கலாலயாவின் மெல்லிசை விருந்து சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதித் தமிழ்மன்றம் - விமரிசையான முத்தமிழ் விழா
|
|
ஜெனி சந்திரசேகரின் பரதநாட்டியம் |
|
- |செப்டம்பர் 2003| |
|
|
|
தமிழ்நாடு அறக்கட்டளையின் சார்பில் ஆர்லாண்டோ - புளோரிடாவில் நடந்த தமிழர் திருவிழா-2003வின் ஒரு அங்கமாக ஜாக்சன்வில் ஜெனி சந்திரசேகரின் பரதநாட்டியம் மேடையேறிற்று. முதலில் ''கானமழை பொழிகின்றான் கண்ணன்'' என்ற பாடலுக்கு இவர் செய்த அபிநயங்கள் வந்திருந்தோரை யமுனா தீரத்துக்கே இட்டுச்சென்றன.
அடுத்து "நாதர் முடிமேல் இருக்கும் நல்ல பாம்பே" என்னும் பாடலுக்கு ஆடிய ஜனி சந்திரசேகர் சிவனுடைய தலையில், காதில், கழுத்தில், கைகளில் மற்றும் கங்கணத்தில் பாம்புகள் எப்படியெல்லாம் வீற்றிருக்கின்றன என்பதைக் கச்சிதமாகக் காட்டினார். பாம்பு நடனம் ஜெனி சந்திரசேகரின் முத்தாய்ப்ப்பு. இரண்டே பாடலுக்குத்தான் அன்று நேரமிருந்தது என்றாலும் வந்தோர் மனத்தில் இவர் நடனம் இடம் பிடித்தது என்பதில் சந்தேகமில்லை. |
|
- |
|
|
More
கலாலயாவின் மெல்லிசை விருந்து சான் ஃபிரான்சிஸ்கோ விரிகுடாப்பகுதித் தமிழ்மன்றம் - விமரிசையான முத்தமிழ் விழா
|
|
|
|
|
|
|