மஹாத்மா மஹாத்மா தான் ஏண்டா வருது தீபாவளி புகையும் ஆறாவது விரல் கீதா பென்னட் பக்கம் தமிழில் எழுதுவது வேடிக்கையும் கூட! இவரைத் தெரிந்துகொள்ளுங்கள் : 'Mostly Tamil' சுதா அமெரிக்காவில் ஒய்.ஜி. மகேந்திரன்
|
|
மக்கள் நல மையம்: ஒரு வேண்டுகோள் |
|
- |அக்டோபர் 2003| |
|
|
|
சுமார் ஐம்பதாண்டுகளுக்கு முன் மேற்கு மாம்பலம் என்றாலே நினைவுக்கு வருவது: கொசு, தண்ணீர்ப் பற்றாக்குறை, மோசமான சாலைகள், மருத்துவ வசதியின்மை ஆகியவைதாம். அப்போதைய பொதுநல ஊழியரும் பத்திரிக்கையாளருமான எம்.சி என்றழைக்கப்பட்ட எம்.சி. சுப்பிரமணியன் ஏதேனும் செய்ய வேண்டுமென்று எண்ணினார். பெரும்பாலும் ஏழைகள் வாழ்ந்து வந்த இப்பகுதியில் எளிய மருத்துவமனையை Public Health Centre என்ற பெயரில் ஒரு குடிசையில் துவங்கினார். 1953ஆம் ஆண்டு செப்டம்பரில் இராஜாஜி அவர்கள் ஒரு கவுரவ மருத்துவருடன் துவக்கி வைத்தார். பின்னர் பல நல்ல உள்ளங்களின் நன்கொடையால் பல கட்டிடங்கள் கட்டுவதும், மருத்துவக் கருவிகள் வாங்குவதும் சாத்தியமாயிற்று.
இன்று இம்மருத்துவமனையில் 120 படுக்கைகளும் 20 தனி அறைகளும் உள்ளன. மருத்துவத்துறையில் உள்ள எல்லாப் பிரிவுகளும் இங்கு உள்ளன. ஊதியம் பெறும் மருத்துவர்கள் 20 பேரும், மற்ற ஊழியர்கள் 120 பேரும் பணிபுரிகின்றார்கள். மேலும் அறுவை மருத்துவர்களும், கண், பல், மூக்கு, காது, தொண்டை, நரம்பு, சிறுநீரகம் போன்ற உறுப்புக்களில் வரும் நோய்களைத் தீர்ப்பதில் வல்ல மருத்துவர்கள் 36 பேரும் கவுரவ மருத்துவர்களாகப் பணிபுரிகின்றனர். மேலும் பொதுநலத் தொண்டர்கள் 15 பேர் பணிபுரிகின்றனர். தன்னலமின்றி இவ்வாறு பலர் பணி புரிவதால் மருத்துவமனையின் செலவு ஓரளவு குறைவாக உள்ளது. எனவேதான் இலாப நோக்கம் இன்றி மக்களுக்கு மருத்துவத் தொண்டு செய்வது சாத்தியமாக இருக்கிறது. சென்னையிலுள்ள எல்லா மருத்துவமனைகளிலும் இங்குதான் கட்டணம் குறைவானது என இதன் நிர்வாகிகள் பெருமையோடு கூறுகின்றனர்.
"தரமான மருத்துவ வசதிகளைத் தொடர்ந்து கொடுக்க இன்னும் சில மருத்துவக் கருவிகளும் பொறிகளும் மற்ற வசதிகளும் ஏற்பாடு செய்யவேண்டியிருக்கிறது. ஆகவே உயர்ந்த உள்ளம் பெற்ற உங்களிடம் பண உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என்று தென்றல் வாசகர்களுக்கு இம்மருத்துவமனையின் துணைத்தலைவர் கு. இராமச்சந்திரன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் அக்டோபர் 20 வரை அமெரிக்காவில் இருப்பார். உங்கள் நன்கொடைக் காசோலையை Public Health Centre என்ற பெயருக்கு கீழே குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.
அக்டோபர் 20 வரை மட்டும்:
K. Ramachandran, 2231 Southern Circle, Carrollton, TX 75006, USA. |
|
எப்போதும் அனுப்ப:
Public Health Center, 114 Lakeview Road, West Mambalam, Chennai - 600033, Tamil Nadu, India.
(ஹிந்து நாளிதழில் வந்த கட்டுரை பார்க்க: http://www.hinduonnet.com/thehindu/mp/2003/02/04/stories 2003020400150300.htm) |
|
|
More
மஹாத்மா மஹாத்மா தான் ஏண்டா வருது தீபாவளி புகையும் ஆறாவது விரல் கீதா பென்னட் பக்கம் தமிழில் எழுதுவது வேடிக்கையும் கூட! இவரைத் தெரிந்துகொள்ளுங்கள் : 'Mostly Tamil' சுதா அமெரிக்காவில் ஒய்.ஜி. மகேந்திரன்
|
|
|
|
|
|
|