காளான் சமையல் காளான் பூண்டு வதக்கல் காளான் சீஸ் டோஸ்ட் காளான் சட்னி காளான் தம் ஆலு
|
|
|
தேவையான பொருட்கள்
காளான் - 1 கிண்ணம் தேங்காய்த் துருவல் - 1 மூடி இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி சீரகம் - 1 தேக்கரண்டி வெங்காயம் - 2 பச்சை மிளகாய் - 2 தனியாப் பொடி - 3 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி உப்பு - தேவைக்கேற்ப எண்ணெய் - சிறிதளவு |
|
செய்முறை
தேங்காய், இஞ்சி, பூண்டு, சீரகம் ஆகியவற்றை அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய்விட்டு வெங்காயத் தைக் கொஞ்சம் வதக்கி அத்துடன் அரைத்த கலவை, காளான் துண்டங்கள், மல்லிப்பொடி, மஞ்சள்தூள், பச்சைமிளகாய் போட்டு வதக்கி ஒரு கிண்ணம் தண்ணீர், உப்பு போட்டு மூடிக் கொதிக்க வைக்கவும். நன்றாக நீர் வற்றிச் சுருண்டு வந்ததும் இறக்கிவிடவும். காளானிலிருந்து எப்போதும் தண்ணீர் பிரிந்து வரும் என்பதை மறக்க வேண்டாம். நீர் வற்றியதும் இறக்கவும்.
தங்கம் ராமசாமி |
|
|
More
காளான் சமையல் காளான் பூண்டு வதக்கல் காளான் சீஸ் டோஸ்ட் காளான் சட்னி காளான் தம் ஆலு
|
|
|
|
|
|
|