Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிறப்புப் பார்வை
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நிதி அறிவோம் | நூல் அறிமுகம் | ஜோக்ஸ் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
நடந்தவை
Tamil Unicode / English Search
நிகழ்வுகள் - நடந்தவை
சிகாகோவில் தியாகராஜ உற்சவம்
சல்மாவுடன் ஒரு சந்திப்பு
தரங் இசைப் பள்ளி ஆண்டுவிழா
கலிஃபோர்னியா தமிழ்க் கழகம் 2007 ஆண்டுவிழா
ஹூஸ்டன் பாரதி கலை மன்றம் நாட்டிய, இசை விருந்து
இட்ஸ் டி·ப் வானொலியின் 'சங்கமம்'
புஷ்பாஞ்சலியின் பதினோராம் ஆண்டு விழா
பாலம் - தமிழ்ப் பலகை மாநாடு - 2007
டொரான்டோ அறுமுகனுக்கு தங்கப் பாமாலை
டொரான்டோவில் இயல் விருது விழா
ஹூஸ்டன் தமிழ்ப்பள்ளி ஆண்டுவிழா
- கரு. மாணிக்கவாசகம்|ஜூலை 2007|
Share:
Click Here Enlargeமே 12, 2007 அன்று ஹூஸ்டன் தமிழ்ப் பள்ளியின் ஆறாம் ஆண்டுவிழா மீனாட்சி திருக்கோயில் கல்யாண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இப்பள்ளியை ஹூஸ்டன் பாரதி கலை மன்றம் நடத்தி வருகிறது. மாணவ மாணவியரின் தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கியது. பள்ளி ஒருங்கிணைப்பாளர் இரா. கோபால கிருஷ்ணன் வரவேற்புரை வழங்கினார். விழாவில் சுமார் 100 குழந்தைகள் பங்குபெற்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. பாட்டு, நகைச்சுவை, நடனம், நாடகம் என முத்தமிழ் விருந்து படைத்தனர். 'அ.வி. டி.வி' என்னும் கற்பனை நிகழ்ச்சியில் செய்திகள், துணுக்குகள், பாடல், விளம்பரம் என முழு நகைச்சுவையுடன் இரு மாணவர்கள் தொகுத்து வழங்கினர். பல்வேறு திறமைகளை வெளிக்கொணர்ந்த 'அசத்தப்போவது யாரு', சென்னைத்தமிழ், மதுரைத்தமிழ், கோவைத் தமிழ் என பலவகைத் தமிழ் துள்ளி விளையாடிய 'இம்சை அரசிகள்' என்னும் நாடகம், 1330 குறட்பாக்களையும் எவ் வரிசையிலும் ஒப்பிக்கும் திறன் படைத்த ஆஸ்டின் நகரைச் சேர்ந்த மாணவி காவியா வழங்கிய திருக்குறள் பற்றிய உரை ஆகிய முத்தான நிகழ்ச்சிகளுடன் விழா களை கட்டியது.
நிகழ்ச்சியின் இடையே அடுத்த ஆண்டின் ஒருங்கிணைப்பாளர் தமிழ் கணேசன், பாரதி கலை மன்றத் தலைவி பத்மினி ரெங்கநாதன் இருவரும் தமிழ்ப்பள்ளியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து உரையாற்றினர். பத்மினி தமது உரையில் ஹூஸ்டன் பொதுநூலகம் ஏராளமான தமிழ் நூல்களை வாங்கி வைக்க ஒப்புக்கொண்டிருப்பதாகக் கூறினார். சிறப்பு விருந்தினர்களாக முனைவர் இளங்கோவனும் அவரது துணைவியார் முனைவர் சரோஜா வும் சிகாகோவிலிருந்து வந்திருந்தனர். இளங்கோவன் தனது உரையில், திருக் குறளை மனப்பாடம் செய்வதோடல்லாமல், வாழ்க்கையிலும் பின்பற்ற வேண்டும் என்று குறிப்பிட்டு, சில குழந்தைகளை மேடைக்கு அழைத்து உறுதிமொழி எடுத்துக்கொள்ளச் செய்தார். பின்னர் போட்டியில் வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு சரோஜா அவர்கள் பரிசுகள் வழங்கினார். நன்றி உரையுடன் விழா இனிதே நிறைவுற்றது.

கரு. மாணிக்கவாசகம்,
ஹூஸ்டன்
More

சிகாகோவில் தியாகராஜ உற்சவம்
சல்மாவுடன் ஒரு சந்திப்பு
தரங் இசைப் பள்ளி ஆண்டுவிழா
கலிஃபோர்னியா தமிழ்க் கழகம் 2007 ஆண்டுவிழா
ஹூஸ்டன் பாரதி கலை மன்றம் நாட்டிய, இசை விருந்து
இட்ஸ் டி·ப் வானொலியின் 'சங்கமம்'
புஷ்பாஞ்சலியின் பதினோராம் ஆண்டு விழா
பாலம் - தமிழ்ப் பலகை மாநாடு - 2007
டொரான்டோ அறுமுகனுக்கு தங்கப் பாமாலை
டொரான்டோவில் இயல் விருது விழா
Share: 




© Copyright 2020 Tamilonline