டோஃபூ டோஃபூ பொடிமாஸ் வாழை ஸ்ட்ராபெரி டோஃபூ ஸ்மூதி பேக் செய்த டோஃபூ
|
|
|
தேவையான பொருட்கள்
டோஃபூ (firm) - 8 அவுன்ஸ் மைதாமாவு - 1 கிண்ணம் உப்பு - தேவையான அளவு மிளகுப் பொடி \ மிளகாய் பொடி - 1 தேக்கரண்டி பேகிங் பவுடர் - 1/2 தேக்கரண்டி பால் - 1/2 கிண்ணம் பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய் |
|
செய்முறை
டோஃபூவை தேவையான அளவிற்கு துண்டங்களாக வெட்டி வைத்துக் கொள்ளவும். மைதாமாவு, உப்பு, மிளகுப் பொடி அல்லது மிளகாய்ப் பொடி, பேகிங் பவுடர் ஆகிய பொருட்களை நன்றாகக் கலந்து பின் பால் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கட்டி இல்லாமல் கரைத்து வைத்துக் கொள்ளவும். தேவையானால் சிறிது தண்ணீரும் சேர்த்துக் கொள்ளலாம்.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு நன்கு காய்ந்ததும் கரைத்த மாவில் ஒவ்வொரு டோஃபூ துண்டமாக நன்றாகத் தோய்த்து எண்ணெயில் போட்டு இரண்டு புறமும் பொன்னிறமாகப் பொரித்து எடுத்து வடிகட்டியில் வைத்துள்ள காகித டவலில் மீது போட்டு அதிலுள்ள அதிக எண்ணெயை நீக்கவும். ஏதாவது ஒரு காரச் சட்னி அல்லது தக்காளி சாஸுடன் இதை சாப்பிடலாம்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
டோஃபூ டோஃபூ பொடிமாஸ் வாழை ஸ்ட்ராபெரி டோஃபூ ஸ்மூதி பேக் செய்த டோஃபூ
|
|
|
|
|
|
|