டோஃபூ டோஃபூ பொடிமாஸ் வாழை ஸ்ட்ராபெரி டோஃபூ ஸ்மூதி டொஃபூ ஃப்ரிட்டர்ஸ்
|
|
|
தேவையான பொருட்கள்
கடினமான (firm) டோஃபூ - 8 அவுன்ஸ் சோய் சாஸ் - 2 மேசைக்கரண்டி சோளமாவு அல்லது மைதாமாவு - 1/4 கிண்ணம் கரம் மசாலாத் தூள் - 1 தேக்கரண்டி மிளகாய்ப் பொடி - 1 தேக்கரண்டி பூண்டு இஞ்சி விழுது - 1/4 தேக்கரண்டி |
|
செய்முறை
ஓவனை (oven) 375 டிகிரி ·பாரன் ஹீட்டிற்கு சூடு படுத்திக் கொள்ளவும். டோஃபூவை 1' சதுரத்திற்கு துண்டங்களாக வெட்டி வைத்துக்கொள்ளவும். சோய் சாஸையும் பூண்டு இஞ்சி கலவையும் ஒரு தட்டில் போட்டு நன்றாகக் கலந்து அதில் டோஃபூ துண்டங்களைப் பிரட்டி எடுக்கவும். ஊறவைக்கக் கூடாது. இன்னொரு தட்டில் சோளமாவு அல்லது மைதாமாவு, கரம் மசாலாத் தூள், மிளகாய்ப் பொடி இவற்றைக் கலந்து வைத்துக்கொள்ளவும்.
எல்லா டோஃபூ துண்டங்களையும் இந்த மாவில் எல்லாப் புறமும் படும்படியாக நன்றாக ஒத்தி எடுத்து எண்ணெய் தடவிய குக்கீ சுடும் தட்டில் ஒவ்வொன்றாக இடைவெளி விட்டு அடுக்கவும். குறைந்த்து 15 மிடங்கள் பேக் செய்யவேண்டும்.
பின் வெளியில் எடுத்து தக்காளி சாஸ¤டன் சூடாகச் சாப்பிடச் சுவையோ சுவை.
பின்குறிப்பு
சோயா சாஸில் உப்பு இருப்பதால் தனியாக உப்பு சேர்க்க தேவையில்லை.
பேக் செய்யும் நேரம் அடிக்கடி செய்யும் போது பழகிவிடும். இது அவரவர் ஓவனையும் பொறுத்தது.
பேக் செய்வதற்குப் பதில் எண்ணெயில் பொரித்தும் எடுக்கலாம். பொரிக்கும் போது அடிக்கடி கரண்டியால் துண்டங்களைப் பிரட்டிக் கொடுக்க வேண்டும். எல்லாப்புறமும் பொன்னிறமான பின்பு எடுத்து காகித டவலில் வைத்து அதிக எண்ணெயை நீக்கிய பின் சாப்பிடலாம்.
தனியாக டோஃபூ துண்டங்களைப் பொரித்து எந்த மாதிரியான கிரேவியிலும் நாம் பன்னீர் கட்டிகளை போடுவது போல போடலாம்.
சரஸ்வதி தியாகராஜன் |
|
|
More
டோஃபூ டோஃபூ பொடிமாஸ் வாழை ஸ்ட்ராபெரி டோஃபூ ஸ்மூதி டொஃபூ ஃப்ரிட்டர்ஸ்
|
|
|
|
|
|
|