காளான் சமையல் காளான் பூண்டு வதக்கல் காளான் சீஸ் டோஸ்ட் காளான் கறி காளான் தம் ஆலு
|
|
|
தேவையான பொருட்கள்
காளான் - 1 கிண்ணம் வெங்காயம் - 2 தக்காளி - 2 பூண்டு - 4 பல் பச்சை மிளகாய் - 4 இஞ்சி - சிறு துண்டு மஞ்சள்தூள் - 1 தேக்கரண்டி மல்லித்தூள் - 1 தேக்கரண்டி சோம்பு (தேவையானால்) - 1 தேக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி கறிவேப்பிலை - சிறிது உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - சிறிதளவு |
|
செய்முறை
தக்காளி, காளான் ஆகியவற்றை மிக்சியில் அரைத்துக் கொள்ளவும். பூண்டு, பச்சைமிளகாய், சோம்பு, சீரகம், வெங்காயம், மல்லித்தூள் இவற்றை மிக்சியில் அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொள்ளவும். அரைத்து வைத்துள்ள பூண்டு, மிளகாய் விழுதைப் போட்டு வதக்கி, காளான் தக்காளி விழுதையும் போட்டு, உப்பு சேர்த்துப் பொன்னிறமாய் வதக்கி எடுக்கவும்.
தேவையானால் மேலாக எண்ணெய் விட்டுக் கிளறி இறக்கவும். மிகச் சுவையான தொக்கு போன்ற ஒரு சட்னி.
தங்கம் ராமசாமி |
|
|
More
காளான் சமையல் காளான் பூண்டு வதக்கல் காளான் சீஸ் டோஸ்ட் காளான் கறி காளான் தம் ஆலு
|
|
|
|
|
|
|