்ததோ அதைப் பாதுகாத்து வரும் பூங்கா எம்மா ப்ரூஷ் பூங்கா. எம்மா ப்ரூஷ் என்பவர் தன் 86 ஏக்கர் நிலத்தை 1962ஆம் ஆண்டு சான் ஹோசே நகரத்து நன் கொடையாய்க் கொடுத்து, மரங்களும் மிருகங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பூங்காவில் பலவிதமான ஆரஞ்சு, எலுமிச்சை மரங்களும், கோழி, வான்கோழி, வாத்து என்று 50-100 பறவைகளும், மாடுகள், ஆடுகள் போன்ற விலங்குகளும் உள்ளன. பெரிய புல்வெளியும், உணவு உண்ண பல மேசைகளும், பிறந்தநாள் போன்ற கொண்டாட்டங்களுக்கு முன் அனுமதி பெற்று ஒதுக்கப்படும் கூட்டு சுற்றுலா மேசைகளும் உள்ளன. பூங்காவில் இருக்கும் வீடு மற்றும் சுற்றி உள்ள விவசாயக் கருவிகள், குழந்தைகள் தான் வாழும் இடத்தின் வரலாற்றை உணர்வதற்காகப் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
தொலைபேசி எண் 408 926 5555
பூங்கா நேரம் 8.30 - சூரியன் மறையும் வரை.www.a.sanjose.ca.us/regionalparks/pfp/.com
*****
பாலோ ஆல்டோ குழந்தைகள் உயிரியல் பூங்கா
பூங்கா, மியூஸியம், உயிரியல் பூங்கா மூன்றும் ஒரே இடத்தில் இருந்தால் கொண்டாட்டம் தானே! நின்கோண்டா பூங்காவில் குழந்தைகள் விளையாட சறுக்கு மரம், ஊஞ்சல், பெரிய புல்வெளி எல்லாம் உள்ளன. மணல் விளையாட்டு விளையாட கடல் மண்ணும் குழாயும் இருப்பது சின்னக் குழந்தைகளைக் குஷிப்படுத்தும். |
|
மியூஸியத்தை 'செத்த காலேஜ்' என்பார்கள். அசையாத, தூரத்திலிருந்து காண வேண்டிய பொருட்களே அதிகமாய் மியூஸியங்களில் இருப்பதால் அது பொருத்தமான பெயர்தான். குழந்தைகள் தான் பார்க்கும் பொருட்களோடு ஒன்றி, அவற்றைத் தொட்டுப் பார்த்து, முகர்ந்து, இழுத்து, ஆராய வேண்டும் என்பது இந்த மியூஸியத்தின் நோக்கம். உதாரணமாக டைனோசர் பொம்மைகளைக் குழந்தைகள் நகர்த்திப் பல பின்னணிகளில் வைத்துக் காமிரா மூலம் பார்க்கலாம். சிறிய கண்காட்சியாய் இருந்தாலும் 1 வயது முதல் உள்ள குழந்தைகள் ரசிக்கக்கூடிய வித்தியாசமான இடம் இது.
உயிரியல் பூங்காவில் பல மீன்கள், வாத்து, பட்டாம்பூச்சிகளுடன் பாம்பு, எலி, வவ்வால் போன்றவற்றையும் காணலாம். ‘இக்வானா‘ என்று சொல்லப்படும் ராட்சச பல்லியும் ‘பாப் காட்’ என்று அழைக்கப்படும் காட்டுப் பூனையும்கூட உள்ளன. பெரிய மிருகங்கள் இல்லாவிட்டாலும் அபூர்வமான மிருகங்கள் இருப்பதால் குழந்தைகள் அவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள நல்ல வாய்ப்பு இது.
ஜோஸ·பீன் ஓ ஷாரா என்பர் இதை 1969ஆம் ஆண்டு ஆரம்பித்தார். இப்போது பாலோ ஆல்டோ நகரத்தால் இது பராமரிக்கப்பட்டு வருகிறது.
தொலைபேசி எண் 650 329 2111 நேரம் செவ்வாய் முதல் சனி - 10 முதல் மாலை 5 மணி வரை ஞாயிறு - 1 முதல் 4 மணி வரை திங்கள் விடுமுறைwww.city.palo-alto.ca.us/ross/museum/visint.html
மீரா சிவக்குமார் |
|
|
More
தமிழ் சினிமாவில் பாட்டு வசந்தமே அருகில் வா..... ஏன்? தஞ்சை ஜில்லா வசனங்கள் சங்கீத ஸ்தித பிரஞ்ஞனுக்கும், பொன்விழா! கீதா பென்னட் பக்கம்
|
|
|
|
|
|
|