சுதந்திரம் பெற்றது தீதா கீதா பென்னெட் பக்கம்
|
|
கல்விக்கு ஆஷா: ஓடி ஓடித் திரட்டணும் |
|
- மீராசிவகுமார்|செப்டம்பர் 2003| |
|
|
|
பிரச்சனைகளைப் பார்த்ததும் ஓட்டம் எடுப்பவர்களுக்கு உலகத்தில் பஞ்சமில்லை. ஆனால் பிரச்சனையை தீர்ப்பதற்கு 26.2 மைல் ஓட தயாராய் இருப்பவர்களும் சிலர் இருக்கிறார்கள். 5 மாதங்களுக்கு முன் பேருந்தைப் பிடிக்கக்கூட ஓட யோசித்தவர்கள் சிலர், தூக்கத்தைத் தியாகம் செய்து விடியற்காலை எழுந்து, உடல் வலியை சகித்து கடும் ஓட்டப்பயிற்சி செய்யவும், தலா 2700 டாலர் நிதி திரட்டவும் ஒப்புக்கொண்ட இந்த நம்பிக்கை நட்சத்திரங்கள் யார்? இவர்கள் தீர்க்க முனைவது எதை?
இந்தியாவில் இருக்கும் குழந்தைகளுக்கு கல்வி எனும் நம்பிக்கை ஒளியை அளிக்கும் 'ஆஷா' (Asha for Education) என்ற சேவை நிறுவனத்தின் தொண்டர்கள் தான் இவர்கள். அக்டோபர் 12ஆம் தேதி கலிபோர்னியாவிலுள்ள லாங் பீச் மற்றும் கனடாவில் உள்ள விக்டோரியாவில் நடைபெற இருக்கும் ஓட்டப்பந்தயங்களில் ஆஷாவின் 'நம்பிக்கை நட்சத்திரங்கள்' கலந்து கொள்வதற்காக பயிற்சி செய்து வருகிறார்கள்.
கல்வியின் அடிப்படை முக்கியத்துவத்தை உணர்ந்து ஒரு குழுவை உருவாக்கி, ஆஷா தொண்டர்கள் 5 மாத காலம் பயிற்சி அளிக்கிறார்கள். நெடுந்தூர (மராத்தான்) ஓட்டத்தில் பங்கேற்பவர்கள் தங்குவதற்கும், ஆஷா ஏற்பாடு செய்கிறது. இதில் சேர்பவர்கள் ஆஷா நிறுவனத்திற்கு தலா 2700 டாலர் நன்கொடை அளிக்க வேண்டும்.
பொதுவாக அந்த பணத்தை பங்கேற்கும் வீரர்கள் தங்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் திரட்டுவார்கள்.
இந்தப் பயிற்சியில் தற்போது பங்கேற்கும் கார்த்திக் விஸ்வநாத் ''இந்த 5 மாதப் பயிற்சியின் காரணமாக ஏன் இப்படி பல உடல்வலிகளை அனுபவிக்கிறாய் என்று சிலர் கேட்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை உண்மையான வலியும் வேதனையும் படிக்க ஆசை இருந்தும் அதற்கான வழி இல்லாத குழந்தைகளின் முகத்தைப் பார்ப்பதுதான்'' என்கிறார். |
|
மற்றொரு நம்பிக்கை நட்சத்திரமான ராஜேஷ் பிலிப்போஸ் ''இந்தியாவில் உள்ள குழந்தை களுக்கு உதவும் அதே நேரத்தில் எனக்கு தேகப் பயிற்சியும் கிடைப்பதால் இந்த வாய்ப்பு ஒரே கல்லில் இரண்டு மாங்காயை அடிப்பது போல் இருக்கிறது'' என்கிறார்.
நாற்பது வயதில் உற்சாகத்துடன் பங்கேற்கும் அனுராதா சிங் ''இந்த பயிற்சி பற்றியும், ஆஷாவின் குறிக்கோள் பற்றியும் என்னைச் சுற்றி உள்ளவர்களிடமும், என் குழந்தைகளிடம் நான் சொல்வதன் மூலம் அவர்களும் இந்த நிகழ்ச்சியைப் பற்றி மட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள குழந்தைகளின் பல கஷ்டங்களைப் பற்றியும் தெரிந்து கொள்கிறார்கள்'' என்கிறார்.
பயிற்சி ஆசிரியர்களான ராஜேஷ் படேல் மற்றும் டோனி ·பாங் பயிற்சி பெறுபவர்களின் மனோதிடத்தையும், ஆஷாவின் குறிக்கோளில் அவர்களுக்கு இருக்கும் நம்பிக்கையையும், அதைச் செயலாக்கக் கொண்ட உறுதியையும் சுட்டிக்காட்டுகிறார்கள். 25 நட்சத்திரங்களுடன் 2000இல் ஆரம்பித்த இந்த பயிற்சியில் 47 பேர் 2001இலும் 52 பேர் 2002இலும் பங்கேற்றதும் 26.2 மைல் ஓட்டத்தை முழுவதுமாக ஓடி முடித்ததும் பயிற்சியின் சிறப்புக்குச் சான்றாகும்.
பொரு¡ளதாரச் சீரழிவு, அதனால் ஏற்பட்ட வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சனைகளினால் இந்த ஆண்டு நிதிதிரட்டுவது எளிதாய் இல்லை. இந்தியாவில் துவக்கப்பட்ட திட்டங்கள் பணம் இல்லாததால் நிறுத்தப் பட்டால் அதில் பங்கேற்றவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவதுடன், மற்ற திட்டங்களின் மேலும் நம்பிக்கை இழந்துவிடலாம். ஆஷா உறுப்பினர் நாராயணன் "தாய்நாட்டுக்கு நன்மை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் இங்குள்ள இந்தியர்களுக்கு ஆழமாக உள்ளது. அதனால் எங்கள் இலக்கை எட்டுவதோடு மட்டுமல்லாமல் சென்ற ஆண்டைப்போல் 130,000 டாலர் திரட்டுவோம் என்கிற நம்பிக்கை கலந்த ஆசை எனக்கு இருக்கிறது'' என்கிறார்.
இந்த நம்பிக்கை நட்சத்திரங்களைப் பற்றியும், ஆஷாவின் வரலாறு, ஆஷாவிடம் உதவி பெறும் இந்திய நிறுவனங்கள், செயல்படுத்தும் திட்டங்கள் பற்றியும் நிதி உதவி அளிப்பது, மற்ற வகையில் உதவுவது எப்படி போன்ற தகவல்களைக் காண: www.ashanet.org.
மீரா சிவா |
|
|
More
சுதந்திரம் பெற்றது தீதா கீதா பென்னெட் பக்கம்
|
|
|
|
|
|
|