கத்திரிக்காய் ஸ்பெஷல் கத்தரிக்காய் தேங்காய் பால் கிரேவி கத்தரிக்காய் சாலட் கத்தரிக்காய் துவையல் கத்தரிக்காய் பருப்பு அடைத்த கறி கத்தரிக்காய் ரசவாங்கி கத்தரிக்காய் பஜ்ஜி கத்தரிக்காய் ·ப்ரிட்டர்ஸ் (Fritters) கத்தரிக்காய் கறி (ஒவனில்) கத்தரிக்காய் காஸரோல் (Casserole) கத்தரிக்காய் பாஸ்தா கத்தரிக்காய் மசாலா கிரேவி மாதுளம்பழம் மாதுளம் பழம் ஐஸ் க்ரீம்
|
|
|
தேவையான பொருட்கள்
விரை அதிகம் இல்லாத சிறிய கத்தரிக்காய் - 10 கடலைப் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன் தனியா (கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன் காய்ந்த சிவப்புமிளகாய் - 6 சீரகம் - 1 டீஸ்பூன் சமையல் எண்ணெய் - 1/8 கிண்ணம் கரம் மசாலா பவுடர் - 1 டீஸ்பூன் தேவையென்றால் இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன் மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன் உப்பு - தேவையான அளவு கொத்தமல்லி இலை - கொஞ்சம் |
|
செய்முறை
கடலைப் பருப்பு, தனியா(கொத்தமல்லி விரை), காய்ந்த சிவப்பு மிளகாய்,சீரகம் இவற்றை கொஞ்சம் எண்ணையில் நன்றாக வறுத்து எடுத்து ஆறிய பின்பு, மிக்ஸியில் ரவை போல் தண்ணீர் விடாமல் பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதனுடன் உப்பு, மஞ்சள் பொடி, கரம் மசாலா பவுடர், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கலந்து வைத்துக்கொள்ளவும். கத்தரிக்காயின் காம்பை நீக்கி விடவும்.
கத்தரிக்காய்களை தனித்தனித் துண்டங்களாக ஆகாமல் நெடுக்காக வெட்டவும். அதாவது அடி பாகத்தில் 1/4 " வெட்டுப்படக்கூடாது. இப்படிப் பிளந்த எல்லா கத்தரிக்காயினுள்ளும் மசாலா கலவையை அடைக்கவும்.
ஒரு வாயகன்ற அடி கனமான பாத்திரத்தில் சமையல் எண்ணெய் விட்டு காய்ந்த பின்பு எல்லா கத்தரிக்காயையும் ஒவ்வொன்றாகப் போட்டு, தீயை மிதமாக வைத்து வேகவிடவும். ஒரு தட்டைக் கொஞ்சம் இடைவெளி விட்டு வாணலியை மூடவும். கத்தரிக்காயை அவ்வப்போது திருப்பி விடவும். கத்தரிக்காய் முழுதாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். நன்றாக வெந்தபின்பு இறக்கி, கொத்தமல்லி இலைகளைச் சேர்க்கவும்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More