பாரத விலாஸ் பாட்லக் பூசணிக்காய்க் கூட்டு ஆந்திர முனகாக்கு வேப்புடு (முருங்கைக்கீரைக் கறி) பெடீ(ட்) ஔபே(ன்) (ப்ரென்ச் மொழியில் - சிறிய அழகிய ரொட்டி) காய்கறி இஷ்ட்டு தயாரிக்க (Vegetable Stew) அக்கி (அரிசி) ரொட்டி
|
|
|
தேவையான பொருட்கள்
பச்சரிசி - 2 கிண்ணம் தேங்காய்த் துருவல் - 4 கிண்ணம் வடித்த சாதம் - 1 கிண்ணம் யீஸ்ட் - 1 சிட்டிகை (தேவையானால்) - இளநீரிலோ, சுடுநீரிலோ ஊற வைக்கவும். உப்பு - சுவைக்கேற்ப சர்க்கரை - சுவைக்கேற்ப |
|
செய்முறை
பச்சரிசியை 4 - 5 மணிநேரம் ஊறவைத்து, நீரை வடித்து விட்டு, தேங்காய்த் துருவலுடனும், வடித்த சாதத்துடனும் கூழ் பதத்தில் அரைத்துக் கொள்ளவும். தண்ணீருக்குப் பதில் அரைப்பதற்கு இளநீரைப் பயன்படுத்தினால் அப்பம் பொலபொலவென்று மிருதுவாகவும் இருக்கும், சுவையும் கூடும். யீஸ்ட்டை இதனுடன் சேர்த்துக் கலக்கவும். உப்பு, சர்க்கரை சேர்த்து, அறையின் வெப்பச் சூழலில் 6 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
வாணலியைச் சூடாக்கி, 1/2 கிண்ணம் அரைத்த மாவை ஊற்றி உடனே வாணலியைக் கவனமாகச் சுழற்றவும். மெலிதாகப் பக்கவாட்டிலும் தடியாக அடிப்பாகத்திலும் மாவு படர வேண்டும்.
அப்பத்தை மூடி மிதமான சூட்டில் 3 நிமிடம் வைக்கவும். நன்றாக ஊறிய மாவாயிருந்தால் அப்பம் முழுவதும் சிறு சிறு ஓட்டைகள் உண்டாகியிருக்கும். ஓரங்கள் பொன்னிறமாகவும் கரகரப்பாகவும் இருக்க வேண்டும். நடு பாகம் மிருதுவாக இருக்க வேண்டும். இப்பொழுது வாணலியிலிருந்து அப்பம் சுலபமாக எடுக்க வரும்.
உமா வேங்கடராமன் |
|
|
More
பாரத விலாஸ் பாட்லக் பூசணிக்காய்க் கூட்டு ஆந்திர முனகாக்கு வேப்புடு (முருங்கைக்கீரைக் கறி) பெடீ(ட்) ஔபே(ன்) (ப்ரென்ச் மொழியில் - சிறிய அழகிய ரொட்டி) காய்கறி இஷ்ட்டு தயாரிக்க (Vegetable Stew) அக்கி (அரிசி) ரொட்டி
|
|
|
|
|
|
|